நிலவில் 14 நாட்கள்.. சந்திரயான் விண்கலத்தின் ரோவர் செய்யப்போகும் மொத்த சம்பவமும் இதுதான்
பெங்களூர்: நிலவில் கால் பதித்துள்ள சந்திரயான் 3 விண்கலத்தின் பிரக்யான் ரோவர், 14 நாட்கள் அங்கு ஆய்வு செய்ய உள்ளது. நிலவின் மேற்பரப்பில் என்ன மாதிரியான ஆய்வுகளை சந்திரயான் 3 மேற்கொள்ள உள்ளது என்பதை இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளார்.
பூமியின் ஒரே துணைக்கோளான நிலவில் என்னதான் இருக்கிறது.. அதில், உயிர்கள் வாழ சாத்தியம் இருக்கிறதா? என விஞ்ஞானிகள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். நிலவில் மனிதன் காலடி வைத்து விட்டாலும் கூட, அங்கு இருப்பவற்றை இன்னும் முழுமையாக ஆய்வு செய்ய முடியவில்லை. நிலவு குறித்த ஆராய்ச்சியில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு இணையாக இந்தியாவும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

அந்த வகையில், இதுவரை எந்த நாடும் ஆய்வு செய்யாத நிலவின் தென் துருவ பகுதியில் ஆய்வு செய்ய இந்தியா திட்டமிட்டது. இதற்காக கடந்த 2019 ஆம் ஆண்டு விண்ணுக்கு அனுப்பப்பட்ட சந்திரயான் 2 விண்கலம் சற்று பின்னடைவை சந்தித்தது. கடைசி கட்டத்தில் நிலவில் தரையிறங்குவதற்கு முன்பாக லேண்டர் நிலவில் விழுந்து நொறுங்கியது. இந்த தவறை படிப்பினையாக கொண்ட இஸ்ரோ சந்திரயான் 3 விண்கலம் மூலமாக இந்தியாவின் லட்சிய கனவை சாதித்து காட்டியது.
நிலவின் தென் துருவத்தில் நேற்று முதல் முறையாக விக்ரம் லேண்டரை இறக்கியது. தற்போது லேண்டரில் இருந்து வெளியே வந்த பிரக்யான் ரோவர் நிலவில் தென் துருவத்தில் ஆய்வு மேற்கொள்ள உள்ளது. நிலவின் தரைப்பகுதியில் உருண்டோடி ஆய்வு பணிகளை தொடங்கி இருக்கிறது. தொடர்ந்து 14 நாட்கள் நிலவின் தரைப்பகுதியில் ஆய்வுகளை ரோவர் மேற்கொள்ள உள்ளது. நிலவின் மண் தன்மை, அங்குள்ள சூழல் உள்ளிட்டவை குறித்து ஆராய இருக்கிறது.
பூமியின் நாள் படி 14 நாட்கள் என்றாலும் நிலவில் அது ஒருநாள் தான். எனவே இந்த ஒருநாளில் ரோவர் தனது பணிகளை முடித்து விடும். நிலவில் சுற்றி வரும் ரோவர் என்ன மாதிரியான பணிகளில் ஈடுபடும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறிய விவரம் வருமாறு: பிரக்யான் ரோவரில் ஒன்றுக்கொன்று இணைந்த கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த கருவிகள், நிலவின் மேற்பரப்பில் காணப்படும் உட்கூறுகள் மற்றும் வேதியியல் கலவை ஆகியவை பற்றி ஆய்வு செய்யும். ரோவர் தனக்கு வரையறுக்கப்பட்ட பகுதி முழுவதுமாக சுற்றி வரும். முக்கியமாக ரோபோட்டிக் பாதை திட்டத்தை செயல்படுத்தும். இது நமது வரும் கால ஆய்வுகளுக்கும் திட்டங்களுக்கும் மிகுந்த பயனுள்ளதாக அமையும்" என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications