போட்டு தாக்கும் வெப்பம்.. கதறி தவிக்கும் பொதுமக்கள்.. பெங்களூரில் மழை எப்போது பெய்யும்!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடக தலைநகர் பெங்களூரில் மிகக் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு அடுத்து எப்போது மழை பெய்யும் என்பது குறித்து முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

நமது அண்டை மாநிலமான கர்நாடகாவின் தலைநகர் பெங்களூர் கடந்த சில காலமாகவே தண்ணீர் அல்லாமல் படாதபாடு படுகிறது. பருவமழை பொய்ததே இந்தளவுக்குத் தண்ணீர் பஞ்சம் ஏற்பட முக்கிய காரணமாக இருக்கிறது.

When Bangalore will get rain as the city is fighting with very hot summer and water shortage


தண்ணீர் பஞ்சம் அதிகமாக இருப்பதாக அதைச் சமாளிக்கப் பெங்களூர் நிர்வாகத்துடன் இணைந்து கர்நாடக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அங்கே நீர் பயன்பாட்டிற்கும் கூட கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

வெப்பம்: இப்படி சில வாரங்களாகவே தண்ணீர் பஞ்சம் மிகப் பெரிய பிரச்சினையாக மாறி இருக்கும் நிலையில், அங்கு வரலாறு காணாத அதீத வெப்பமும் வாட்டி வதைக்கிறது. இந்த ஓவர் வெப்பத்தால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியே வரக்கூடத் தயங்குகிறார்கள். கோடை வெப்பத்தால் பெங்களூர் எந்தளவுக்குப் பாதித்துள்ளது என்பதையே இது காட்டுகிறது.

இப்படி தண்ணீர் பஞ்சம் மற்றும் படுத்தி எடுக்கும் வெயிலால் பெங்களூர் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். கொஞ்சமாவது மழை பெய்தால் சற்று வெப்பம் குறையும் என்பதே அவர்கள் எதிர்பார்ப்பு. இந்த வாரம் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறிய நிலையில், இப்போது மழைக்கு மேலும் ஒரு வாரம் காத்திருக்க வேண்டும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை: கடந்த சில நாட்களாகக் கடலோர கர்நாடகா, வட உள் கர்நாடகா மற்றும் தெற்கு உள் கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தாலும் கூட பெங்களூரில் இன்னும் மழை பெய்யவில்லை. அங்கு பிதார் மாவட்டத்தில் உள்ள பால்கியில் அதிகபட்சமாக 4 செ.மீ மழை பெய்துள்ளது. இது தவிர உத்தர கன்னடா, பிதார், பெலகாவி, கடக் மற்றும் விஜயபுரா மாவட்டங்களில் ஓரளவுக்கு நல்ல மழை பெய்துள்ளது.

பெங்களூருக்கு மழை எப்போது: இது தொடர்பாகப் பெங்களூர் வானிலை மைய ஆய்வாளர் கூறுகையில், வெப்பச் சலனம் காரணமாக மாநிலத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இன்று திங்கள் முதல் மழை குறையும்... வடக்கு உள் கர்நாடகத்தில் மழைக்கு வாய்ப்பு குறைவு.. மாநிலம் முழுவதும் அடுத்த சில நாட்கள் வறண்ட வானிலை தான் இருக்கும். அதன் பின்னரே மீண்டும் மழை பெய்ய ஆரம்பிக்கும்.

இருப்பினும், இந்த வெப்ப சலன செல்கள் பெங்களூரை அடையவில்லை.. இதன் காரணமாகவே அடுத்த 2 நாட்களுக்கு மழை நிச்சயம் மழை பெய்யாது என்கிறோம். இருப்பினும், இன்னும் 4, 5 நாட்களில் பெங்களூரில் கொஞ்சம் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அதன் பிறகு கோலார், சிக்பள்ளாப்பூர், ராமநகரா, பெங்களூர் புறநகர் மற்றும் துமகுரு போன்ற தென்கிழக்கு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பில்லை" என்று அவர் தெரிவித்தார்.

இரவிலும் வெப்பம்: பகல் நேரம் மட்டுமின்றி இரவு நேரங்களிலும் கூட அங்கு வெப்பம் அதிகமாக இருக்கிறது. இப்படி இரவு நேரமும் வெப்பம் அதிகரிப்பதால் நிம்மதியாக உறங்கக்கூட முடியவில்லை என்று பொதுமக்கள் புலம்புகிறார்கள். மழை பெய்தால் தான் கொஞ்சம் வெப்பமும் குறையும் தண்ணீர் பற்றக்குறைக்கும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+