இனி பெங்களூர் டூ சென்னை ரொம்பவே ஈஸி.. புதிய எக்ஸ்பிரஸ் சாலை ரெடி! நிதின் கட்கரி சொன்ன மாஸ் தகவல்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: சென்னை மற்றும் பெங்களூர் நகரங்களை இணைக்கும் எக்ஸ்பிரஸ் சாலையை மத்திய அரசு அமைத்து வருகிறது. இதனிடையே இந்த முக்கிய சாலைப் பணிகள் எப்போது நிறைவடையும் என்பது குறித்தும் கர்நாடக, தமிழகப் பகுதிகளில் அமைக்கப்பட்டு வரும் சாலைப் பணிகள் குறித்தும் அமைச்சர் நிதின் கட்கரி சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் சார்பில் நாட்டின் முக்கிய நகரங்களுக்கு இடையே நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி சென்னை- பெங்களூர், பெங்களூர்- மைசூர் எனப் பல நெடுஞ்சாலை பணிகள் இப்போது நடைபெற்று வருகிறது.

இதனிடையே இந்த சாலைகளில் உள்ள சிறப்புகளை விளக்கிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, இவை எப்போது மக்கள் பயன்பாட்டிற்குத் தயாராகும் என்பது குறித்த தகவல்களையும் பகிர்ந்து கொண்டார்.

 அமைச்சர் நிதின் கட்கரி

அமைச்சர் நிதின் கட்கரி

பெங்களூரு-சென்னை எக்ஸ்பிரஸ் சாலை அடுத்த ஆண்டுக்குள் தயாராகிவிடும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். பெங்களூர் - மைசூரு இடையேயான 52 கிமீ க்ரீன்பில்ட் சீரமைப்பும் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்த திட்டத்திற்காக ரூ.9,000 கோடி செலவிடப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். 17,000 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு வரும் பெங்களூர் முதல் சென்னை வரையிலான எக்ஸ்பிரஸ் சாலை திட்டம் மார்ச் 2024க்குள் தயாராகிவிடும் என்று அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

 பெங்களூர்- மைசூர் நெடுஞ்சாலை

பெங்களூர்- மைசூர் நெடுஞ்சாலை


கர்நாடக மாநிலம் பெங்களூர் சென்ற அமைச்சர் நிதன் கட்கரி அங்கு நடைபெற்று வரும் சில நெடுஞ்சாலை பணிகளை அவர் பார்வையிட்டார்.. அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிதின் கட்கரி, "பிப்ரவரி 2023க்குள், பெங்களூர்- மைசூர் நெடுஞ்சாலைத் திட்டம் நிறைவடையும்.. சில பணிகள் நிலுவையில் இருப்பதைப் பார்த்தேன். இருப்பினும், அவை திட்டமிட்டபடி முடிக்கப்படும். இந்த சாலையைத் திறந்து வைக்க நாங்கள் பிரதமர் நரேந்திர மோடி அல்லது ஜனாதிபதி திரௌபதி முர்முவை அழைப்போம்.

 வெறும் 70 நிமிடங்கள்

வெறும் 70 நிமிடங்கள்

பெங்களூர்- மைசூர் இடையே அமைக்கப்படுவது 10 வழிச் சாலை திட்டமாகும்.. இதில் இருபுறமும் இரண்டு லேன்கள் நெடுஞ்சாலைக்கு அருகே உள்ள கிராம மக்கள் பயன்படுத்தலாம்.. மற்ற ஆறு லேன்கள் பெங்களூரிலிருந்து நேரடியாக மைசூருக்கு செல்லும். பெங்களூரு - மைசூரு திட்டம் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.. பெங்களூரு முதல் நிடகட்டா வரை.. மற்றொன்று நிடகட்டா முதல் மைசூர் வரை என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெங்களூருவிலிருந்து மைசூருவுக்கு வெறும் 70 நிமிடங்களில் செல்ல முடியும். இப்போது பெங்களூருவின் நெரிசலைக் குறைக்கும் வகையில் தொழில்துறையினரை மற்ற இடங்களுக்கு மாற வைப்பது மாநில அரசின் கடமையாகும்.

 பெங்களூரு-சென்னை எக்ஸ்பிரஸ் சாலை

பெங்களூரு-சென்னை எக்ஸ்பிரஸ் சாலை

இந்த நெடுஞ்சாலை கர்நாடகாவின் குடகு, தமிழ்நாட்டின் ஊட்டி மற்றும் கேரளாவுக்கு எளிதான அணுகலை வழங்கும்.. 285.3 கிமீ தொலைவில் பெங்களூரு-சென்னை எக்ஸ்பிரஸ் சாலை நான்கு வழிச்சாலையாக அமையும். இவை முக்கிய நகரங்கள் மற்றும் நெரிசலான பகுதிகள் வழியாகச் செல்வதைத் தவிர்ப்பதால் பயண நேரம் கணிசமாகக் குறையும். இந்த சாலை தொழில்துறையினருக்கு முக்கியமானதாக இருக்கும். ஏற்கனவே, 231 கி.மீ. தூரத்திற்குக் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மார்ச் 2024க்குள், இந்தத் திட்டத்தை முடிக்கத் திட்டமிட்டுள்ளோம்.

 பெங்களூரு சாட்டிலைட் சுற்று வட்டச் சாலை

பெங்களூரு சாட்டிலைட் சுற்று வட்டச் சாலை

இந்த திட்டத்தில் அம்ரித் மஹோத்சவ் பறவைகள் சரணாலயம் மற்றும் சில வனப்பகுதிகளிலும் செல்கிறது. இதற்குத் தேவையான அனுமதியை விரைவில் வழங்கக்கோரி கர்நாடக அரசிடம் கேட்டுள்ளேன். அதேபோல பெங்களூரு நெரிசலைக் குறைக்கும் வகையில் பாரத்மாலா திட்டத்தின் கீழ் ₹ 17,000 கோடி மதிப்பீட்டில் பெங்களூரு சாட்டிலைட் சுற்று வட்டச் சாலையையும் அமைக்க நடவடிக்கை எடுக்கிறோம். 288 கி.மீ சுற்றளவில் அமையும் இந்த சாலையில் 243 கி.மீ., கர்நாடகாவிலும், 45 கி.மீ., தமிழ்நாட்டிலும் அமைய உள்ளது. இந்த சாலையை புனே- பெங்களூர் நெடுஞ்சாலை, மும்பை- புனே எக்ஸ்பிரஸ் சாலையுடன் இணைப்போம். இதன் மூலம் பெங்களூர்- மும்பை இடையேயான பயண நேரம் 7 மணி நேரமாகக் குறையும்.

 புதிய திட்டங்கள்

புதிய திட்டங்கள்

நிலத்தை கையகப்படுத்துவது தான் எங்களுக்கு முக்கிய சவாலாக உள்ளது. நாட்டின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளை இணைக்க புதிய சாலை அமைக்கப்பட்டு வருகிறது. ரூ. 48,000 கோடி செலவில் அமைக்கப்படும் இந்த சாலை சூரத்தை நாசிக், அகமதுநகர், ஷோலாப்பூர் மற்றும் கர்னூலுடன் இணைக்கும். கர்னூலில் இருந்து சென்னை, ஐதராபாத் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய நகரங்களுக்குச் சாலை அமைக்கப்படும். இந்த சாலை குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு என ஆறு மாநிலங்கள் வழியாகச் செல்லும். மொத்த 1,270 கிமீ தூரத்தில் ரூ.48,000 கோடி செலவில் அமைக்கப்படும்.

 டிராபிக் சிக்கல்

டிராபிக் சிக்கல்

இது வடக்கு கர்நாடகாவில் உள்ள கலபுர்கி, யாத்கிர் மற்றும் ராய்ச்சூர் போன்ற வளரும் மாவட்டங்களுக்கு உதவும்.. மேலும், இது பயண தூரத்தை நன்கு குறைக்க உதவும். பெங்களூரில் நெரிசல் எந்தளவுக்கு அதிகமாக இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். இதைப் பெங்களூரு சாட்டிலைட் சுற்று வட்டச் சாலை நிச்சயம் குறைக்கும். அதேபோல கடப்பா வழியாக விஜயவாடா- பெங்களூர் இடையே ₹ 14,000 கோடி செலவில் புதிய சாலை அமைத்து வருகிறோம். இதற்கான ஒப்பந்தங்கள் அனைத்தும் இந்தாண்டு இறுதிக்குள் நிறைவடையும்" என்று அவர் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+