வெளியே மக்கள் பலியான நேரம்.. உள்ளே கொண்டாடிய கோலி & டீம்! தகவல் சொல்லப்பட்ட அந்த நொடி! என்ன நடந்தது?
பெங்களூர்: பெங்களூரில் மக்கள் பலியான அதே நேரம் உள்ளே சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி அணியினர் கொண்டாட்டங்களை நிறுத்தாமல் தொடர்ந்து உள்ளனர். கடைசியில் துணை முதல்வர் டிகே சிவகுமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட பின்பே கொண்டாட்டங்கள் நிறுத்தப்பட்டு உள்ளன.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் வெற்றி கொண்டாட்டத்தின்போது, மைதானத்திற்கு வெளியே ஏற்பட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர சம்பவம் குறித்து ஐபிஎல் தலைவர் அருண் துமல் கருத்து தெரிவித்துள்ளார்.

மைதானத்திற்கு வெளியே நடந்த துயரம் - அறியாத அதிகாரிகள்
பெங்களூருவில் உள்ள மைதானத்தில் ஆர்சிபி அணியின் வெற்றி விழா நடைபெற்றபோது, மைதானத்திற்கு வெளியே என்ன நடக்கிறது என்பது குறித்து உள்ளே இருந்த அதிகாரிகளுக்குத் தெரியாது என்று ஐபிஎல் தலைவர் அருண் துமல் தெரிவித்தார். சின்னசாமி மைதானம் மற்றும் விதான சௌதா வளாகத்தில் ஏற்பட்ட நெரிசல்களில் 11 பேர் உயிரிழந்த சில நிமிடங்களுக்கு பிறகே உள்ளே இருந்த வீரர்களுக்கு தெரியும்.
இதுகுறித்து அருண் துமல் கூறுகையில், "நாங்கள் நிலைமையைப் பற்றி அறிந்ததும், உடனடியாக நிர்வாகத்துடன் பேசினோம். அவர்கள் விழாவை விரைவாக முடிப்பதாக உறுதியளித்தனர். இது மிகவும் வருத்தமான மற்றும் துயரமான சம்பவம். கொண்டாட்டங்களை முடித்துக்கொள்வதாக ஆர்சிபி அதிகாரிகள் எனக்கு உறுதியளித்தனர்," என்றார்.

மேலும், மைதானத்திற்கு வெளியே ரசிகர்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து உள்ளே இருந்த அதிகாரிகளுக்குத் தெரியாது என்றும் அவர் குறிப்பிட்டார். "வெளியே என்ன நடந்தது என்று உள்ளே இருந்த அதிகாரிகளுக்குத் தெரியாது. அவர்கள் உள்ளே நிகழ்ச்சியை முடித்துக்கொள்வதாக எனக்கு உறுதியளித்தனர். இது மிகவும் வருத்தமான மற்றும் துயரமான சம்பவம். ஆழ்ந்த இரங்கல்கள். இந்த நிகழ்வை முறையாக திட்டமிட்டார்களா என்பது கூட எங்களுக்குத் தெரியாது. இவ்வளவு பெரிய கூட்டம் மைதானத்திற்கு எப்படி வந்தது?" என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
பெங்களூரில் மக்கள் பலியான அதே நேரம் உள்ளே சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி அணியினர் கொண்டாட்டங்களை நிறுத்தாமல் தொடர்ந்து உள்ளனர். கடைசியில் துணை முதல்வர் டிகே சிவகுமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட பின்பே கொண்டாட்டங்கள் நிறுத்தப்பட்டு உள்ளன. கோலி பேசிக்கொண்டு இருக்கும் போதே அவர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் கோலி பேச்சை பாதியில் நிறுத்திக்கொண்டார்.

மோசமான சம்பவம்
அனுமதிக்கப்பட்ட டிக்கெட் மற்றும் பாஸ் வைத்திருந்தவர்களை விட, அணியின் வீரர்களைக் காண ஏராளமான ரசிகர்கள் மைதானத்தில் திரண்டனர். அரசாங்கத்திற்கு அளிக்கப்பட்ட முதற்கட்ட தகவலின்படி, மைதான வளாகத்திற்கு அருகிலுள்ள வடிகால் மீது அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கான்கிரீட் தளம் மீது அதிகப்படியான மக்கள் நின்றதால் இடிந்து விழுந்தது. இதனால் ஏற்பட்ட பதற்றத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டன. இந்த சம்பவம் குறித்து அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் உயிரிழப்புகளை உறுதிப்படுத்தினார். நான் இப்போது எதையும் உறுதிப்படுத்த முடியாது. நான் மைதானத்திற்கு சென்று கொண்டிருக்கிறேன். நிறைய ரசிகர்கள் உணர்ச்சிவசமாக இருக்கிறார்கள்... நாங்கள் 5,000 வீரர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தி இருந்தோம், என்று அவர் பேட்டியில் தெரிவித்தார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications