சொல்லி அடித்த இந்தியா டுடே.. “க்ளியர் மெஜாரிட்டி” வேற யாருமே கணிக்காத ரிசல்ட்! அப்படியே வந்திருக்கே!
பெங்களூர் : ஒட்டுமொத்த நாடும் பெரிதும் எதிர்பார்த்த கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. பல கருத்துக்கணிப்பு நிறுவனங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டிருந்த நிலையில், இன்றைய ரிசல்ட், 'இந்தியா டுடே' வெளியிட்ட கணிப்போடு துல்லியமாகப் பொருந்திப் போகிறது.
கர்நாடகாவில் உள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 10ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆளும் பாஜக, காங்கிரஸ், ஜேடிஎஸ் ஆகிய கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவியது. 113 என்ற மேஜிக் நம்பரை யார் பெறுகிறார்களோ, அவர்கள்தான் கர்நாடகாவில் ஆட்சி அமைக்க முடியும்.

எக்ஸிட் போல் : ஆனால், தேர்தலுக்குப் பிந்தைய பெரும்பாலான கருத்துக்கணிப்புகளின்படி காங்கிரஸ் மற்றும் பாஜக பெரும்பான்மை சீட்களை எட்டுவதில் இழுபறி நிலவும் என்றே தெரிவிக்கப்பட்டது. இதனால், மஜத பெறும் சீட்களின் எண்ணிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.
இந்தியா டுடே, டுடேஸ் சாணக்யா, டைம்ஸ் நவ் - இடிஜி ஆகிய கருத்துக்கணிப்புகளில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதில் இந்தியா டுடே தான் அதிகபட்சமாக காங்கிரஸ் 140 சீட் வரை கைப்பற்றும் எனத் தெரிவித்திருந்தது.
தொங்கு சட்டசபை : ஏபிபி- சி வோட்டர், ஜீ நியூஸ் மேட்ரைஸ், இந்தியா டிவி - சி.என்.எக்ஸ், ரிபப்ளிக் டிவி PMARQ, டிவி 9 பாரத்வர்ஷ் உள்ளிட்டவற்றில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை நம்பரை எட்டுவதற்கு சிரமப்படும் என்றும் தனிப்பெரும் கட்சியாக அதிக சீட்களை காங்கிரஸ் கைப்பற்றும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதேசமயம், சுவர்ணா நியூஸ் - ஜன் கி பாத், நியூஸ் நேஷன் - சி.ஜி.எஸ், ராஜ்நீதி, போல்ஸ்ட்ராட் ஆகிய நிறுவனங்கள் வெளியிட்ட தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் கர்நாடகாவில் தொங்கு சட்டசபை அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. கடந்த முறை போலவே, இம்முறையும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி கிங் மேக்கராக உருவெடுப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
கணிப்புகளை மறுத்த தலைவர்கள் : அதேசமயம், இந்த எக்ஸிட் போல் முடிவுகளை தாங்கள் நம்பவில்லை என காங்கிரஸ் மற்றும் பாஜக என இருதரப்பு தலைவர்களுமே தெரிவித்தனர். தொங்கு சட்டசபை அமையாது, தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவோம் என காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்கள் கூறினர்.
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார், "இந்த எக்ஸிட் போல் நம்பர்களை நான் நம்பவில்லை. 146 இடங்களை கடப்போம் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்." என்றார். முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, "அறுதிப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்பதில் எனக்கு 200% நம்பிக்கை உள்ளது." என்றார்.
இன்றைய ரிசல்ட் : இந்நிலையில், பெரும்பாலான கருத்துக்கணிப்புகளை உடைத்து நொறுக்கி, காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பெறுகிறது. தற்போதைய நிலையில் காங்கிரஸ் கட்சி 134 சீட்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜக 64 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.
மஜத 22 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருப்பதால், மஜத தலைவர் குமாரசாமியின் கிங் மேக்கர் கனவு கலைந்துள்ளது. தொங்கு சட்டசபை அமையும் என்ற பெரும்பாலான கருத்துக்கணிப்புகளும் பொய்த்துப் போயுள்ளன.
அப்படியே பலித்த கணிப்பு : ஒட்டுமொத்தமாக, கர்நாடகா சட்டசபை தேர்தல் முடிவுகளை முன்கூட்டியே துல்லியமாக கணித்தது இந்தியா டுடே நிறுவனம் தான். இந்தியா டுடே நிறுவனம் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் எனக் கணித்திருந்தது. மேலும், எந்த கருத்துக்கணிப்பு நிறுவனமும் தெரிவிக்காத அளவில், அதாவது 140 சீட்கள் வரை காங்கிரஸ் வெல்லும் என்றும் கருத்துக்கணிப்பை வெளியிட்டிருந்தது.
India Today Exit polls
காங்கிரஸ் - 122-140
பாஜக - 62-80
மதச்சார்பற்ற ஜனதா தளம் - 20-25.
இந்தியா டுடேவின் கணிப்பு இன்றைய ரிசல்ட்டோடு கிட்டத்தட்ட துல்லியமாகப் பொருந்துகிறது.
தற்போதைய நிலவரம்
காங்கிரஸ் - 136
பாஜக - 64
மதச்சார்பற்ற ஜனதா தளம் - 20
-
முதலில் தமிழன், அப்புறம் தான் இந்து! மேலூர் பாஜகவை அதிரவிட்ட வார்த்தை.. பின்னணியில் விகே பாண்டியன்? -
ஆதவ் அர்ஜுனா மூலம் ‘ஜனநாயகன்’ படத்தை லீக் பண்ணிட்டு நாடகம்.. சிபிஐ விசாரணை கேட்க ரெடியா? பாயும் பாஜக -
ஜோசப் விஜய் முதலில் நல்ல குடும்பஸ்தனாக, கணவராக இருக்கணும்.. மீண்டும் தாக்கி பேசிய நயினார் -
முதல்வர் ஸ்டாலினின் தனிச் செயலர் உமாநாத் மீது நடவடிக்கை கோரி வழக்கு.. ஐகோர்ட் போட்ட உத்தரவு! -
அண்ணாமலையின் டெல்லி விசிட்.. ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்து கொடுத்த பாஜக தலைமை.. பின்னணி என்ன? -
துரந்தர் 2.. தமிழ்நாட்டில் தடை செய்ய கோரி வழக்கு தள்ளுபடி ஏன்.. ஐகோர்ட் தீர்ப்பு என்ன -
வானதி சீனிவாசன் ஐசியூவில் அனுமதி.. 3-4 நாட்கள் தொடர் சிகிச்சை தேவையாம்.. என்ன பிரச்சனை? -
மம்தாவை தூக்கி எறியும் பாஜக? ஸ்கெட்ச் போட்டு இறங்கிய அமித் ஷா.. மேற்கு வங்கத்தில் பரபர அரசியல் களம் -
வானதி சீனிவாசனுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. மருத்துவமனைக்கு ஓடிவந்த அண்ணாமலை..கோவை வடக்கில் ட்விஸ்ட் -
கந்தசாமியா.. பழனிசாமியா.. கன்ஃபியூஷ் ஆன அண்ணாமலை.. ஷாக்கான அதிமுக வேட்பாளர் -
பெண்களுக்கு மாதம் ₹3000.. வேலையில்லாத ஆண்களுக்கும் உதவி தொகை.. மம்தாவை வீழ்த்த அமித் ஷா மெகா பிளான் -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை












Click it and Unblock the Notifications