வலது கரத்தை வைத்தே கண்ணைக் குத்திய காங்கிரஸ்.. மண்ணைக் கவ்விய சிடி ரவி.. யார் இந்த தம்மையா?
பெங்களூர் : கர்நாடகாவில் எடியூரப்பா, பசவராஜ் பொம்மையை விடுத்து புதிய நபரை பாஜக முதலமைச்சர் ஆக்கப்போவதாக இருந்தால் அந்த லிஸ்ட்டில் இவரது பெயரும் நிச்சயம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட சி.டி.ரவி, தான் 19 ஆண்டுகளாக எம்.எல்.ஏவாக இருக்கும் தொகுதியிலேயே தோல்வியடைந்துள்ளார். அவரது ரைட் ஹேண்டாக செயல்பட்ட தம்மையாவை வைத்தே சிடி ரவியின் கண்ணைக் குத்தியுள்ளது காங்கிரஸ்.
தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளரும், பாஜகவின் தேசிய பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சிடி ரவி கர்நாடகா மாநிலம் சிக்மகளூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டார். 2004 முதல் நடைபெற்ற அத்தனை சட்டமன்றத் தேர்தல்களிலும் சிடி ரவி தான் இங்கு வெற்றி பெற்று வருகிறார்.

போதாக்குறைக்கு சிக்மகளூர் பாஜகவின் கோட்டையாக இருந்து வருகிறது. 2018ஆம் ஆண்டு சிக்மகளூர் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் சி.டி.ரவி 26,314 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸின் பி.எல்.சங்கரை தோற்கடித்து வெற்றி பெற்றார். இந்நிலையில் 5வது முறையாக வெற்றி பெற தீவிரமாக வேலை செய்தார் சிடி ரவி.
டிகே சிவகுமார் போட்ட ஸ்கெட்ச் : இந்நிலையில், தான் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் டிகே சிவகுமார் சிடி ரவிக்கு செக் வைக்கும் வகையில் ஒரு வேலையைச் செய்தார். கடந்த பிப்ரவரி மாதம், சிடி ரவிக்கு ரைட் ஹேண்டாக செயல்பட்ட முக்கியமான நிர்வாகியான தம்மையாவை பாஜகவில் இருந்து காங்கிரஸுக்கு இழுத்தார்.
எச்.டி.தம்மையா, பாஜகவில் சிக்மகளூர் மாவட்ட அமைப்பாளராக இருந்தார். எடியூரப்பாவிற்கு நெருக்கமானவர் என்பதோடு சி.டி.ரவிக்கும் வலது கை போலச் செயல்பட்டு வந்தார். லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த தம்மையாவுக்கு அப்பகுதியில் நல்ல செல்வாக்கு இருந்தது. இந்த தேர்தலில் தனக்கு சீட் கேட்ட நிலையில், பாஜக மாநில தலைமை அதற்கு மறுத்தது.
சொன்னபடியே : 17 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சிப் பணியாற்றி, பாஜகவில் பல்வேறு பதவிகளில் பணியாற்றிய தனக்கு தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு அளிக்காத நிலையில், கடுமையாக அதிருப்தி அடைந்து காங்கிரஸ் பக்கம் துண்டைப் போட்டார் தம்மையா.
வந்தால் சிக்மகளூர் டிக்கெட் உங்களுக்குத்தான் என டிகே சிவகுமார் வாக்குறுதி அளித்து தம்மையாவை கட்சியில் சேர்த்தார். சொன்னபடி, அவரையே சிக்மகளூர் தொகுதியில் சி.டி.ரவியை எதிர்த்துக் களமிறக்கியது காங்கிரஸ். சிடி ரவிக்கும் - அவரது முன்னாள் ரைட் ஹேண்டுக்கும் இடையேயான போட்டி சிக்மகளூர் தேர்தல் களத்தை தகிக்கச் செய்தது.

சொந்த மண்ணில் : இந்நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கையில் சிக்மகளூர் தொகுதியில் ஆரம்பம் முதலே பின்னடைவைச் சந்தித்து வந்தார் சிடி ரவி. முடிவில், சுமார் 7 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சிடி ரவியை மண்ணைக் கவ்வச் செய்து வெற்றி பெற்றுள்ளார் தம்மையா.
அதுமட்டுமல்லாமல், சிக்மகளூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 5 தொகுதிகளையும் காங்கிரஸ் கட்சி கைப்பற்றியுள்ளது. தேசிய அளவில் முக்கியமான பாஜக தலைவரான சி.டி.ரவி, தனது கோட்டையாகத் திகழ்ந்த சிக்மகளூரில் மண்ணைக் கவ்வியிருப்பது பாஜகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்?











Click it and Unblock the Notifications