தூண்டிலில் சிக்கிய "நிர்வாண பெண்கள்".. பண்ணையில் ஒரே பரபரப்பு.. பாதி உடம்பை காணோமாமே..!
பண்ணை குட்டையில் மிதந்து வந்துள்ளன 2 பெண்களின் சடலங்கள்
பெங்களூரு: மீன்பிடிக்க தூண்டில் போட்ட இளைஞனுக்கு பயங்கர ஷாக்.. காரணம், தூண்டிலில் மீனுக்கு பதிலாக நிர்வாண நிலையில் பெண்ணின் சடலம் வந்து நின்றது..!
கர்நாடக மாநிலம், மண்டியா மாவட்டம் பாண்டவபுரா தாலுகாவில் உள்ளது பேபி கிராமம்.. இந்த பேபி கிராமத்தில் ஒரு ஏரி இருக்கிறது.. அந்த ஏரிக்கு பக்கத்திலேயே ஒரு கால்வாயும் ஓடுகிறது.
இந்த கால்வாயில், ஒரு பெண்ணின் சடலம் ஒன்று மிதந்தபடியே வந்தது.. 30 வயதிருக்கும்.. நிர்வாண நிலையில் அந்த சடலம் மிதந்து வந்தது.. ஆனால், பெண்ணின் உடல் பாதியளவு மட்டுமே இருந்தது... அதாவது, இடுப்புக்கு கீழ் பகுதியை காணோம்.

குட்டையில் உடல்
துண்டாக வெட்டப்பட்டு இருந்தது.. மீதி பாதி எங்கே என்று தெரியவில்லை.. கால்வாயில் இப்படி ஒரு கோலத்தை பார்த்த பேபி கிராம மக்கள் அலறி அடித்து கொண்டு ஓடினார்கள்... இந்த சம்பவம் நடந்து கொஞ்ச நேரத்தில் இன்னொரு சம்பவம் நடந்தது.. ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா அரகெரே கிராமத்தை சேர்ந்தவர் சிக்க தேவராஜா.. இவர் ஒரு விவசாயி... இவருக்கு சொந்தமான நிலத்தில் பண்ணைக் குட்டை ஒன்று உள்ளது... இந்த குட்டையில் கிராம மக்கள் அடிக்கடி வந்து மீன்பிடிப்பார்கள்..

உடல்கள்
அந்த வகையில், ஒரு இளைஞர் வந்து, பண்ணை குட்டையில் மீன் பிடிப்பதற்காக தூண்டில் வீசினார்... ஆனால், தூண்டிலில் மீன் சிக்கவில்லை.. அதற்கு பதிலாக, பெண்ணின் நிர்வாண உடல் சிக்கி கொண்டது.. அந்த உடம்பும் பாதிதான் இருந்தது.. அதுவும் இடுப்புக்கு கீழ் துண்டிக்கப்பட்டு இருந்தது... ஆனால், இந்த பெண் வேறு.. 2 கிராமங்களிலும், 2 வேறு சடலங்களின் துண்டுகளை பார்த்து கதிகலங்கி போன, மாவட்ட கன்ட்ரோல் ரூமுக்கு தகவல் சொன்னார்கள்.. இதையடுத்து, பாண்டவபுரா மற்றும் அரகெரே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது...

பண்ணை குட்டை
உடனே சம்பந்தப்பட்ட 2 போலீஸ் ஸ்டேஷன் அதிகாரிகளும், போலீசாரும் 2 கிராமங்களிலும் குவிந்தனர். 2 இடங்களிலும் மிதந்து கிடந்த பெண்களின் பாதி, பாதி சடலங்களை கைப்பற்றினர்.. 2-வதாக மீட்கப்பட்ட பெண்ணுக்கு 40 வயதிருக்குமாம்.. இவர்கள் 2 பேருமே யார் என்று தெரியவில்லை.. ஆனால், ஒரே மாதிரி கொலை செய்யப்பட்டுள்ளனர்.. 2 துண்டுகளாக உடல்கள் வெட்டப்பட்டுள்ளன.. 2 பேரையும் ஏரி, குட்டையில் வீசப்பட்டுள்ளனர்.. கொலை செய்யப்பட்டதை பார்த்தால், நிச்சயம் இதில் சம்பந்தப்பட்டவர் சைக்கோ கொலையாளியாக இருக்கலாம் என்கிறார்கள்.

போஸ்ட் மார்ட்டம்
இப்போதைக்கு 2 பெண்களின் பாதியளவு உடல்கள் போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தால்தான், ஓரளவு உண்மை தெரியவரும்.. பாண்டவபுரா, அரகெரே போலீசார் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.. ஏற்கனவே குற்றப்பின்னணியில் உள்ள சைக்கோ நபர்களின் லிஸ்ட்களை எடுத்து ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர்.. அத்துடன் அந்த பெண்களின் மீதி பாதி உடல்களையும் தேடி கொண்டிருக்கிறார்கள்..

கட்டப்பட்ட கால்கள்
இந்த சடலங்களில் இன்னொரு ஒற்றுமையும் உள்ளதாம்.. இரு பெண்களின் சடலங்களிலும் கால்கள் இறுக்கமாக கட்டப்பட்டுள்ளதாம்.. அதற்கு பிறகுதான், இடுப்பு பகுதியை மட்டும் எடுத்து வீசியுள்ளனர்.. நிறைய சந்தேகங்களை இந்த இரட்டை கொலை எழுப்பி உள்ளதால், போலீசாருக்கு இது ஒரு சவாலாக இருக்கிறது.. கொலை செய்யப்பட்டுள்ள 2 பெண்களின் தலைபகுதிகளை கொலைக்காரர்கள் கையோடு எடுத்து சென்றார்கள்? அல்லது எங்கேயாவது வீசி சென்றார்களா? என்றும் தேடி கொண்டிருக்கிறார்கள். இந்த கொலை சம்பவம் மண்டியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
-
மே 28ல் முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா? காங்கிரஸ் தலைமை ஆபரையும் நிராகரித்தார்! -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விடைபெற்ற சித்தராமையா.. ராஜினாமா செய்த பின் உருக்கமான பதிவு -
அவ்வளவு தூரம் சொன்ன டெல்லி மேலிடம்.. "முடியவே முடியாது.." திட்டவட்டமாக மறுத்த சித்தராமையா.. ட்விஸ்ட் -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட் -
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
பெங்களூரில் புகுந்த உயிரை பறிக்கும் எபோலா? உகாண்டாவில் இருந்த பெண் மருத்துவமனையில் அனுமதி.. திக்திக்












Click it and Unblock the Notifications