Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தூண்டிலில் சிக்கிய 3 "நிர்வாண பெண்கள்".. பண்ணையில் மிதந்த "பாதி உடல்".. சீரியல் கில்லர் கைது: எப்படி

3 பெண்களை கொன்ற சீரியல் கில்லரை கர்நாடக போலீசார் கைது செய்தனர்

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: அடுத்தடுத்து 3 பெண்களை கொலை செய்த "சீரியல் கில்லர்" குற்றவாளியை மாண்டியா போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர். ஒரே மாதத்தில் இத்தனை கொலைகளை செய்துள்ளான் இந்த கொடூரன்.

சீரியல் கொலையாளியை மட்டுமல்லாமல் அவனது காதலியும், கொலைகளுக்கு உடந்தையாக இருந்த பெண்ணும் போலீஸ் பிடியில் சிக்கியுள்ளார்.

இந்த இருவரும் சேர்ந்து பெங்களூரு ஹெப்பகோடி, சித்ரதுர்காவில் உள்ள ஹொசதுர்கா மற்றும் சாம்ராஜ் நகர் ஆகிய இடங்களை சேர்ந்த 3 பெண்களைக் கொலை செய்துள்ளனர். கர்நாட
காவை சமீபத்தில் உலுக்கிய மிகப் பெரிய குற்றச்செயலாக இது பார்க்கப்படுகிறது.

 தூண்டிலில் சிக்கிய பெண்கள்

தூண்டிலில் சிக்கிய பெண்கள்

ஜுன் 7ம் தேதி மாண்டியாவின் பாண்டவபுரா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பேபி கேனாலில், ஒரு பெண்ணின் உடலும், சிடிஎஸ் கேனாலில் இன்னொரு பெண்ணின் உடலும் மிதந்தன... பேபி கேனால் எனப்படுவது பண்ணைப் பகுதி போல் உள்ள குட்டை என்கிறார்கள்.. ஒரு இளைஞர், இந்த பண்ணை குட்டையில் மீன் பிடிப்பதற்காக தூண்டில் வீசினார்... அப்போதுதான், மீன்களுக்கு பதிலாக, பெண்ணின் சடலம் சிக்கி கொண்டது.. அப்போது இந்த விஷயமே வெளியே தெரிய ஆரம்பித்து. அதிர்ச்சி அடைந்த மக்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.

 தனிப்படை

தனிப்படை

யார் அந்தப் பெண்கள் என்ற விசாரணை முடுக்கி விடப்பட்டது. ஆனால், அந்த பெண்களின் உடல் பாதியளவு மட்டுமே இருந்தது... அதாவது, இடுப்புக்கு கீழ் பகுதியை காணோம். இரு பெண்களின் உடலிலும் மேல் பாகம் துண்டிக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து மாண்டியா எஸ்பி யதீஷ் சொல்லும்போது, ஜுன் 7ம் தேதி இரு உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டன பிறகு, குற்றவாளிகளை பிடிக்க 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. கொலை செய்யப்பட்ட பெண்களின் முகங்கள் அடங்கிய 10,000 போஸ்டர்கள் அடிக்கப்பட்டு மாண்டியா மாவட்டம் முழுவதும் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டது.

 மிதந்த சடலம்

மிதந்த சடலம்

ஆனாலும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதையடுத்து சிசிடிவி படங்கள் மூலமும், காணாமல் போனோர் குறித்த புகார்களை வைத்தும் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டது. தீவிர முயற்சியின் பலனாக ஜூலை 7ம் தேதி சாம்ராஜ் நகரைச் சேர்ந்த ஒரு 32 வயதுப் பெண் காணாமல் போனது தொடர்பான புகார் குறித்த தகவல் கிடைத்தது. ஜூன் 5ம் தேதி அப்பெண் காணாமல் போனதாக புகாரில் சொல்லப்பட்டிருந்தது.. ஆனால் ஜுன் 3ம் தேதி முதலே அவர் காணாமல் போயுள்ளார். அவருக்கு பாண்டவபுராவை சேர்ந்த இன்னொரு பெண்ணுடன் தொடர்பு இருந்தது. அந்த பெண் பெங்களூரில் வசித்து வந்தார்.

 ஜோடி சிக்கியது

ஜோடி சிக்கியது

இந்த நிலையில் மே 2ம் தேதி பெங்களூர் ஹெப்பகோடியை சேர்ந்த, இன்னொரு பெண்ணும், மே 2ம் தேதி காணாமல் போனது தொடர்பான புகார் கிடைத்தது.. அவரது கணவர்தான் அந்த புகாரை தந்திருந்தார். அவருடன் தொடர்பில் இருந்த ஒரு ஆணின் பெயரையும் அவர் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து போலீஸாருக்கு சில துப்பு அடுத்தடுத்து கிடைத்தன.. அதை வைத்து தொப்பஸ்பேட்டையைச் சேர்ந்த ஒரு நபர் பிடிபட்டார்.. அவருடைய கூட்டாளியும் சிக்கினார்... இறுதியில் அவர்கள்தான் குற்றவாளிகள் என்று உறுதியாக தெரியவந்தது. இது தொடர்பாக நடந்த விசாரணையில் கிடைத்த தகவல்கள் இதுதான்:

 இரவில் கொலை

இரவில் கொலை

முதல் குற்றவாளி ஹெப்பகோடி பெண்ணை மே 1ம் தேதி பெங்களூரு ஆந்திரஹள்ளியில் உள்ள தன்னுடைய வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளான்... அதுவும் வேலை வாங்கித்தருவதாக சொல்லி கூப்பிட்டுள்ளான்.. வீட்டுக்கு வந்த பெண்ணுக்கு சாப்பாடு போட்டு, வீட்டிலேயே தங்கவும் வைத்துள்ளான். இரவில் அப்பெண்ணை கழுத்தை நெரித்து கொன்று அவர் அணிந்திருந்த நகையை எடுத்துக் கொண்டு போய், ரூ. 90,000க்கு விற்றுள்ளான். உடலை சித்ரதுர்காவுக்கு டூவீலரில் கொண்டு போய் சாலையோரம் இருந்த கால்வாயில் போட்டு விட்டு தலைமறைவாகி விட்டான்.

 கால்வாயில் சடலம்

கால்வாயில் சடலம்

அதேபோல 2வது பெண்ணை மே 30ம் தேதி மைசூர் மேத்தகஹள்ளிக்கு வரவைத்துக் கொலை செய்துள்ளான் இவரையும் வேலை வாங்கி தருவதாக சொல்லி அழைத்துள்ளான். கொலை செய்த பின்னர் உடலை வெட்டி கால்வாயில் போட்டுள்ளான்... 2 பைகளில் சடலங்களை போட்டு, அவைகளின் மேல், பூக்கள், இலை தழைகளை போட்டு நிரப்பி அதை பண்ணை பக்கம் உள்ள கால்வாயில் போட்டுள்ளான்... ஒரு உடல் பகுதியை காவிரி ஆற்றிலும், இன்னொரு உடல் பாகங்களை சிடிஎஸ் கால்வாயிலும் போட்டுள்ளான்... அந்தப் பெண்ணிடமிருந்து ரூ. 25,000 மதிப்புள்ள நகைகளை அபகரித்துள்ளான்.

 பண்ணையில் பெண்

பண்ணையில் பெண்

3வது பெண் 2வது குற்றவாளிக்குத் தெரிந்தவர் ஆவார்... இவரை ஜூன் 3ம் தேதி மைசூருக்கு வரவழைத்துள்ளனர். அவரையும் கொலை செய்து உடலை 2 துண்டாக வெட்டி 2 பைககளில் போட்டுள்ளனர்... ஒரு பையை, காட்டேரி கால்வாயிலும், இன்னொரு பையை பேபி கேனால் பகுதியிலும் போட்டுள்ளனர்... இவரிடமிருந்து திருடிய நகைகளை ரூ. 90,000க்கு விற்றுள்ளனர்...

"கொலை லிஸ்ட்"

இதை விட அதிர்ச்சிகரமான ஒரு தகவல் உள்ளது. இத்தனை கொலைகளையும் செய்தது முதல் குற்றவாளிதான். தனக்கு துணையாக இருந்த காதலியையும் இவன் கொலை செய்யத் திட்டமிட்டிருந்தான். காரணம் 3 கொலைகளையும் நேரில் பார்த்த சாட்சி இவர்தான் என்பதால் இவரைக் கொலை செய்யவும் திட்டமிட்டிருந்தான். இதுதவிர மேலும் 4 பெண்களையும் தன்னுடைய "கொலை லிஸ்ட்டில்" இவன் வைத்திருந்ததும் தெரிய வந்தது.

 சீரியல் கொலையாளி

சீரியல் கொலையாளி

முதல் குற்றவாளியும், அவனது காதலியும் 2வது குற்றவாளியுமான பெண்ணும் பல்வேறு சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்... நகை திருட்டு, கள்ளச்சாராய விற்பனை என பல செயல்களில் ஈடுபட்டிருந்தனர்.. மைசூரில் உள்ள பொம்மசந்திராவில ஒரு கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டே இப்படிப்பட்ட பயங்கரமான காரியங்களில் ஈடுபட்டுள்ளனர். . குற்றச் செயல்களுக்காக பல்வேறு ஊர்களிலும் 2 பேரும் ஜோடியாக தங்கியுள்ளனர்... ஒவ்வொரு கொலையையும் செய்து முடித்த பிறகும், கிடைக்கும் பணத்தை கொண்டு காதலியுடன் ஜாலியாக டூரும் போயுள்ளான் இந்த "சீரியல்" குற்றவாளி.. இதையெல்லாம் கேட்டு கர்நாடகமே கதிகலங்கி உள்ளது.

 பெரிய பிளான்

பெரிய பிளான்

இதனிடையே இன்னொரு தகவலும் வெளியாகி உள்ளது.. குற்றவாளியை 2ம் குற்றவாளி மைசூரில் தங்க வைக்க தனியாகவே ஒரு வீடு எடுத்து தந்தாராம்.. இருவரின் திட்டப்படியும்தான், சம்பந்தப்பட்ட பெண்களை அந்த கிரிமினலுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார். அவர்களும் பலமுறை வீட்டிற்கு வந்து, குற்றவாளியுடன் சந்தித்து தனிமையில் இருந்துள்ளனர்... இந்த பெண்கள் என்றில்லாமல், பாலியல் தொழில் செய்யும் பல பெண்களுடன் நெருக்கமாக இருந்து வந்திருக்கிறார்.. அதன் பிறகுதான், மூன்று பெண்களையும் கொலை செய்ய பிளான் செய்துள்ளார்.. அதுமட்டுமல்ல, அடுத்ததாக கொல்லப்போகும் 5 பெண்கள் யார் யார் என்றும் பக்காவாக ஸ்கெட்ச் போட்டு வைத்திருந்திருக்கிறார்.

காட்டில் பிணம்

காட்டில் பிணம்

இதில் முதலில் 2 பெண்களை கொலை செய்தபோதும், கொலையாளியுடன் 2ம் குற்றவாளி கூடவேதான் இருந்தாராம்.. குட்டை பகுதியில் சடலத்தை துண்டு துண்டாக வீசினால், யாராலும் அடையாளம் கண்டுபிடிக்க முடியாது என்று முடிவு செய்துதான் 2 பெண்களின் சடலத்தை கால்வாயிலும், ஒரு சடலத்தை காட்டுப்பகுதியிலும் வீசியிருக்கிறார்.. இப்படியெல்லாம் பிளான் செய்தும்கூட, கிட்டத்தட்ட 2 மாதங்கள், 9 தனிப்படைகள் அமைத்து போலீசார் இந்த சீரியல் கில்லரை கைது செய்துவிட்டனர்..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+