மஞ்சுளாவுக்கு வந்த சபலம்.. அதுவும் ஆபீசர் வீட்டில்.. காரணமே அன்னம்மாதான்.. இதுல பாத்ரூம் பக்கெட் வேற
பெங்களூர்: மஞ்சுளாவுக்கு திடீர்னு சபலம் வந்துருச்சு.. இதுக்கு மகாதேவியும் உடந்தை.. கடைசியில மேடம் இப்போ எங்கே இருக்காங்க தெரியுமா?
கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ளது ஜே.பி நகர்.. இங்கு வசித்து வருபவர் முனிகிருஷ்ணப்பா.. 87 வயதாகிறது.. இவரது மனைவி பெயர் அன்னம்மா..

முனி கிருஷ்ணப்பா, அகில இந்திய வானொலி நிலையத்தில் சீனியர் ஆபிஸராக வேலை பார்த்தவர்.. இப்போது ரிடையர் ஆகிவிட்டார்.. மனைவியுடன் ஜே.பி.நகர் வீட்டிலேயே வசித்து வந்துள்ளார்.
அதிர்ச்சி: இந்நிலையில், மார்ச் 7-ம் தேதி இவரது வீட்டில் நகைகள் திருடுபோயுள்ளது.. அந்த நகைகளின் மதிப்பு 20 லட்ச ரூபாய்.. பீரோவிலிருந்த நகைகள் மாயமானதால், அதிர்ச்சி அடைந்த முனிகிருஷ்ணப்பா, போலீஸில் புகார் தந்தார்.. போலீசாரும் இந்த புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணையில் இறங்கினர்..
திருடு போன தினத்திலிருந்து முனி கிருஷ்ணப்பா வீட்டுக்கு, வந்தவர்கள் யார் யார்? புதிதாக வந்தவர்கள்? வழக்கமாக வந்து செல்பவர்கள் யார்? என்பதையெல்லாம் விசாரித்து லிஸ்ட் எடுத்தார்கள்.. அதன்படி, ஒவ்வொருவரிடமும் விசாரணை நடத்தினார்கள்.. அப்போதுதான் மஞ்சுளா மீது சந்தேகம் விழுந்தது.
அதிகாரி: மஞ்சுளா ஒரு நர்ஸ்.. முனி கிருஷ்ணப்பாவை கவனித்து கொள்ள வந்திருக்கிறார்.. இவருடன் சுகாதாரப்பணி செய்யும் மகாதேவி என்பவரும் வந்துள்ளார். இவர்கள் இருவரையும் போலீசார் விசாரிக்காமல், அவர்களது நடவடிக்கைகளை மட்டும் கண்காணித்திருக்கிறார்கள்.. இறுதியில் நகைகளை திருடியது இவர்கள்தான் என்பதையும் போலீசார் உறுதி செய்தனர்.
முனிகிருஷ்ணப்பா மனைவி அன்னம்மா எப்போதுமே கழுத்து நிறைய நகைகளுடன்தான் இருப்பாராம்.. வெளியே எங்கும் செல்லாமல் வீட்டிலிருந்தாலும்கூட, ஏகப்பட்ட நகைகளுடன்தான் நடமாடிக் கொண்டிருப்பாராம்.. இதை பார்த்துதான், மஞ்சுளாவுக்கும், மகாதேவிக்கும் சபலம் வந்துள்ளது. இந்த நகைகளை அபேஸ் செய்துவிட வேண்டும் என்றும் இரு பெண்களும் முடிவெடுத்துள்ளனர்.
வயதானவர்: அன்னம்மா வயதானவர் என்றாலும், காலையில் வாக்கிங் செல்வது அவரது வழக்கமாம்.. ஒருநாள் இப்படித்தான் அன்னம்மா வாக்கிங் செல்ல ரெடியாகி கொண்டிருந்தார்.. அப்போது மஞ்சுளா, "அதிகாலையில் வாக்கிங் போகும்போது, இவ்வளவு நகைகளை போட்டுட்டு போகாதீங்க.. நிலைமை சரியில்லை, திருடர்கள் அதிகமாக நடமாடுகிறார்கள்" என்றாராம்.
உடனே அன்னம்மா, கழுத்தில் அணிந்திருந்த நகைகள் எல்லாவற்றையும் கழற்றி, பீரோவில் ஒரு பெட்டியில் வைத்து பூட்டிவிட்டு வாக்கிங் சென்றுள்ளார்.. உடனே மஞ்சுளாவும், மகாதேவிவும், அந்த நகைகளை திருடி, பாத்ரூமிலிருந்த பக்கெட்டில் மறைத்து வைத்துவிட்டார்களாம்..
அன்னம்மா: இதனிடையே, அன்னம்மா கழுத்தில் நகைகள் இல்லாததை பார்த்த முனிகிருஷ்ணப்பா, ஏன் நகை போடல? நகைகள் எங்கே என்று கேட்டுள்ளார்..
அதற்கு அன்னம்மா, பீரோ லாக்கரில் வைத்து பூட்டியிருக்கிறேன் என்று சொல்லியுள்ளார். அதற்கு பிறகு, அன்னம்மா பீரோவை திறக்கவேயில்லை.. சில நாட்களுக்கு பிறகுதான், நகைகளை பார்த்தபோது, திருடப்பட்டிருந்தது அன்னம்மாவுக்கும், முனிகிருஷ்ணப்பாவுக்கும் தெரியவந்திருக்கிறது.
ஆனால், அதற்குள் மஞ்சுளா, பாத்ரூமில் ஒளித்து வைத்திருந்த நகைகளை எடுத்துவிட்டார்.. அதில், மகாதேவிக்கு பாதி தந்துவிட்டு, மிச்ச நகைகளை எடுத்துக் கொண்டு மாயமாகியும் விட்டது விசாரணையில் தெரியவந்தது.. இப்போது 2 மகராசிகளும் ஜெயிலுக்குள் கம்பி எண்ணி கொண்டிருக்கிறார்கள்.. உழைப்பது மட்டும்தானே நம்மிடம் ஒட்டும்??! அடுத்தவங்க சொத்துக்கு ஆசைப்பட்டால் இந்த கதிதான் ஆகும்..!!












Click it and Unblock the Notifications