யார் அந்த பாஸ்கரன்? 11 ஆயிரம் பட்டு புடவைகள் உட்பட ஜெயலலிதா பயன்படுத்திய பொருட்கள் யாரிடம் உள்ளது?
பெங்களூர்: ஜெயலலிதாவின் 28 வகையான பொருட்கள் பாஸ்கரன் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை கடிதம் எழுதிய நிலையில், அந்த பாஸ்கரன் யார், அவரிடம் ஏன் ஒப்படைக்கப்பட்டது என புகார் அளிக்க திட்டமிட்டுள்ளார் சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி.
சொத்துக் குவிப்பு வழக்கில் மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு கடந்த 2014ஆம் ஆண்டு பெங்களூர் தனி நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. அவர்கள் இதை எதிர்த்து கர்நாடகா ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கில் அவர்கள் 4 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

இதை எதிர்த்து கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. கடந்த 2017ஆம் ஆண்டு கர்நாடக ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து, தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. ஜெயலலிதா அதற்கு முன்பே மரணம் அடைந்துவிட்டதால், அவரது பெயர் தீர்ப்பில் இருந்து நீக்கப்பட்டது. சசிகலா உள்பட 3 பேரும் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் சிறை தண்டனையை அனுபவித்தனர்.
முன்னதாக, கடந்த மே மாதம் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சில விவரங்கள் கோரி கடிதம் எழுதினார். அதில், ஜெயலலிதாவின் 28 வகையான பொருட்களை பெங்களூர் கோர்ட்டில் உடனடியாக ஒப்படைக்குமாறு அவர் கோரினார். 28 வகையான பொருட்களில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டுப் புடவைகள், கைக்கடிகாரங்கள், 750 ஜோடி செருப்புகள், டிவி, ஃப்ரிட்ஜ்கள் உள்ளிட்டவை அடக்கம்.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சேலைகள், செருப்புகள், மின்சாதன பொருட்கள், தங்கம், வெள்ளி, வைர நகைகள் உள்ளிட்ட பொருட்களை ஏலம் விட வேண்டும் என்று பெங்களூரை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் நரசிம்மமூர்த்தி பெங்களூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் ஏலம் விடுவது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள சிறப்பு அரசு வழக்கறிஞரை நியமனம் செய்தது.
இதை எதிர்த்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா மற்றும் அண்ணன் மகன் தீபக் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். மறைந்த ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து பொருட்களையும் அவரது சட்டரீதியான வாரிசுகளான தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், ஏற்கனவே ஜெயலலிதாவின் வாரிசாக தங்களை ஏற்றுக்கொண்டு பல்வேறு சொத்துக்களை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியிருப்பதாகவும் வாதிட்டனர்.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளுக்கு உரிமை கோரி பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் தீபா மற்றும் தீபக் தாக்கல் செய்த மனுவை பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளை வாரிசுதாரர்கள் உரிமை கோர முடியாது என்று பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்தது.
இந்த வழக்கு தொடர்பான பொருட்களில் கர்நாடக அரசிடம் தற்போது 30 கிலோ தங்கம், வைரம் போன்ற ஆபரணங்கள் மட்டுமே உள்ளன. மீதமுள்ள 28 வகையான பொருட்கள் குறித்த தகவலை சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்திக்கு தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவிக்க வேண்டும் என்று வாய்மொழியாக நீதிபதி உத்தரவிட்டார்.
முன்னதாக, கடந்த மே மாதம் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறைக்குசில விவரங்கள் கோரி கடிதம் எழுதினார். அதில், ஜெயலலிதாவின் 28 வகையான பொருட்களை பெங்களூர் கோர்ட்டில் உடனடியாக ஒப்படைக்குமாறு அவர் கோரினார். 28 வகையான பொருட்களில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டுப் புடவைகள், கைக்கடிகாரங்கள், 750 ஜோடி செருப்புகள், டிவி, ஃப்ரிட்ஜ்கள் உள்ளிட்டவை அடக்கம்.
இந்நிலையில் நரசிம்மமூர்த்திக்கு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையின் வடக்கு மண்டல போலீஸ் சூப்பிரண்டு சியாமளாதேவி பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், "நீங்கள் கடந்த 9-5-2023 அன்று எங்களுக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக அந்த பொருட்கள் மதிப்பீட்டு பணிகளுக்கு பிறகு பரிந்துரைக்கப்பட்ட நாமினி பாஸ்கரனிடம் ஒப்படைக்கப்பட்டது." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நரசிம்மமூர்த்திக்கு லஞ்ச ஒழிப்புத்துறை அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அந்த பாஸ்கரன் யார் என்பது குறித்து விளக்கம் அளிக்கப்படவில்லை. ஜெயலலிதாவின் 28 வகையான சொத்துகளைப் பெற்ற அந்த பாஸ்கரன் யார் என்பதில் குழப்பம் நிலவி வருகிறது. சசிகலா உறவினர்களில் இருவர் பெயர் பாஸ்கரன் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஜெயலலிதாவின் சொத்துகள் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்படும் பாஸ்கரன் யார் என்பது விளக்கப்படாத நிலையில், எதற்காக அவரிடம் கொடுத்தனர், யார் அந்த பாஸ்கரன் என்பது குறித்து போலீசில் புகார் அளிக்க உள்ளதாக சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி தெரிவித்துள்ளார்.
-
விவசாயிகளுக்கு பயிர்க் கடன் தள்ளுபடி அறிவித்த எடப்பாடி! ஆனா 5 பவுன் நகை கடன் ரத்து இல்லையே! -
கோவை, மதுரைக்கு மெட்ரோ! சென்னை கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பு! அதிமுக தேர்தல் அறிக்கையின் ஹைலைட்ஸ் -
ADMK: பாஜக 27, பாமக 18, அமமுக 11! அப்போ அதிமுக 172? வெளியான உத்தேச பட்டியல்? -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
9 ஆண்டுகள் கழித்து! அதிமுக தலைமை அலுவலகத்தில் நுழைந்த டிடிவி தினகரன்! மாடத்தில் Nostalgic மொமன்ட்ஸ்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்












Click it and Unblock the Notifications