டீல் ஓகே? காங்கிரஸின் அடுத்த முதல்வர்.. இப்போ இவர்.. அப்புறம்? காங்கிரஸ் தலைமை போடும் கணக்கு!
பெங்களூர் : கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ள நிலையில், அடுத்த முதலமைச்சரை தேர்ந்தெடுக்கும் பணியில் காங்கிரஸ் தலைமை இறங்கியுள்ளது. டிகே சிவகுமார், சித்தராமையா இருவரும் முதல்வர் ரேஸில் இருக்கும் நிலையில், காங்கிரஸ் ஒரு கணக்கை வைத்திருப்பதாகத் தெரிகிறது.
224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு கடந்த 10-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. நேற்று வாக்கு எண்ணிக்கை முடிவடைந்துள்ள நிலையில், காங்கிரஸ் 136 தொகுதிகளிலும் பாஜக 65 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. மேலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் 19 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

கடந்த காலங்களைப் போல் அல்லாமல், கர்நாடகாவில் தற்போது நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அரசியல் சூழலை தங்களுக்குச் சாதகமாக மாற்றிக் கொள்ள காங்கிரஸ் தலைவர்கள் களத்தில் இணைந்து தீவிரமாகச் செயல்பட்டனர். கர்நாடகா காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான டி.கே.சிவகுமாரும், காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான சித்தராமையாவும் ஈகோவை புறந்தள்ளி இணைந்து செயல்பட்டனர்.
காங்கிரஸின் தீவிர முயற்சிகளுக்குப் பலனாக 136 சீட்களில் அக்கட்சி வென்றுள்ள நிலையில், கர்நாடகா மாநிலத்தில் அடுத்த முதலமைச்சர் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. முன்னாள் முதலமைச்சர்கள் சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாருக்கும் இடையே இவ்விவகாரத்தில் கடும் போட்டி நிலவி வருகிறது.
சித்தராமையா கடந்த 2013 முதல் 2018 வரை ஐந்து ஆண்டுகள் கர்நாடக முதலமைச்சராக பணியாற்றியுள்ளார். காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் சித்தராமையா மீண்டும் முதலமைச்சராக வரவேண்டும் என்பதையே விரும்புகின்றனர். பல்வேறு சமூகத்தினர் மத்தியிலும் சித்தராமையாவுக்கு இருக்கும் செல்வாக்கு முக்கியமானதாக கருதப்படுகிறது.

கனகபுரா தொகுதியில் இருந்து 8 முறை எம்.எல்.ஏ.வாக இருந்த டி.கே.சிவகுமார், காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் பலமான ஆதரவை பெற்றுள்ளார். மாநிலத்தின் பணக்கார அரசியல்வாதிகளில் ஒருவராக பார்க்கப்படும் டிகே சிவகுமார் கட்சிக்கான நிதி திரட்டுவதிலும் முக்கிய பங்காற்றுகிறார். டிகே சிவகுமார் செயல்படுத்தும் வியூகங்கள் காங்கிரஸ் கட்சிக்கு வளர்ச்சியைத் தரும் என்ற அடிப்படையில் அவரும் சி.எம் வேட்பாளர் போட்டியில் நிற்கிறார்.
அதேசமயம், டிகே சிவக்குமார் மீது சிபிஐ, அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை என விசாரணை அமைப்புகளால் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பணமோசடி மற்றும் வரி ஏய்ப்பு குற்றச்சாட்டில் சுமார் 104 நாட்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், தற்போது ஜாமீனில் வெளியே உள்ளார் டிகே சிவகுமார்.
அரசியல் ரீதியாக இந்த வழக்குகள், அதை எதிர்த்து டிகே சிவகுமார் செய்யும் போராட்டம் எல்லாம் காங்கிரஸுக்கு பலன் தந்தாலும், முதலமைச்சராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டால் அது சிக்கலாகக்கூடும் என்ற நிலை இருக்கிறது. இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிக்கார்ஜூன கார்கே இல்லத்தில் நேற்று அவசர ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனையில் டி.கே.சிவகுமார், சித்தராமையா, ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, கே.சி.வேணுகோபால் ஆகியோர் பங்கேற்றனர்.
ஆலோசனை முடிந்து செய்தியாளர்களை சந்தித்த ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, கர்நாடகா மக்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார். மேலும், கர்நாடகா மக்கள் ஜனநாயகத்திற்கு வழிகாட்டியுள்ளதாகவும், 40% கமிஷன் அரசிடம் இருந்து கர்நாடகா விடுதலை பெற்றுள்ளதாகவும் கூறினார்.
காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில், இந்த வெற்றியால் ஒட்டுமொத்த நாடும் உற்சாகமடைந்துள்ளதாகவும், தேச ஒற்றுமை பயணத்தில் ராகுல் காந்தி சென்ற இடங்களில் எல்லாம் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து பேசிய டி.கே.சிவகுமார், நாளை (இன்று - மே 14) மாலை 5 மணிக்கு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளதாகவும், அதில் முறைபடி ஆலோசனை நடத்தி முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் தனிநபர் நலனை விட கட்சியே முதன்மையானது என டி.கே.சிவகுமார் தெரிவித்தார்.
இந்நிலையில், கர்நாடகாவின் முதலமைச்சர் யார் என்பதில் காங்கிரஸ் தலைமையின் முடிவு என்னவாக இருக்கும் என்பது பெரும் விவாதத்திற்கு உள்ளாகி உள்ளது. மூத்த தலைவரான சித்தராமையா முதல்வராக தொடரலாம் என்றும், 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்குப் பின், அல்லது இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு டிகே சிவகுமாருக்கு முதலமைச்சராக வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் பேச்சு அடிபடுகிறது.
மேலும், இந்த தேர்தலில் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றிய டிகே சிவகுமாரை கௌரவிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியில் முக்கியப் பொறுப்புகள் அளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. கட்சியின் நலனை கருத்தில் கொண்டு, காங்கிரஸ் தலைமையின் இந்த முடிவுக்கு டிகே சிவகுமார் ஆதரவளிப்பார் என்றும் கூறப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications