"ஊசலாட்டம்".. விழிக்கும் பாஜக..கவனிக்கும் காங்கிரஸ்.. ஏபிபி எக்ஸிட் போல் பாருங்க.. ரிசல்ட் என்னாகுமோ
பெங்களூரு : கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் இன்றைய தினம் முடிவடைந்த நிலையில், ஏபிபி செய்தி நிறுவனமானது, எக்ஸிட் போல் எனப்படும் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை வெளியிட்டுள்ளது.
கர்நாடகாவில் தற்போதைய சட்டப்பேரவையின் பதவிக் காலம் வரும் 24ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து, சட்டசபை தேர்தலை அம்மாநிலம் சந்தித்துள்ளது.
Recommended Video
மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் பாஜகவும், இந்த முறையாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரசும் கங்கணம் கட்டி தேர்தலை சந்தித்துள்ளன. இதற்கு நடுவில் மதசார்பற்ற ஜனதாதளம் உள்ளே நுழைந்து, தேசிய கட்சிகளுக்கு இணையாக களமிறங்கியதால், மும்முனைப் போட்டி நிலவி வருகிறது.
கர்நாடக தேர்தலை முன்னிட்டு, தேர்தலுக்கு முந்தைய பல்வேறு கருத்து கணிப்புகள் வெளியாகின.. அத்தனை கணிப்புகளிலுமே, பாஜக அபார வெற்றி பெறும் என்றோ, மெஜாரிட்டியுடன் ஆட்சியை தக்க வைக்கும் என்றோ அறுதியிட்டு சொல்லவில்லை.. இதுவே, பாஜகவுக்கான சறுக்கலாகவும், காங்கிரஸ் கட்சிக்கான பிரதான வெற்றியாகவும் பார்க்கப்பட்டு வருகிறது..

பாரத பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பாஜகவின் மூத்த தலைவர்கள் பலரும் கர்நாடகாவில், அதிக பிரச்சாரங்களை மேற்கொண்டனர்.. அதேபோல, ராகுல்காந்தியும், பிரியங்காவும், மாறி மாறி கர்நாடகம் வந்து பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.. பாஜக, காங்கிரஸ், ஜேடிஎஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இன்றைய தினம், கர்நாடகாவில் உள்ள 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்றைய தினம் தேர்தல் நடந்து முடிந்தது..
கர்நாடகாவில் கர்நாடகாவில் பாஜக தற்போது 116 இடங்களுடன் தனிபெரும்பான்மையுடன் ஆட்சி நடத்தி வரும் நிலையில், அடுத்து யார் ஆட்சி என்ற வாக்காளர்களின் தீர்ப்பு வரும் 13ம் தேதி தெரிய வரும்.. இதனிடையே, எக்ஸிட் போல் எனப்படும், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி கொண்டிருக்கின்றன..
ஏசியாநெட் கணிப்பு:
பாஜக 94 - 117
காங்கிரஸ் - 91-106
ஜேடிஎஸ் - 14-24
மற்றவர்கள் 00-02
கர்நாடகா எக்ஸிட் போல்கள்:
வாக்கு சதவீதம்:
பாஜக - 36 சதவீதம்
காங்கிரஸ் - 41 சதவீதம்
ஜேடிஎஸ் - 17 சதவீதம்
தொகுதிப் பங்கீடு:
பாஜக - 79-94
காங்கிரஸ் - 103-118
ஜேடிஎஸ் - 25-33
நியூஸ் 18:
பாஜக 88 - 98
காங்கிரஸ் - 99 - 109
ஜேடிஎஸ் - 21 - 26
மற்றவர்கள் 04
காரவாலி கோஸ்டல் அமரரும் ஹில்ஸ் மண்டலம்:
வாக்கு சதவீதம்:
பாஜக 50
காங்கிரஸ் - 40
ஜேடிஎஸ் - 6
மற்றவர்கள் 4
ஏபிபி செய்தி நிறுவனம்: அதேபோல ஏபிபி செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள கணிப்புகளின்படி, 12 முதல் 15 இடங்களை பாஜக கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளது.. காங்கிரஸ் 18 முதல் 22 இடங்களையும், ஜேடிஎஸ் 2, மற்றவை ஒரு இடத்தையும் கைப்பற்றக்கூடும் என்றும் கூறியுள்ளது.. ஆக, இந்த கருத்துக்கணிப்புகளின்படி, எந்த ஒரு கட்சிக்குமே பெரும்பான்மை இல்லாத சூழல் உள்ளது.. அநேகமாக தொங்கு சட்டசபை அமையக்கூடும் என்றே கணிக்கப்படுகிறது. எனினும், பெரும்பான்மையை யாருமே எட்டவில்லை என்பது மிகுந்த் கவனத்தை பெற்று வருகிறது.
-
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications