பெங்களூர் தெருக்களில் அது என்ன க்யூஆர் கோட்.. வேற லெவல்.. அசர வைத்த போலீசின் முடிவு
பெங்களூரு: கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் காவல்துறை புதிதாக கியூஆர் கோடு மூலம் ஸ்கேன் செய்து குறைகளை தெரிவிக்கும் முறையை அறிமுகம் செய்துள்ளது. இந்த கியூஆர் கோடு மூலம் பெங்களூரு காவல்துறையினர் எப்படி செயல்படுகிறார்கள் என்பது குறித்து கருத்து தெரிவிக்கலாம் என்று பெங்களூரு காவல்துறை ஆணையர் பி தயானந்தா தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் இப்போது எல்லாம் ஒவ்வொரு இடத்திற்குமே ரேட்டிங் தருகிறார்கள். சேவைகள் எப்படி அளிக்கிறார்கள் என்பது குறித்து கருத்துக்களையும் பதிவிடுகிறார்கள்.

நீங்கள் கோயிலுக்கு போவதாக இருந்தாலும், ஓட்டலுக்கு போவதாக இருந்தாலும், டெய்லர் கடையில் துணி தைக்க போவதாக இருந்தாலும், பள்ளியில் குழந்தையை சேர்க்க போவதாக இருந்தாலும், பள்ளியின் செயல்பாடுகள் குறித்த ரேட்டிங் மற்றும் கருத்துக்களை அறிந்து முடிவெடுக்கலாம். அந்த அளவிற்கு மக்கள் ஒவ்வொரு இடத்திற்கும் ரேட்டிங் மற்றும் கருத்துக்களை தெரிவிக்கிறார்கள்.
ஏன் அண்மையில் சென்னை திருமுல்லைவாயில் காவல் நிலையம் குறித்து கூட ரேட்டிங் இருந்தது. காவல் நிலையங்களில் எப்படி செயல்படுகிறார்கள். அவர்கள் எப்படி பொதுமக்களுக்கு சேவை செய்கிறார்கள் என்பது குறித்து அதில் இடம் பெற்று இருந்தது.
இப்படி சுற்றுலா தளங்கள் தொடங்கி அன்றாடம் பயன்படுத்தும் அனைத்து சேவைகள் மற்றும் பொருட்கள் வரை எல்லாவற்றிலும் ரேட்டிங் மற்றும் கருத்துக்கள் பதிவிடுவது வாடிக்கையாகிவிட்டது. இந்நிலையில் கர்நாடகா தலைநகரான பெங்களூருவில் அனைத்து காவல் நிலையங்களிலும் QR குறியீடுகள் அமைக்கப்பட உள்ளதாக பெங்களூரு காவல்துறை அறிவித்துள்ளது.
இந்த கியூஆர் கோடு முறை குறித்து பெங்களூரு காவல்துறை ஆணையர் பி தயானந்தா ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், பெங்களூ ரு மாநகர காவல்துறைக்கு உள்பட்ட அனைத்து காவல் நிலையங்களிலும் QR குறியீடு அடிப்படையில் மக்கள் கருத்துக்களை பகிரும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் எங்களின் சேவையை பற்றி உங்களின் நேர்மையான கருத்தை பதிவு செய்யுங்கள். இந்த கருத்துக்களின் அடிப்படையில் இன்னமும் சிறப்பான சேவையை பெங்களூரு காவல்துறை உங்களுக்கு வழங்க உதவும். இதை மிக எளிமையாக செய்ய முடியும், விரைவாக எங்களை நீங்கள்அணுக முடியும். அதுதான் எங்களின் நோக்கமும் கூட" இவ்வாறு கூறியிருந்தார்
இந்தியாவின் ஐடி தலைநகர் என்று அழைக்கப்படும் பெங்களூருவில் காவல் நிலையங்கள் மேம்பட்ட சேவையை வழங்க வேண்டும் என்று மாநகர காவல்துறை விரும்புகிறது. அதற்காக நகர மக்களுடன் நேரடியான தொடர்பை காவலர்களுடன் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் பெங்களூரு காவல்துறை கியூ ஆர் கோடு சேவையை அறிமுகம் செய்துள்ளது.
பெங்களூருவில் காவல்நிலையங்களில் மட்டுமின்றி, நகரின் பல்வேறு தெருக்களிலும் கியூஆர்கோடு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட உள்ளது. அதில் எந்த காவல் நிலையம், என்ன பிரச்சனையை எதிர்கொண்டீர்கள் என்பதை எளிதாக தெரிவிக்கலாம். அதேபோல் எந்த காவல் நிலையத்தில் உங்களுக்கு சிறப்பான சேவையை வழங்கினார்கள். காவலர்களின் எந்த அணுகுமுறை உங்களுக்கு பிடித்திருந்தது என்பதையும் பதிவு செய்யலாம்.
இந்த கியூஆர் கோடுகளை ஸ்மார்ட்போன் மூலம் ஸ்கேன் செய்தால் அந்த பகுதி எம்எல்ஏ, ஒப்பந்ததாரர்கள், துப்புரவுப் பணியாளர்கள், தொழிலாளர்கள் போன்றவர்களின் செல்போன் எண்ணையும் அறிய முடியும். இந்த QR குறியீடுகள் மூலம், பெங்களூரு நகரத்தின் பல்வேறு அதிகாரிகளுக்கும் உங்களுக்கு வேண்டிய பல்வேறு சேவைகள் பற்றி நேரடியாகத் தெரிவிக்கலாம்.
A QR code based feedback mechanism has been introduced in all police stations of @BlrCityPolice. Avail this to give your honest feedback about our delivery of service. This will help us to serve you better. It's simple quick and objective.#lokasphandana pic.twitter.com/QiuAhrwm7j
— B Dayananda IPS CP Bengalur ಪೊಲೀಸ್ ಆಯುಕ್ತ ಬೆಂಗಳೂರು (@CPBlr) July 11, 2023
முன்னதாக கடந்த ஜூன் மாதம், கர்நாடகாவின் காவல்துறை தலைமை இயக்குனர் ( டிஜி & ஐஜிபி) அலோக் மோகன், மாநிலத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் உயர் காவலர்களின் தொலைபேசி எண்களை மக்களின் தெளிவான பார்வைக்கு வைக்க வேண்டும் என காவல் துறைக்கு உத்தரவிட்டார். மக்கள் காவல் நிலையங்களுக்குச் செல்லும்போது புகார்கள் கவனிக்கப்படாமல் இருந்தால் உடனே உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கருதி இந்த நடவடிக்கையை அவர் எடுத்தார்.
இந்நிலையில் புதிதாக பெங்களூருவில் அறிமுகமாகும் கியூஆர் கோடு முறைக்கு நிச்சயம் நல்ல வரவேற்பு இருக்கும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதன் மூலம் பொதுமக்களின் கருத்துக்களை காவல்துறையினர் புரிந்து கொள்ள நல்ல வாய்ப்பு என்றும் கூறுகிறார்கள்.
-
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தெலுங்கு நடிகை தற்கொலை வழக்கில் ட்விஸ்ட்.. மாமியாரை தூக்கிய சிபிஐ.. விசாரணையில் திருப்பம் -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
பெங்களூருவில் இப்படி ஒரு காதலியா? விடிய விடிய வாட்ஸ்-அப் வீடியோ கால்! பேரதிர்ச்சியில் ஐடி இன்ஜினீயர் -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
சிறைக்கு தள்ளப்படும் Byjus ரவீந்திரன்.. பெங்களூரை கலக்கிய Byju's நிறுவனருக்கு கெட்ட காலம்! -
இந்திய டெக் ஊழியர்களை கதறவிட்ட Meta.. 3 பிரிவில் கண்ணை மூடிக்கொண்டு பணிநீக்கம்.. எங்குபோய் முடியுமோ












Click it and Unblock the Notifications