கட்சியையே உடைச்சிடுவாரு.. டிகே சிவகுமார் எல்லாம் செய்தும்.. சித்தராமையாதான் முதல்வர்? ஏன் தெரியுமா?
பெங்களூர்: கர்நாடகாவின் முதல்வராக சித்தராமையா அந்த கட்சி சார்பாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். துணை முதல்வராக டிகே சிவக்குமார் தேர்வாகி இருக்கிறார். இவர்கள் வரும் சனிக்கிழமை பதவி ஏற்க உள்ளனர்.
இதில் சித்தராமையாவை முதல்வராக தேர்வு செய்வதற்கு பின் முக்கியமான சில காரணங்கள் உள்ளன.
சிவக்குமார்தான் அங்கே கர்நாடக தேர்தல் பணிகளை முழுமையாக ஒருங்கிணைத்தார். 5 வருடங்களுக்கு முன் காங்கிரஸ் - மஜத கூட்டணி ஆட்சி அமைக்க காரணமாக இருந்தார்.

மத்திய பிரதேசத்திலும், மகாராஷ்டிராவிலும் கூட காங்கிரஸ் எம்எல்ஏக்களை காக்க காரணமாக இருந்தார். ஒக்கலிகா பிரிவினர் இந்த முறை எதிர்பார்க்காத அளவிற்கு சிவகுமாருக்கு வாக்களித்துள்ளனர். இதற்கு காரணம் சிவக்குமார்தான்.
அவரின் பிரச்சாரம்தான் ஒக்கலிகா பிரிவினர் காங்கிரஸ் கட்சிக்கு அதிக ஆதரவு தர காரணம். அவரின் அதிரடி பிரச்சார வியூகங்கள், சௌமியா ரெட்டிக்கா ஜெய நகரில் இரவில் கூட வாக்கெடுப்பு நடத்தும் இடத்திற்கு சென்றது என்று சிவக்குமார் மிகச்சிறப்பான "வேலைக்காரராக" திகழ்ந்தார்.
ஆனால் இவருக்கு பதிலாக சித்தராமையாதான் முதல்வராக பதவி ஏற்பார் என்று முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
டெல்லி சித்தராமையாவை தேர்வு செய்ய காரணங்கள் உள்ளன.
காரணம் என்ன?
1. டிகே சிவகுமாருக்கு நிர்வாகிகள் ஆதரவு, மக்கள் பிரபலம் இருந்தாலும் எம்எல்ஏக்கள் ஆதரவு தொடங்கி தொண்டர்கள் ஆதரவு எல்லாம் சித்தராமையாவிற்கே இருக்கிறது.
2. அங்கே எம்எல்ஏக்கள் ஆதரவு அடிப்படையில் முதல்வரை தேர்வு செய்ய முடிவு எடுக்கப்பட்டது. எம்எல்ஏக்கள் ஆதரவு யாருக்கு என்று ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் வென்றது சித்தராமையாவா அல்லது டிகே சிவக்குமாரா என்பது ரகசியமாக உள்ளது. இதன் முடிவுகள் நேற்று சோனியா காந்தி - கார்கேவிடம் கொடுக்கப்பட்டது. அவர்கள் இன்று அதில் இறுதி முடிவு எடுப்பார்கள் என்று கூறப்படுகிறது.
3. இந்த வாக்கெடுப்பில் எம்எல்ஏக்கள் 90 சதவிகிதம் பேர் டி கே சிவக்குமாருக்குத்தான் ஆதரவு என்று கூறப்படுகிறது.
4. வாக்களித்தவர்கள் ரீதியாக ஒக்கலிகா என்னவோ டிகே சிவகுமாரை பார்த்து வாக்களித்தாலும், இஸ்லாமியர்கள், லிங்காயத்துகள், தலித்துகள் பெரும்பாலும் சித்தராமையா - கார்கேவை பார்த்தே வாக்களித்தனர்.
5. டிகே சிவக்குமார் கட்சியை உடைக்கும் குணம் கொண்டவர் இல்லை. ஆனால் சித்தராமையா தனக்கு பதவி கிடைக்கவில்லை என்றால் கட்சியை உடைக்கும் குணம் கொண்டவர். அவருக்கு இருக்கும் மைனாரிட்டி சப்போர்ட் மிகப்பெரியது. அதேபோல் அவரின் குருபா ஜாதிதான் அங்கே மூன்றாவது பெரிய ஜாதி. இதனால் கண்டிப்பாக ஒரு 30 எம்எல்ஏக்களை கூட்டிக்கொண்டு போய் சித்தராமையா கட்சியை உடைப்பார். இதை காங்கிரஸ் விரும்பாது. ஏன் டிகே சிவக்குமாரும் விரும்ப மாட்டார் .
6. உண்மையில் டிகே சிவகுமாரே முதல்வர் பதவிக்கு திட்டமிடவில்லை என்று கூறப்படுகிறது. அவர் பெரிய இரண்டு அமைச்சரவையை வாங்கவே இப்படி செய்கிறார். அவருக்கு பிஸ்னஸ் பார்க்கவே நேரம் இருக்கும். அதில் பல சலுகைகளை எதிர்பார்ப்பார். அதற்காகவே பிரஷர் கொடுப்பார் என்றும் கூறுகிறார்கள்.
7. அதனால் சித்தராமையாதான் அடுத்த முதல்வர். இதுபோக கர்நாடகாவில் 3 துணை முதல்வர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். சித்தராமையா முதல்வர். துணை முதல்வர்கள் 3ல் ஒருவர் வொக்கலிகா, ஒருவர் முஸ்லீம், ஒருவர் லிங்காயத்து துணை முதல்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதில் 2 துணை முதல்வர் டிகே சிவக்குமார் சொல்லும் நபராக இருப்பார் என்று கூறப்படுகிறது.
தேர்தல் முடிவு : கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகள் உள்ளன. அங்கே மெஜாரிட்டி பெற 113 இடங்களில் வெற்றிபெற வேண்டும்.
அங்கு எண்ணப்பட்ட வாக்குகளில் பாஜக 66 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 135 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மஜத மொத்தம் 19 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
பாஜக படுதோல்வி அடைந்த நிலையில் முதல்வர் பொம்மை அங்கே பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தற்போது புதிய அரசு பதவி ஏற்கும் வரை அவர் காபந்து முதல்வராக தொடர்வார்.












Click it and Unblock the Notifications