கண்முன் வந்த அந்த நொடி! நிலவில் லேண்டர் தரையிறங்கினாலும்.. இரவு வரை பதற்றத்தோடு இருந்த சிவன்! ஏன்?

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: சந்திரயான் 3யின் விக்ரம் லேண்டர் நேற்று வெற்றிகரமாக நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கியது. இருப்பினும் கூட இஸ்ரோ முன்னாள் தலைவரும், தமிழகத்தை சேர்ந்த விஞ்ஞானியுமான சிவன் இரவு வரை பெங்களூரில் உள்ள தரைக்கட்டுப்பாட்டு மையத்தில் பதற்றமாகவே இருந்த தகவலும், அதன் பின்னணியில் இருந்த காரணமும் வெளியாகி உள்ளது.

நிலவு குறித்த ஆராய்ச்சிக்காக இஸ்ரோ சார்பில் சந்திரயான் 1 திட்டம் உருவாக்கப்பட்டது. கடந்த 2008 ம் ஆண்டு சந்திரயான் 1 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இதில் திட்ட இயக்குனராக தமிழகத்தை சேர்ந்த விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை செயல்பட்டார். இந்த சந்திரயான் 1 மூலம் நிலவில் நீர் மூலக்கூறுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

Why ISRO Ex chief Sivan was tension till the night after Vikram Lander safely landing on Moon?

இதையடுத்து 11 ஆண்டுகள் கழித்து கடந்த 2019ல் நிலவின் தென்துருவத்தில் விக்ரம் லேண்டரை தரையிறக்கி பிரக்யான் ரோவர் மூலம் ஆய்வு செய்யும் ஆர்ப்பிட்டருடன் அடங்கிய சந்திரயான் 2 திட்டம் விண்ணில் ஏவப்பட்டது. இதில் திட்ட இயக்குனராக தமிழகத்தை சேர்ந்த விஞ்ஞானி வனிதா செயல்பட்டார். இஸ்ரோ தலைவராக தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சிவன் இருந்தார்.

இந்த திட்டத்தின்படி சந்திரயான் 2 ஆர்ப்பிட்டர் நிலவின் சுற்றுவட்டபாதையில் வெற்றிகரமாக சுற்றி வரும்படி செய்யப்பட்டது. ஆனால் விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கியபோது எதிர்பாராத விதமாக கீழே விழுந்து நொறுங்கியது.

இதையடுத்து அன்றைய தினம் இஸ்ரோ தலைவர் சிவன் தழுதழுத்த குரலில் சந்திரயான் 2 திட்டத்தின் விக்ரம் லேண்டர் தரைக்கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து தொடர்பை இழந்துவிட்டது என மைக்கில் கூறியது இந்தியர்கள் அனைவரையும் கண்கலங்க செய்தது. மேலும் பெங்களூரில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்துக்கு நேரில் சென்ற பிரதமர் மோடி, சிவனை கட்டியணைத்து தோளில் தட்டிக்கொடுத்து ஆறுதல் கூறியது அனைவரையும் நெகிழ வைத்தது.

இதன் தொடர்ச்சியாக சந்திரயான் 2 திட்டத்தில் ஏற்பட்ட தவறை சரிசெய்து அதில் கற்ற பாடத்தின் அடிப்படையில் சந்திரயான் 3 திட்டத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் உருவாக்கினர். இந்த திட்டத்தின் திட்ட இயக்குனராக தமிழகத்தை சேர்ந்த வீரமுத்துவேல் செயல்பட்டார். சந்திரயான் 3 என்பது சந்திரயான் 2ல் இருந்த ஆர்ப்பிட்டருக்கு பதில் உந்துவிசை கலனை கொண்டிருந்தது.

அதன்படி கடந்த மாதம் 13ம் தேதி பிஎஸ்எல்வி எல்விஎம் 3 ராக்கெட் மூலம் சந்திரயான் 3 விண்ணில் ஏவப்பட்டது. ராக்கெட் என்பது உந்துவிசை கலன், விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் உள்ளிட்டவற்றை சுமந்து சென்றது. உந்து விசை கலனில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் நேற்று மாலை 6.04 மணிக்கு வெற்றிகரமாக நிலவின் தென்துருவத்தில் சாப்ட் லேண்டிங் முறையில் தரையிறங்கியது. அதன்பிறகு விக்ரம் லேண்டரில் 4 மணிநேரம் கழித்து வெளியே வந்த பிரக்யான் ரோவரும் நிலவில் தரையிறங்கி ஆய்வை தொடங்கி உள்ளது.

மேலும் நிலவின் மேற்பரப்பை போட்டோ எடுத்து பூமிக்கு அனுப்பி உள்ளது. இதன்மூலம் நேற்றைய தினம் என்பது இந்திய விண்வெளி துறையில் புதிய மைல்கல்லாக அமைந்துள்ளது. ஏனென்றால் நிலவில் தரையிறங்கிய 4வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றதோடு, நிலவின் தென்துருவத்தில் கால்பதித்த முதல் நாடு என்ற பெருமையையும் இந்தியா அடைந்துள்ளது.

இந்நிலையில் தான் நேற்று மாலையில் விக்ரம் லேண்டரை தரையிறக்கும் செயல்பாடு தொடங்கியது முதல் விஞ்ஞானிகள் மத்தியில் பரபரப்பை தொற்றி கொண்டது. ஏனென்றால் கடந்த 2019ல் விக்ரம் லேண்டரை ‛சாப்ட் லேண்டிங்' முறையில் தரையிறக்கியபோது அது விழுந்து நொறுங்கியது. இதுபோல் தவறு இந்த முறை நிகழ்ந்து விடக்கூடாது என்பது தான் பரபரப்புக்கு முக்கிய காரணமாக இருந்தது.

இருப்பினும் கூட பரபரப்புக்கு நடுவே சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் திட்டமிட்டபடி நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கியது. அதன்பிறகு விஞ்ஞானிகள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டாலும் கூட தொடர்ந்து அவர்கள் பதற்றத்திலேயே இருந்துள்ளனர். குறிப்பாக இஸ்ரோ முன்னாள் தலைவரான சிவன் பதற்றமாக இருந்துள்ளார். அதாவது விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெளிவர வேண்டும். அது முறையாக நிலவில் இறங்க வேண்டும் என்பது தான் இந்த பதற்றத்துக்கு காரணம். ஆனால் அதுவும் 4 மணிநேரத்துக்கு பிறகு வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

இதற்கிடையே தான் நேற்றைய தினம் பெங்களூரில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் எத்தகைய சூழல் இருந்தது என்பது குறித்து இஸ்ரோவின் முன்னாள் தலைவரும், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த விஞ்ஞானியுமான சிவன் பத்திரிகையாளர்களிடம் சந்தித்து கூறினார். இதுதொடர்பாக சிவன் கூறியதாவது: இறுதியாக நிலவின் தரையிறங்கும் நமது முயற்சியும், பிரார்த்தனையும் வெற்றி பெற்றுள்ளது. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் நிலவில் விக்ரம் லேண்டர் தரையிறங்கினாலும் கூட இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து நான் வெளியே வரவில்லை.

லேண்டரில் இருந்து ரோவர் வெளியே வரும்வரை கட்டுப்பாட்டு அறையிலேயே அமர்ந்திருந்தேன். இறுதியில் ரோவர் நிலவில் இறங்கியதை பார்த்து மகிழ்ந்த பிறகு தான் அங்கிருந்து வீட்டுக்கு சென்றேன். சந்திரயான் - திட்டத்தின்போது ஏற்பட்ட சிறிய கேளாறால் முழு வெற்றியை நம்மால் பெற முடியவில்லை. இல்லாவிட்டால் 4 ஆண்டுகளுக்கு முன்பே நிலவில் கால்பதித்து இருப்போம்.

இருப்பினும் முந்தைய தவறில் இருந்து பாடம் கற்று அதனை திருத்தி கொண்டு வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சியாகும். 2019 தோல்வியில் கற்ற பாடத்தில் இருந்து சந்திரயான் -3 உருவாக்க திட்டமிடப்பட்டது. அதோடு எதிர்காலத்தில் தவறு எதுவும் செய்யக்கூடாது என முடிவு செய்யப்பட்து. அந்த முயற்சியின் பலனை தான் நாம் இப்போது பெற்றுள்ளோம்'' என பூரிப்போடு கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+