பெங்களூர் வேண்டவே வேண்டாம்.. சொந்த ஊரிலேயே வாழும் ‛காந்தாரா' ரிஷப் ஷெட்டி.. ஏன் தெரியுமா?
பெங்களூர்: ‛காந்தாரா' மற்றும் ‛காந்தாரா சாப்டர் 1' என்று அடுத்தடுத்து ஹிட் கொடுத்துள்ள இயக்குநர், நடிகருமான ரிஷப் ஷெட்டி பெங்களூர் வேண்டவே வேண்டாம் என்று தனது சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அதன் பின்னணி குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2022ம் ஆண்டில் காந்தாரா திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் பெரிய ஹிட்அடித்தது. சுமார் ரூ.16 கோடி செலவில் உருவான இந்த திரைப்படம் உலகம் முழுவதும் இந்த திரைப்படம் ரூ.407.982 கோடியை வசூலித்து சாதனை படைத்தது. இந்த திரைப்படத்துக்கு ரிஷப் ஷெட்டி திரைக்கதை எழுதி இயக்கி, நடித்திருந்தார்.

காந்தாரா திரைப்படம் கொடுத்த வெற்றியை தொடர்ந்து ரிஷப் ஷெட்டி ‛காந்தாரா சாப்டர் 1' திரைப்படத்தை தொடங்கினார். இந்த திரைப்படத்துக்கும் ரிஷப் ஷெட்டியே கதை எழுதி இயக்கி நடித்துள்ளார். கடந்த 2ம் தேதி வெளியான இந்த திரைப்படமும் மெகா ஹிட் அடித்துள்ளது. கடந்த 3ம் தேதி இந்த திரைப்படம் வெளியாகி உள்ளது. Sacnilk.com நிலவரப்படி இந்த திரைப்படம் ரூ.500 கோடியை வசூலை நோக்கி செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் ரிஷப் ஷெட்டி தொடர்பான பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. பெரும்பாலும் நடிகர், நடிகைகள் பெரிய பெரிய நகரங்களில் வாழ்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். தென்மாநிலங்களை சேர்ந்த நடிகர், நடிகைகள் சென்னை, பெங்களூர், மும்பை, ஹைதராபாத், திருவனந்தபுரம், கொச்சி உள்ளிட்ட நகரங்களில் சொந்தமாக வீடு வாங்கி அல்லது வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகின்றனர்.
தங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் உடனடியாக கிடைக்கும் என்பதால் நடிகர், நடிகைகளின் முதல் சாய்ஸாக பெரிய பெரிய நகரங்கள் குறிப்பாக மாநிலத்தின் தலைநகர்கள் உள்ளன.கர்நாடகா நடிகர், நடிகைகள் பெரும்பாலானவர்கள் பெங்களூரில் வசித்து வருகின்றனர்.
இதற்கு காந்தாரா நடிகர் ரிஷப் ஷெட்டி விதிவிலக்காக உள்ளார். அவர் பெங்களூரில் வசிக்கவில்லை. மாறாக தனது சொந்த ஊரிலேயே வசித்து வருகிறார். பெங்களூர் வாழ்க்கை வேண்டாம் என்று அவர் தனது குடும்பத்துடன் சொந்த ஊரில் இருப்பதன் பின்னணி பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக ரிஷப் ஷெட்டி அளித்த பேட்டியில், ‛‛நான் என் மனைவி பிரகதி ஷெட்டி, குழந்தைகள் ரன்வித், ராத்யா ஆகியோருடன் குந்தாபுராவில் வசித்து வருகிறேன். எனது குழந்தைகள் அங்குள்ள பள்ளியில் தான் படிக்கின்றனர். கடந்த 5 ஆண்டுகளாக எனது குடும்பம் மட்டுமின்றி இந்த காந்தாரா திரைப்பட குழுவினர் அங்கு தான் வசித்து வருகிறோம். காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் வெளியாகி ஹிட் அடித்துள்ளது. இனியும் கிராமத்தில் தொடர்ந்து வாழ்வதா, இல்லையா என்பது பற்றி இன்னும் முடிவு எடுக்கவில்லை.
குழந்தைகள் பள்ளி செல்கின்றனர். அவர்களின் இங்கேயே தொடர்வதா இல்லாவிட்டால் பெங்களூரில் படிக்க வைப்பதா என்பது பற்றி அடுத்த மார்ச் மாதத்துக்கு பிறகு முடிவு எடுக்கப்படும். என் குழந்தைகள் பரபரப்பான நகர வாழ்க்கையை அனுபவித்த பிறகு இப்போது கிராமத்தில் அமைதியான அதேவேளையில் அனைவருடனும் நெருக்கமான வாழ்க்கையை அனுபவித்து வருகின்றனர்'' என்றார்.
ரிஷப் ஷெட்டி கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டம் குந்தாபுரா தாலுகாவில் உள்ள கேரடி கிராமத்தில் பிறந்தார். இந்த கிராமம் என்பது மூகாம்பிகை வனவிலங்கு சரணாலயத்திற்கு அருகே அமைந்துள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் கிராமம் இதுவாகும்.
இந்நிலையில் தான் ரிஷப் ஷெட்டி குந்தாபுராவிலேயே தனது மனைவி, குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இங்கு காந்தாரா திரைப்படங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த 5 ஆண்டுகளாக ரிஷப் ஷெட்டி குந்தாபுராவில் குடும்பம் மற்றும் படக்குழுவினருடன் வசித்து வந்தார்.
முன்னதாக ரிஷப் ஷெட்டி முதலில் பெங்களூரில் தான் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். அதாவது குந்தாபுராவில் பள்ளி படிப்பை முடித்த ரிஷப் ஷெட்டி பெங்களூரில் விஜயா கல்லூரியில் பிகாம் படிப்பை முடித்தார்.
பிறகு பல்வேறு வேலைகளை செய்தார். ரிஷப் ஷெட்டி இயக்குநர், நடிகராக எளிதாக வரவில்லை. அவர் முதலில் மும்பையில் டிரைவராகவும், ஆபிஸ் பாயாகவும் பணியாற்றினார். மீண்டும் பெங்களூர் வந்து தண்ணீர் கேன் விற்பனை, ஹோட்டல் வேலை, ரியல் எஸ்டேட் பணிகளை செய்தார்.
அதன்பிறகு அவர் உதவி இயக்குநராக பணியாற்றினார். நடிகரும், இயக்குநருமான ரக்சித் ஷெட்டியுடன் ஏற்பட்ட பழக்கத்தால் அவர் நடிக்க தொடங்கினார். 2012ல் துக்லக் திரைப்படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார். அதன்பிறகு பல திரைப்படங்களில் நடித்தார். ஹீரோவாக அவர் முதன் முதலில் ‛பெல் பாட்டம்' என்ற திரைப்படத்தில் நடித்தார்.
2019ல் வெளியான இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பிறகு சில திரைப்படங்களில் நடித்த அவர் ‛காந்தாரா', ‛காந்தாரா சாப்ட்டர் 1' படங்களால் புகழின் உச்சிக்கு சென்ற நிலையில் தற்போது அவர் பெங்களூரை தவிர்த்து குந்தாபுராவிலேயே வசித்து வருகிறார்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications