கர்நாடக தேர்தல்! அனைத்து சர்வேக்களும் சொல்வது ஒன்றை தான்.. காங். பாஜக.. யாருக்கு நல்ல செய்தி?
கர்நாடக சட்டசபைத் தேர்தல் குறித்து வெளியாகும் பல கருத்துக்கணிப்புகள் ஒரே முடிவே வரும் என்று சொல்கிறது
பெங்களூர்: இந்த ஆண்டு நடைபெறும் கர்நாடக சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இதுவரை வந்த அனைத்து கருத்துக்கணிப்புகளும் பாஜகவை விடக் காங்கிரஸ் கட்சிக்கே முன்னிலை கிடைத்துள்ளது.
அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெறும் நிலையில், அதற்கு முன்னதாக இந்தாண்டு பல மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் கர்நாடக தேர்தல் பாஜகவுக்கு முக்கியமானது.
ஏனென்றால் இதுவரை தென்மாநிலங்களில் பாஜக ஆட்சியை அமைத்த ஒரே மாநிலமான கர்நாடகா உள்ளது. இதனால் அங்கு எப்படியாவது ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ளவே பாஜக விரும்பும்.

கர்நாடகா
இருப்பினும், இதுவரை கர்நாடகாவில் இருந்து வெளியாகும் தகவல்கள் பாஜகவுக்கு நல்லதாக இல்லை. அங்கு மக்கள் மத்தியில் மரியாதைக்குரிய தலைவராக இருந்தவரும் பாஜக கடந்த காலங்களில் கர்நாடகாவில் வேரூன்றக் காரணமாக இருந்தவர் எடியூரப்பா.. இருப்பினும், பல்வேறு காரணங்களால் பாஜக அவரை முதல்வர் பதவியில் இருந்து நீக்கியது. அவருக்குப் பதிலாக பசவராஜ் பொம்மைக்கு முதல்வர் பதவி கொடுத்தனர். இருப்பினும், அவரது அரசின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் பாஜகவுக்கு மிகப் பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ்
மேலும், பாஜக தலைவர்களிடையே நிலவும் உட்கட்சி பூசல் அவர்களுக்கு மற்றொரு சிக்கலாகும். அங்குக் காங்கிரஸில் சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் ஆகியோருக்கு மக்கள் ஆதரவும் அதிகரித்து வருகிறது. இதுவரை வெளியான கருத்துக்கணிப்புகளிலும் இதுவே தெரிய வந்துள்ளது. மேலும், பாஜக மற்றும் காங்கிரஸ் நடத்தித் தனிப்பட்ட கருத்துக் கணிப்புகளிலும் காங்கிரஸ் கட்சிக்கே வெல்ல அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மாநில உளவுத்துறை நடத்திய சர்வேவிலும் இதே முடிவுதானாம்.

கருத்துக்கணிப்பு
பாஜக கடைசிக் கட்ட தேர்தல் யுக்திகள் அவர்களுக்குக் கைகொடுக்காவிட்டால், தற்போதைய சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சியே தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் என்பதையே இந்தக் கருத்துக்கணிப்புகள் காட்டுகிறது. சமீபத்தில் ஐபிஎஸ்எஸ் என்ற அமைப்பு நடத்திய கருத்துக்கணிப்பில், காங்கிரஸ் 108-114 இடங்களில் வெல்லும் என்று கூறப்பட்டுள்ளது. அதேநேரம் பாஜக வெறும் 65-76 இடங்களில் மட்டுமே வெல்ல வாய்ப்புள்ளது. ஜேடிஎஸ் அதிகபட்சம் 24-3. இடங்களில் வெல்லும் என்று கூறப்பட்டுள்ளது.

வாக்கு சதவிகிதம்
வாக்கு வங்கியைப் பொறுத்தவரைக் காங்கிரஸ் கட்சி கடந்த கடந்த தேர்தலில் 38% வாக்குகளைப் பெற்ற நிலையில், இந்த முறை அது 40%ஆக அதிகரிக்கும். அதேநேரம் கடந்த தேர்தலில் 36% வாக்குகளைப் பெற்ற பாஜகவுக்கு இந்த முறை 34% வாக்குகள் மட்டுமே கிடைக்கும். ஜேடிஎஸ் கட்சியின் வாக்கும் 18%இல் இருந்து 17% குறையும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இப்படி இதுவரை வெளியான அத்தனை சர்வே-க்களிலும் காங்கிரஸ் கட்சியே வெல்ல வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

முக்கிய பிரச்சினைகள்
வரும் சட்டசபைத் தேர்தலில் பணவீக்கம், விவசாயிகள் பிரச்சனைகள், விவசாயக் கடன்கள், விவசாய பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் போவது. வேலையில்லா திண்டாட்டம், ஊழல் உள்ளிட்டவை முக்கிய பிரச்சினையாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி எல்பிஜி, பெட்ரோல் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, மதுபான கடத்தில், மருத்துவ கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் இருப்பது, ரியல் எஸ்டேட் மாஃபியா, வகுப்புவாத சம்பவங்கள், 40% கமிஷன் குற்றச்சாட்டு, உள்ளிட்டவையும் பாஜகவுக்குத் தலைவலியைக் கொடுக்கிறது.

என்ன காரணம்
மேலும், பாஜகவின் கர்நாடக முகமாக இருந்த எடியூரப்பா, உட்கட்சி பூசல் காரணமாக முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதும் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் தற்போதைய முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு மக்களிடையே பெரிய ஆதரவு இல்லை.. அதேபோல லிங்காயத் சமூகத்தினர் மத்தியிலும் முழு ஆதரவு அவருக்கு இல்லை. அதேபோல காங்கிரஸ் கட்சி சித்தராமையா மற்றும் டிகே சிவகுமார் தலைமையில் மாநிலத்தில் நல்ல செல்வாக்கைப் பெற்று வருகிறது. இத்துடன் குருபா, பட்டியல், பழங்குடி, முஸ்லீம் மற்றும் ஓபிசி சமூகங்கள் ஆதரவும் காங்கிரஸ் கட்சிக்கே அதிகம் உள்ளது.

பாஜக, காங்கிரஸ்
பாஜக சார்பில் நடத்திய சீக்ரெட் சர்வே-இல் கூட காங்கிரஸ் 90 இடங்களிலும் ஜேடிஎஸ் 30 இடங்களிலும் வெல்லும் என்று கூறப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.. இதுமட்டுமின்றி சுமார் 40 இடங்களில் இழுபறி நிலவும் என்று கூறப்பட்டுள்ளது. இது காங்கிரஸ் கட்சிக்கே சாதகமாக அமைகிறது. காங்கிரஸ் நடத்திய சீக்ரெட் சர்வே-இல் அக்கட்சி 120 இடங்கள் வரை வெல்ல வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது பழைய மைசூர் பகுதி மட்டுமே காங்கிரஸுக்கு இப்போது சற்று சிக்கலாக உள்ளது. அங்குக் காங்கிரஸ் வாக்குகளை ஜேடிஎஸ் பெற வாய்ப்பு உள்ளதாம். இருப்பினும், அனைத்தையும் தாண்டி காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக உருவாகவே வாய்ப்புகள் அதிகம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications