கர்நாடகா தேர்தல்.. கன்னட நடிகர், கிரிக்கெட் வீரர்களுடன் பிரதமர் மோடி இரவு விருந்து.. பின்னணி என்ன?
கர்நாடாகா மாநிலத்துக்கு விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் மோடி கிரிக்கெட் வீரர்கள், நடிகர்களை சந்தித்து இரவு விருந்து வழங்கினார்.
பெங்களூரு: கர்நாடகா சட்டசபைக்கு இன்னும் 2 அல்லது 3 மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடி கன்னட நடிகர்களான ‛கேஜிஎப்' ஹீரோ யஷ், ‛காந்தாரா' இயக்குனரும், ஷீரோவுமான ரிஷப் ஷெட்டி, கர்நாடகாவை சேர்ந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்களான அனில் கும்ப்ளே, ஜவகல் ஸ்ரீநாத், வெங்கடேஷ் பிரசாத், தற்போதைய கிரிக்கெட் வீரர்களான மணிஷ் பாண்டே, மயங்க் அகர்வால் உள்ளிட்ட பலபேரை சந்தித்து பேசியதோடு, அவர்களோடு சேர்ந்து இரவு உணவு சாப்பிட்டது அரசியல் களத்தில் பேசும்பொருளாகி உள்ளது. இந்த சந்திப்பின்போது என்ன நடந்தது? என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடகா மாநில சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும் முனைப்பில் பாஜக முக்கிய நகர்வுகளை மேற்கொண்டு வருகிறது. தொகுதி வாரியாக சர்வேக்கள் மேற்கொண்டு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளவர்களை மட்டுமே வேட்பாளர்களாக நிறுத்தவும், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் சர்ச்சைகளில் சிக்கியவர்களுக்கு சீட் வழங்காமல் இருப்பது தொடர்பாகவும் பாஜக பரிசீலனை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க காங்கிரஸ் கட்சியும் கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் உள்ளது. 2013 முதல் 2018 வரை காங்கிரஸ் ஆட்சி கர்நாடகாவில் நடந்த நிலையில் 2018 தேர்தலில் யாருக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில் இழந்த ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது. மேலும் தற்போதைய சர்வேக்கள் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக உள்ளதால் அக்கட்சி தலைவர்கள் உற்சாகமாக பணியாற்றி வருகின்றனர்.

நேரடி கவனம் செலுத்தும் மோடி, அமித்ஷா
இந்நிலையில் கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாஜகவின் வெற்றி என்பது இந்த முறை எளிதாக இருக்காது என கூறப்படுகிறது. அரசு மீதான 40 சதவீத கமிஷன் புகார், பாஜக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் கமிஷன் கேட்பதாக கூறி ஒப்பந்ததாரர்கள் தற்கொலை செய்தது உள்ளிட்ட சம்பவங்கள் பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது. இதனால் தான் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் நேரடியாக களத்தில் இறங்கி உள்ளனர். கடந்த சில வாரங்களாக இருவரும் அடிக்கடி கர்நாடகா சென்று வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நலத்திட்ட பணிகளை துவங்கி வைத்து வருகிறார். மேலும் அவரும் அமித்ஷா போன்று பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசி வருவதோடு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார். 2024ல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் கர்நாடகாவில் ஆட்சியை தக்க வைக்க வேண்டியது முக்கியம். இது நடந்தால் அண்டை மாநிலங்களிலும் பாஜகவின் செல்வாக்கை உயர்த்தலாம் என்பது ‛தாமரை' கட்சியின் மேலிட திட்டமாகும். இதனால் கர்நாடகா தேர்தலில் பாஜக மேலிடம் அதிக கவனம் செலுத்தி வருகிறது.

பிரதமர் மோடியின் இரவு விருந்து
இதற்கிடையே தான் தற்போது கர்நாடகா அரசியலில் ஒன்று பேசும்பொருளாகி உள்ளது. அதாவது 5 நாள் பெங்களூரு சர்வதேச விமான கண்காட்சியை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் கர்நாடகா சென்றார். அவர் பெங்களூரில் உள்ள ஆளுநர் மாளிகையில் தங்கினார். இந்த வேளையில் பிரதமர் நரேந்திர மோடி கர்நாடகாவில் சினிமா, விளையாட்டு, சமூக வலைதள பிரபலங்கள் என 20க்கும் அதிகமானவர்களை சந்தித்து பேசியதோடு அவர்களுக்கு இரவு விருந்து அளித்தார்.

நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள்
இந்த விருந்தில் ‛கேஜிஎப்' பட ஹீரோ யஷ், ‛காந்தாரா' படத்தின் இயக்குனரும், நடிகருமான ரிஷப் ஷெட்டி, மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் மனைவி அஸ்வினி, யூடியூப் பிரபலம் ஷ்ரத்தா ஜெயின், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே, முன்னாள் வீரர்கள் ஜவகல் ஸ்ரீநாத், வெங்கடேஷ் பிரசாத், தற்போதைய கிரிக்கெட் வீரர்களான மணிஷ் பாண்டே, மயங்க் அகர்வால் உள்ளிட்டோர் பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்தித்தனர். மேலும் ஏத்தர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தருண் மேத்தா, ஜெரோதா நிறுவன இணை நிறுவனர் நிகில் காமத் உள்ளிட்டோரையும் பிரதமர் மோடி சந்தித்தார்.

விவாதித்தது என்ன?
இந்த சந்திப்பின்போது நடிகர்களிடம் கன்னடம், கலாசாரம், சினிமா, நாடகம், திரைத்துறை குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். மேலும் கிரிக்கெட் வீரர்களுடன் விளையாட்டுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் குறித்தும், இளைஞர்களுக்கு ஊக்கம் அளிப்பது பற்றியும் விவாதித்துள்ளது. இதுதவிர தொழில் அதிபர்களுடன் தொழில் வாய்ப்புகள் குறித்தும் பிரதமர் மோடி ஆலோசித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் கூட இந்த சந்திப்பு என்பது சாதாரண ஒன்றாக கருதப்படவில்லை. கர்நாடகாவுக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதனை மனதில் வைத்தே இந்த சந்திப்பு என்பது நிகழ்த்தப்பட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

பின்னணியில் அரசியல்?
மேலும் கர்நாடகா தேர்தலில் வெற்றி பெற அனைத்து தரப்பு மக்களின் ஆதரவுகளும் பாஜகவுக்கு வேண்டும் என்பதை அக்கட்சி புரிந்து கொண்டுள்ள நிலையில் தான் திரைதுறையினர், விளையாட்டு வீரர்கள், தொழில் அதிபர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து இரவு விருந்து அளித்துள்ளதாகஎதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகிறார். மேலும் தற்போதைய சந்திப்பை பாஜக தேர்தலுக்கான விளம்பரமாக மாற்றி மக்களின் ஓட்டுக்களை அறுவடை செய்ய இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி உள்ளது. இதுபற்றி காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரான மல்லிகார்ஜூன கார்கேவின் மகனும் காங்கிரஸ் கட்சியின் அமைச்சருமான பிரியங்க் கார்கே கூறுகையில், ‛‛இன்னும் சில மாதங்களில் கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. பிரதமர் மோடி பிரபலங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். இது ஒருவகையான தேர்தல் விளம்பரம்தான். இதனால் கர்நாடக மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காது'' என விமர்சனம் செய்துள்ளார்.
-
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்!












Click it and Unblock the Notifications