தமிழ்நாட்டுக்கு எதுக்குங்க தண்ணீர்? போராட்டத்தில் குதித்த பாஜக.. கர்நாடகாவில் உச்சக்கட்ட பதற்றம்!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: தமிழகத்திற்கு 4.5 டிஎம்சி தண்ணீரை திறக்க கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது. இந்நிலையில், இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கக்கூடாது என்று வலியுறுத்தி பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவுக்கு தென்மேற்கு பருவமழை கை கொடுக்கவில்லை. இதனால் கர்நாடகாவின் அணைகள் போதுமான கொள்ளவை எட்டவில்லை. இதை காரணம் காட்டி, தமிழகத்திற்கு தண்ணீர் திறக்காமல் இருந்து வருகிறது கர்நாடகா.

Karnataka BJP

மழை இருக்கோ இல்லையோ.. இருக்கிற தண்ணீரில் பங்கு கொடுக்க வேண்டும் என்பதுதான் காவிரி ஒழுங்காற்றுக்குழு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு. இதை கர்நாடக அரசு செயல்படுத்தாததால், உச்சநீதிமன்றத்தை நாங்கள் நாடுவோம் என்று தமிழ அரசு அறிவித்திருக்கிறது. உச்சநீதிமன்றம் போனால்.. தலையில் குட்டு வைத்து கர்நாடகாவை தண்ணீர் திறக்க சொல்லும்.

இப்படி இருக்கையில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடக்கூடாது என்று பாஜகவினர் போராட்டத்தில் இறங்கியிருக்கின்றனர். மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா அருகே உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையை, பாஜக தலைவர் விஜயேந்திரா, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அசோகா, முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா, மேலவை எதிர்க்கட்சித் தவைலர் செலவாதி நாராயணசாமி உள்ளிட்டோர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பாஜகவினருடன் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களை கைது செய்த காவல்துறை, மாலையில் விடுவித்தது. பாஜக தலைவர் விஜயேந்திரா இது குறித்து கூறுகையில், "கர்நாடகத்தில் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு கடும் நீர் பற்றாக்குறை இருக்கும் நிலையில், முதல்வர் சிவகுமார் தலைமையிலான காங்கிரஸ் அரசு விவசாயிகளின் நலனை பாதுகாக்க தவறிவிட்டது. டெல்லிக்கு பலமுறை பயணம் மேற்கொண்டும் விவசாயிகளுக்கு நீதி பெற தவறிவிட்டது" என்று குற்றம்சாட்டியிருக்கிறார்.

"காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் இந்த உத்தரவை எதிர்த்து உடனடியாக உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டும். கர்நாடக மக்களின் நலனை பாதுகாக்க ஒரு சொட்டு நீரை கூட திறக்க மாட்டோம் என்கிற நிலைப்பாட்டை அரசு உடனடியாக எடுக்க வேண்டும்" என்று எடியூரப்பா கூறியிருக்கிறார். அதேபோல, காங்கிரஸ் அரசு விவசாயிகளின் நலனை அடகு வைத்துவிட்டதாகவும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அசோகா குற்றம்சாட்டியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+