நீண்ட சட்டை-வேஷ்டி தான் அடையாளமே! சித்தராமையா ‛பேவரைட்’ உடையின் ரகசியம் தெரியுமா? காரணம் இதுதான்!
பெங்களூர்: கர்நாடகா முதல்வராக பதவியேற்கு சித்தராமையா எப்போதும் நீண்ட சட்டை மற்றும் வேஷ்டி அணிவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். பெரும்பாலான அரசியல்வாதிகள் தாங்கள் அணியும் ஆடைகளுக்கு பின்னால் ஏதேனும் ஒரு காரணத்தை வைத்துள்ளனர். அதேபோல் சித்தராமையாவின் உடை அலங்காரத்துக்கு பின்னாலும் முக்கிய காரணம் உள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு அரசியல்வாதிகளுக்கும் ஒவ்வொரு அடையாளம் உள்ளது. குறிப்பாக உடையை வைத்தே அரசியல்வாதியை அடையாளம் கண்டுகொள்ளலாம். உதாரணமாக முதல்வர் ஸ்டாலின், கேரளா முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டவர்கள் வேஷ்டி, சட்டை அணிவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி என்றால் வெள்ளை சட்டை, கருப்பு பேண்ட் அணிவதை பழக்கமாக வைத்துள்ளார். தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் என்றால் வெள்ளைநிற சட்டை, வெள்ளை பேண்ட் அணிவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார்.
அதேபோல் கர்நாடகாவில் காபந்து முதல்வராக உள்ள பசவராஜ் பொம்மை குர்தா அணிவதையும், முன்னாள் முதல்வர் எடியூரப்பா வெள்ளை நிற சட்டை, வெள்ளை நிற பேண்ட் அணிவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் தான் இன்று கர்நாடகா முதல்வராக பதவியேற்கும் சித்தராமையாவுக்கு ஒரு தனி ஸ்டைல் உள்ளது. அதாவது குர்தா வகையில் சற்று மாறுபட்ட நீண்ட சட்டை அணிந்து வேஷ்டி உடுப்பதை அவர் வாடிக்கையாக வைத்துள்ளார்.
முக்கிய நிகழ்வுகளின்போது பட்டு வேஷ்டி, சட்டை அணியும் சித்தராமையா மீதமுள்ள நாட்களில் பருத்தியில் உற்பத்தியான இந்த வகை ஆடைகளை அவர் அணிந்து வருகிறார். இந்நிலையில் தான் சித்தராமையா அணியும் உடையின் பின்னணியில் ஒரு காரணம் உள்ளது. இதுபற்றி சித்தராமையாவை சில முறை தெரிவித்துள்ளார்.
அதாவது சித்தராமையா இதற்கு முன்பு தோல் அலர்ஜி பிரச்சனையை சந்தித்துள்ளார். குறிப்பாக குளிர்காலத்தில் தோல் உலர்ந்து அரிப்பு எடுத்துள்ளது. இதற்காக அவர் டாக்டர்களை அணுகியுள்ளார். அப்போது டாக்டர்கள் தான் பருத்தி வகை ஆடைகள் அணிய கூறியுள்ளனர். இதைத்தொடர்ந்து சித்தராமையா தனது விதவிதமான ஆடை அலங்காரத்தை கைவிட்டுள்ளார்.
மாறாக சித்தராமையா நீண்ட சட்டை அணிந்து வேஷ்டிக்கு கெட்டப்புக்கு மாறினார். தற்போது அதுவே அவரது அடையாளமாக மாறிப்போய் உள்ளது. இன்றைய பதவியேற்பு விழாவிலும் கூட சித்தராமையா தனது அடையாளமாக இருக்கும் குர்தா வகை நீண்ட சட்டை மற்றும் வேஷ்டி அணிந்து தான் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications