கர்நாடக பட்ஜெட்டின்போது காங். எம்எல்ஏக்கள் ராஜினாமா?.. பரபர பெங்களூரு.. லொள்ளு செய்யும் லோட்டஸ்!
Recommended Video

பெங்களூரு: கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி அரசி எப்படியும் கவிழ்த்தே தீருவது என்பதில் கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கிறது கர்னாடக பாஜக. மூன்று முறை மூக்கறுபட்ட ஆபரேஷன் தாமைரையை மீண்டும் கொண்டு வருகிறார்கள். அடுத்த மாதம் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆரம்பித்ததுமே காங்கிரஸ் எம் எல் ஏக்கள் 6 பேரை ராஜினாமா செய்ய வைக்கும் திட்டம் படு வேகமாக அரங்கேற்றப் பட்டுகொண்டிருப்பதாக கர்னாடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மே மாதம் இங்கு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது இதில் பாஜ 104இடங்களிலும் , காங்கிரஸ் 79 இடங்களிலும், மஜத 37 இடங்களிலும் மற்றும் சுயேச்சைகள் 2 இடங்களிலும் வெற்றி பெற்றனர். இதில் அவ்வப்போது அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் மாற்றம் நடைபெறும்போது பதவி இழந்தவர்கள் மற்றும் அதிருப்தியாளர்களை வைத்து பாஜக ஆட்டம் காட்டி வருகிறது.

கடந்த முறை செய்யப்பட அமைச்சரவை மாற்றத்தில் காங்கிரஸ் கட்சியின் ரமேஷ் ஜார்கிஹோளி, சுயேச்சை எம் எல் ஏ சங்கர் ஆகியோரின் பதவி பறிக்கப்பட்டது. பெல்லாரி தொகுதி எம்.எல்.ஏ-வான துக்காராமுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் சுயேச்சை எம் எல் ஏக்கள் சங்கரும் நாகேசும் அரசுக்கான ஆதரவை விலக்கி கொள்வதாக கூறி ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர். அதோடு துக்காராமுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டதால் இன்னொரு காங்கிரஸ் எம்.எல்.ஏ-வான நாகேந்திராவும் பிற காங்கிரஸ் எம் எல் ஏ க்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதை சாதகமாக்கிய பாஜக அதி தீவிரமாக களமிறங்கியது. ஆபரேஷன் தாமரை' மூலம் 2 சுயேச்சைகள் மட்டுமின்றி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 12 பேரையும் இழுத்துக் கொள்ள அனைத்து முயற்சிகளையும் பாஜக மேற்கொண்டது.

அடுத்த அஸ்திரமாக காங்கிரஸ் எம் எல் ஏக்கள் இருவரிடையே கைகலப்பு ஏற்பட்ட்டது இதையும் தங்களுக்கு சாதகமாக்கிய பாஜக காங்கிரஸ் எம்எல்ஏ ஆனந்த் சிங்கை தாக்கிய வழக்கில் தலைமறைவாக உள்ள எம்எல்ஏ கணேஷிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அதோடு இதுவரை சுயேச்சை எம் எல் ஏக்கள் இருவரை தங்கள் பக்கம் இழுத்துவிட்ட பாஜக அதிகாரப் பூர்வமாக தங்கள் பக்கம் உள்ள காங்கிரஸ் எம் எல் ஏக்கள் 6 பேரை ராஜினாமா செய்ய வைக்க திட்டமிட்டுள்ளதாக பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.
வரும் மக்களவை தேர்தலுக்கு முன்னதாக இத்திட்டத்தை அரங்கேற்றவும் அறிவுறுத்தப் பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இதற்கிடையே அடுத்த மாதம் 8-ம் தேதி கர்நாடகாவின் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கவுள்ளது. இந்த கூட்டத் தொடர் தொடங்கவுள்ள அன்றே தங்களுக்கு சாதகமாக உள்ள எம் எல் ஏக்கள் 6 பேரையும் ராஜினாமா செய்ய வைத்து அதன் பின் நமிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளனர்.

இப்போது கர்னாடக சட்டசபையில் கட்சிகளின் பலம் -
பாஜக -104
காங்கிரஸ் -80
மத சார்பற்ற ஜனதா தளம் - 37
பகுஜன் சமாஜ் - 01
சுயேச்சை - 02
இதில் காங்கிரஸ் கூட்டணியில் - 120 பேர் உள்ளனர். பாஜக ஆட்சியமைக்க வேண்டுமானால் 113 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இப்போது சுயேச்சைகள் இருவர் ஆதரவு அளித்து வரும் நிலையில் இன்னும் 7 உறுப்பினர்களின் ஆதரவு அவர்களுக்கு தேவைப்படும். அது உடனடியாக சாத்தியப்படுமா என்று தெரியவில்லை. காரணம் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடக்கும் பட்சத்தில் கொறடா உத்தரவை காங்கிரஸ் எம் எல் ஏக்கள் மீறினால் அவர்களின் பதவி பறிபோகும். ஆகவே உடனடியாக ஆட்சிக்கு ஆபத்து இல்லை. இருந்தாலும் கர்னாடக அரசின் மீது கத்தி தொங்கி கொண்டிருப்பதை தவிர்க்க முடியாது
-
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
ஒரே நாளில் 13 லட்சம் உறுப்பினர்கள்.. குவியும் ஆதரவு.. நன்றி தெரிவித்த அண்ணாமலை! -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
சும்மா தூக்கிக் கொடுக்கல விஜய்.. காங்கிரஸுக்கு எதுக்கு எம்பி பதவி! தவெகவின் டெல்லி ‘மாஸ்டர்’ ப்ளான்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல..பெட்டியை கட்டும் செல்வப் பெருந்தகை! பதவிக்கு போட்டி போடும் பெரும் தலைகள் -
டிகே சிவக்குமாருக்கு அடுத்த ஷாக்.. ராமலிங்க ரெட்டியை தொடர்ந்து இன்னொரு அமைச்சர் ராஜினாமா? கர்நாடகாவில் குழப்பம் -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
ராகுல், விஜய்க்கு நெருக்கம்.. ராஜ்யசபா எம்பியாகும் பிரவீன் சக்கரவர்த்தி.. யார் இவர்?












Click it and Unblock the Notifications