Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாண்டியா, கோலாரில் "பூஜ்யம்".. அண்ணாமலை வேலை பார்த்த கர்நாடக தொகுதிகளில்... பாஜகவிற்கு செம அடி!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் இன்று சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலை பணியாற்றிய தொகுதிகளில் அக்கட்சி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.

கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. தென்னிந்தியாவில் பாஜக நேரடியாக ஆட்சியில் இருக்கும், பாஜக முதல்வர் ஆட்சியில் இருந்த ஒரே மாநிலம் கர்நாடகாதான். இதனால் தென்னிந்தியாவில் மீண்டும் இதே மாநிலத்தை கைப்பற்றுவதில் பாஜக குறியாக இருந்தது. ஆனால் இந்த தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது.

கர்நாடக அரசியல் 2024 லோக்சபா தேர்தல், தென்னிந்திய அரசியலை நிர்மாணிக்கும் என்பதால் இந்த தேர்தல் முடிவுகள் அதிக கவனம் பெற்றுள்ளது.

1 மாதமாக நடந்த பிரச்சாரம்.. காரசார விவாதம்.. அரசியல் மோதல்கள் எல்லாம் கர்நாடகாவில் முடிவிற்கு வந்துள்ளது. திருவிழாவிற்கு இணையாக கர்நாடகா சட்டசபை தேர்தல் நிறைவு பெற்றுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகள் உள்ளன. அங்கே மெஜாரிட்டி பெற 113 இடங்களில் வெற்றிபெற வேண்டும்.

Will Karnataka assembly election results will affect the political future of Annamalai and What is Delhi plan?

இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் பாஜக 65 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 136 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மஜத மொத்தம் 21 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

அண்ணாமலைக்கு ஏன் முக்கியம்?:அங்கே இருக்கும் கர்நாடக அரசியல் தலைவர்கள்.., அதாவது எடியூரப்பா போன்ற தலைவர்களுக்கு இந்த தேர்தல் எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு இது முக்கியமான தேர்தல். இவர் தமிழ்நாடு பாஜக தலைவர் என்றாலும் கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர் என்பதால் அங்கே தேர்தல் துணை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக கட்சியிலேயே நிர்வாகிகள் பலர் கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றனர். அண்ணாமலை திமுகவின் சொத்து பட்டியல் என்று சில ஆவணங்களை வெளியிட்ட போதும் பாஜக டாப் தலைவர்கள் யாரும் அண்ணாமலைக்கு ஆதரவாக பேசவில்லை.

அதேபோல் அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்திலும் அமர் பிரசாத் ரெட்டியை தவிர அண்ணாமலைக்கு யாரும் ஆதரவாகும் கருத்துக்களை பேசவில்லை. பாஜக உள்ளேயே அண்ணாமலை ஆதரவு கோஷ்டி - அண்ணாமலை எதிர்ப்பு கோஷ்டி என்ற கோஷ்டிகள் உருவாகி உள்ளன.

இப்படிப்பட்ட நிலையில் கர்நாடகா சட்டசபை தேர்தல் அண்ணாமலைக்கு முக்கியமானதாக பார்க்கப்பட்டது. அரசியல் ரீதியாக அண்ணாமலை இதுவரை தன்னை நிரூபிக்கவில்லை. இந்த தேர்தலில்தான் அவர் தனது பலத்தை நிரூபிக்க முடியும்.

கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜகவின் துணை பொறுப்பாளராக அண்ணாமலை நியமிக்கப்பட்டு பணிகளை செய்தார். வேட்பாளர் தேர்வு, வாக்குறுதிகளை முடிவு செய்தது உட்பட பல விஷயங்களில் அண்ணாமலை முக்கிய முடிவுகளை எடுத்தார்.

இந்த தேர்தலில் வென்று தனது ஆளுமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் அண்ணாமலைக்கு ஏற்பட்டு இருந்தது. ஆனால் தேர்தலில் பாஜக மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. டெல்லி இந்த தேர்தல் முடிவுகளை கூர்ந்து கவனித்து வருவதாகவே பாஜக தரப்பு தகவல்கள் தெரிவிக்கும் நிலையில் , அண்ணாமலையின் அரசியல் எதிர்காலத்தை இந்த தேர்தல் தோல்வி கண்டிப்பாக பெரிய அளவில் பாதிக்கும்.

டெல்லி - அண்ணாமலை:தேர்தலில் பணிகளை செய்வதற்காக கர்நாடகாவில் உள்ளதில் 10 மாவட்டங்களில் 86 தொகுதிகள் அண்ணாமலைக்கு வழங்கப்பட்டது. இது எல்லாம் தமிழர்கள் அதிகம் உள்ள தொகுதிகள் ஆகும்.

உடுப்பி- சிக்கமகளூரு 8 தொகுதிகள், தாவணகெரே 7 தொகுதிகள், ஷிவமொகா 7 தொகுதிகள், கோலார் 6 தொகுதிகள், மாண்டியா 7 தொகுதிகள், ஹாசன் 7 தொகுதிகள், தட்சிண கன்னடா 8 தொகுதிகள், பெங்களூரில் 28 தொகுதிகள், உத்தர கன்னடா 6 தொகுதிகள், என்று அண்ணாமலைக்கு ஒதுக்கப்பட்டது.

இந்த தொகுதிகளில் பாஜக பல பகுதிகளில் மோசமாக அடி வாங்கி உள்ளது.

அதன்படி,

தாவணகெரேவில் உள்ள 7 தொகுதிகளில் பாஜக ஒன்றில் மட்டுமே வென்றுள்ளது. காங்கிரஸ் 5ல் வென்றுள்ளது. சுயேட்ச் ஒரு இடத்தில் வென்றுள்ளது.

உடுப்பி - சிக்கமகளூரில் - 4ல் பாஜக வென்றதுள்ளது. 4ல் காங்கிரஸ் வென்றுள்ளது.

ஷிவமொகா 7 தொகுதிகள்- 1ல் பாஜக வென்றதுள்ளது. 6ல் காங்கிரஸ் வென்றுள்ளது.

கோலார் 8 தொகுதிகள்- 5ல் காங்கிரஸ் வென்றதுள்ளது. 3ல் மஜத வென்றுள்ளது. பாஜக எங்கும் வெல்லவில்லை.

மாண்டியா 7 தொகுதிகள் - 6ல் காங்கிரஸ் வென்றதுள்ளது. 1 ல் மஜத வென்றுள்ளது. பாஜக எங்கும் வெல்லவில்லை.

ஹாசன் 7 தொகுதிகள்- 4ல் பாஜக வென்றதுள்ளது. 2ல் காங்கிரஸ் வென்றுள்ளது. 2ல் மஜத

தட்சிண கன்னடா 8 தொகுதிகள்- 6ல் பாஜக வென்றதுள்ளது. 2ல் காங்கிரஸ் வென்றுள்ளது.

பெங்களூரில் 28 தொகுதிகள்- 14ல் பாஜக வென்றதுள்ளது. 13ல் காங்கிரஸ் வென்றுள்ளது. 1ல் ,மஜத வென்றுள்ளது.

உத்தர கன்னடா 6 தொகுதிகள் - 3ல் பாஜக வென்றதுள்ளது. 5ல் காங்கிரஸ் வென்றுள்ளது.

அண்ணாமலை வேலை பார்த்த இடங்களில் பாஜக பெங்களூர், தட்சிண கன்னடா, ஹாசன் தவிர மற்ற இடங்களில் கடும் சரிவை பாஜக சந்தித்து உள்ளது.

Will Karnataka assembly election results will affect the political future of Annamalai and What is Delhi plan?

அண்ணாமலை நம்பிக்கை:அண்ணாமலையை டெல்லி தீர்க்கமாக நம்புகிறது என்பது சமீபத்தில் நடந்த அண்ணாமலை - அமித் ஷா - எடப்பாடி சந்திப்பிலேயே உறுதியானது. இருந்தாலும், அண்ணாமலை டெல்லியிடம் நல்ல பெயர் வாங்க இந்த கர்நாடக தேர்தல் முக்கியமானதாக பார்க்கப்பட்டது.

இதில் அண்ணாமலை கட்டுப்பாட்டில் உள்ள ஒரு தொகுதிதான் புலிகேசி தொகுதி. தமிழர்கள் அதிகம் உள்ள இந்த தொகுதியில் அதிமுக, திமுகவிற்கு கூட ஆதரவாளர்கள் உள்ளனர். இந்த நிலையில்தான் தமிழர்கள் அதிகம் இருக்கும் புலிகேசி நகரில் தனித்து போட்டியிட அதிமுக முடிவு செய்து கடைசியில் பின்வாங்கியதும் குறிப்பிடத்தக்கது.

இங்கே அதிமுக ஆதரவு இருந்தும் பாஜக வேட்பாளர் முரளி வெறும் 10624 வாக்குகள்தான் பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரீனிவாசா 87316 வாக்குகள் பெற்று வென்றார்.

இப்படி கர்நாடக தேர்தல் முடிவுகள் பாஜகவிற்கு எதிராக உள்ள நிலையில் இது அண்ணாமலை அரசியலை எப்படி பாதிக்கும் என்று கேள்வி எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+