லீவு கிடைக்கல.. கனடாவில் உள்ள இளைஞருடன்.. ஆன்லைனில் நடந்த நிச்சயதார்த்தம்!
பெங்களூர்: காலம் வேகமாக மாறி வரும் சூழலில், ஆன்லைனில் எல்லா வேலைகளும் நடந்து வருகின்றன. ஆனால், அதற்காக நிச்சயதார்த்தத்தை கூட ஆன்லைனில் நடத்தினால் எப்படி? ஆம், வேறு வழியின்றி நடந்திருக்கிறது. இந்த சம்பவம் சோஷியல் மீடியாவில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
பெங்களூர் தெற்கு சக்ரபாவி கிராமத்தை சேர்ந்தவர் சுகாஷ். இவர் கனடாவில் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் உடுப்பியை சேர்ந்த இளம்பெண் மேக்னாவுக்கும் திருமணம் செய்வது என்று பெற்றோர்கள் பேசி முடிவெடுத்திருக்கின்றனர்.

ஆனால், இங்குதான் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. உடல்நலம் சரியில்லை என்று லீவு கேட்டால் கூட, வேண்டா வெறுப்பாக, வாட்ஸ்அப்பில் கனெக்டிங்கில் இருங்கள் என்று கூறி விடுப்பு வழங்கும் இந்த கார்ப்பரேட் உலகில், நிச்சயதார்த்தம் என்று மாப்பிள்ளை சுகாஷ் லீவு கேட்க.. வாய்ப்பில்லை ராஜா என்று சொல்லி நிறுவனம் விடுமுறையை மறுத்திருக்கிறது. ஒரு பக்கம் பெற்றோர்கள் பேசி தேதியை குறித்துவிட்டார்கள். மறுபுறம் மணமகள் மேக்னா, போன்மேல் போன் போட்டு ஊருக்கு வருவீர்களா? என்று விசாரித்துக்கொண்டே இருக்கிறார்.
ஆனால், தற்போது வரை லீவு கிடைக்கவே இல்லை. யோசித்து பார்த்த சுகாஷுக்கு சட்டென ஓர் ஐடியா தோன்றியது. ஆன்லைனில் நிச்சயதார்த்தம் செய்தால் என்ன? என்பதுதான் அந்த யோசனை.
விஷயத்தை பெற்றோர்களிடம் சொல்ல, அவர்கள் அப்படியே நிராகரித்துள்ளனர். இருப்பினும் என்ன செய்வது? லீவு கிடைக்கவில்லை. நல்ல சம்பந்தத்தையும் விட முடியாது. எனவே, ஆன்லைனில் முடித்துக்கொள்ளலாம் என்று ஓகே சொல்லிவிட்டார்கள். இதனையடுத்து உடுப்பியில் உள்ள மண்டபத்தில் நிச்சயதார்த்தத்திற்கான ஏற்பாடுகள் நடந்தன. மண்டபத்தில் பெரிய பெரிய எல்இடி டிவிகள் வைக்கப்பட்டன. மேடையில் மணமகள் மேக்னா மற்றும் அவரது உறவினர்களும், மாப்பிள்ளை சுகாஷின் பெற்றோரும் இருந்திருக்கின்றனர்.
மந்திரங்கள் முழங்க நிச்சயதார்த்தம் தொடங்கியது. மாப்பிள்ளை கனடாவிலிருந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிறார். இந்த நிகழ்வுக்கு வந்திருந்த உறவினர்களுக்கு இது வித்தியாசமான அனுபவமாக இருந்திருக்கிறது.
இந்திய நேரத்திற்கும், கனடாவின் நேரத்திற்கும் 9-13 மணி நேரம் வித்தியாசம் இருக்கும். உடுப்பியில் மதியம் 12 மணிக்கு நிகழ்ச்சி நடந்த நிலையில், கனடாவில் மாப்பிள்ளை சுகாஷ் நள்ளிரவு 12 மணிக்கு நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிறார்.
உணவு தொடங்கி எல்லாம் ஆன்லைனில் டெலிவரி என்று வந்துவிட்ட நிலையில், தற்போது நிச்சயதார்த்தம் கூட ஆன்லைனில் நடந்திருப்பது நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களிடம் பேசுபொருளாகியுள்ளது.
-
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
ஒரு சொட்டு கூட பெட்ரோல் இருக்காது.. ஆனாலும் வண்டி பட்டாசாக ஓடும்.. அதென்ன E100 எரிபொருள்? -
சீனா, பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்த இந்தியா! 2 நாட்களில்.. 3 ஏவுகணை சோதனைகள்! DRDO அசத்தல்! -
கோட்டைக்கு வரும் புது மாப்பிள்ளை.. மணமகன் தேடும் இளம் பெண் அமைச்சர்.. ஜோதிடர்களுடன் தீவிர ஆலோசனை! -
100% எத்தனால் எரிபொருள்.. கிரீன் சிக்னல் கொடுத்த மத்திய அரசு! பெரிய பிரச்சனை.. மக்களே உஷார்! -
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா?












Click it and Unblock the Notifications