நடிக்க வாய்ப்பு தருவதாக இளம்பெண்ணுடன் உல்லாசம்.. சிக்கிய தமிழ் நடிகர்
பெங்களூர்: பெங்களூரில் அழகு நிலையத்தில் பணியாற்றி வரும் இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகவும், திரைப்படத்தின் மூலம் நடிகை வாய்ப்பு பெற்று தருவதாகவும் கூறி உல்லாசம் அனுபவித்து நெருக்கமாக இருக்கும் போட்டோ மற்றும் வீடியோ வைத்து மிரட்டியதாக தமிழ் திரைப்படங்களில் நடித்த நடிகர் சந்தோஷ் மீது பரபரப்பான புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவின் ராய்ச்சூர் மாவட்டத்தை சேர்ந்தவர் 27 வயது இளம்பெண். இவர் பெங்களூர் உல்லால் பகுதியில் தங்கி பசவேஸ்வரா நகரில் உள்ள அழகு நிலையத்தில் பியூட்டிஷியனாக வேலை செய்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

அதேபோல் கர்நாடகா-தமிழ்நாடு எல்லையில் உள்ள அத்திப்பள்ளியை சேர்ந்தவர் சந்தோஷ். இவர் கன்னடா மற்றும் தமிழ் திரைப்படங்களில் துணை நடிகராக சிறுசிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் தான் தோழி ஒருவர் மூலம் சந்தோசுக்கு, பியூட்டிஷியனாக பணியாற்றி வரும் இளம்பெண் கடந்த 2019ம் ஆண்டு பழக்கம் ஆனார்.
இதையடுத்து இருவரும் செல்போன் எண்களை பரிமாறி கொண்டு பேச தொடங்கினர். நண்பர்களாகி உள்ளனர். அதன்பிறகு இருவரும் அடிக்கடி வெளியே செல்ல தொடங்கினர். இதனால் அவர்கள் இடையேயான பந்தம் இன்னும் நெருக்கமானது. இருவரும் நெருங்கி பழக தொடங்கினர். இந்த சமயத்தில் சந்தோஷ், இளம்பெண்ணிடம் காதலை வெளிப்படுத்தி உள்ளார். ‛‛ஏய் நீ ரொம்ப அழகாக இருக்கிறாய். உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும். உன்னை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். அதோடு திரைப்படங்களில் நடிகையாக அறிமுகம் செய்து பெரிய ஆளாக்க விரும்புகிறேன்'' என ஆசை வார்த்தைகைளை அள்ளி வீசியுள்ளார்.
அந்த இளம்பெண்ணுக்கும் நடிப்பு மீது பிரியம் இருந்தது. ஆனால் திரைப்படத்துறைக்குள் நுழைவது எப்படி? என்பது தான் தெரியாமல் இருந்தது. இத்தகைய சூழலில் சந்தோஷின் வார்த்தைகள் அவருக்கு நம்பிக்கையை அளித்தன. இதனால் இளம்பெண்ணை அவரை நம்ப தொடங்கினார். மேலும் அவரது காதலையும் ஏற்றுக்கொண்டார். அதன்பிறகு இருவரும் அடிக்கடி வெளியே சென்று தனியார் விடுதிகளில் ஒன்றாக தனிமையில் இருந்துள்ளனர். மேலும் இருவரும் சேர்ந்து செல்போனில் போட்டோ, வீடியோக்கள் எடுத்துள்ளனர். மேலும் இளம்பெண்ணுக்கு தெரியாமல் சந்தோஷ் ஆபாசமாகவும் அவரை செல்போனில் போட்டோ மற்றும் வீடியோ எடுத்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தான் சந்தோஷின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்து. அதாவது திரைப்படத்தில் வாய்ப்பு வழங்குவதாக கூறியும் அதற்கான நடவடிக்கையை சந்தோஷ் எடுக்காததால் இளம்பெண்ணுக்கு சந்தேகம் வந்தது. இதுபற்றி கேட்டதற்கு சந்தோஷ் மழுப்பலாக பதிலளித்து வந்துள்ளதோடு, அடிக்கடி அவரை வெளியே தனிமையில் சந்திக்க வரும்படி வற்புறுத்தி உள்ளார். இதனால் பயந்துபோன இளம்பெண் அவரை விட்டு பிரிந்தார். தன்னிடம் பேச வேண்டாம் என கூறியுள்ளார். ஆனால் சந்தோஷ் விடவில்லை.
தொடர்ந்து அந்த இளம்பெண்ணுக்கு போன் செய்துள்ளார். மேலும் அவர் பணியாற்றி வரும் அழகு நிலையத்துக்கு சென்று வெளியே வரும்படி கட்டாயப்படுத்தி உள்ளார். தன்னுடன் வராவிட்டால் நெருக்கமாக இருக்கும் போட்டோ மற்றும் வீடியோக்களை இணையதளங்களில் வெளியிடுவதாக மிரட்டியுள்ளார். இருப்பினும் இளம்பெண் மறுத்துள்ளார். மேலும் அவர் தங்கியிருக்கும் இடத்துக்கு சென்று சந்தோஷ் தாக்கி துன்புறுத்தி உள்ளார். இதையடுத்து அந்த பெண் சார்பில் கடந்த ஆண்டு ஜுன் மாதம் போலீசில் புகார் செய்யப்பட்டத. ஆனால் போலீசார் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் மீண்டும் சந்தோஷ் அந்த இளம்பெண்ணை துன்புறுத்தி உள்ளார். இதையடுத்து கடந்த 15ம் தேதி இளம்பெண் சார்பில் பெங்களூர் ஞானபாரதி போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். மேலும் விசாரணைக்கு ஆஜராக கோரி நடிகர் சந்தோசுக்கு போலீசார் சம்மன் அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளனர்.
-
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications