திடீரென வெடித்து சிதறிய ஹேர் டிரையர்.. கையை இழந்த ராணுவ வீரரின் மனைவி.. என்ன நடந்தது? மக்களே கவனம்
பெங்களூர்: கர்நாடகாவில் ஆன்லைனில் ஆர்டர் செய்த ஹேர் டிரையரை வாங்கி பரிசோதிக்க முயன்றபோது திடீரென்று வெடித்து சிதறியது. இதில் ராணுவ வீரரின் மனைவி கை துண்டாகி உள்ளது.
கர்நாடகாவில் உள்ள பாகல்கோட்டை மாவட்டம் இலகல் கிராமத்தை சேர்ந்த பாபன்னா யார்னால். இவரது மனைவி பெயர் பசவராஜேஸ்வரி யார்னால். பாபன்னா யார்னால் ராணுவ வீரராக பணியாற்றினார். இவர் ஜம்மு காஷ்மீரில் பணியாற்றியபோது மின்சாரம் தாக்கி 2017 ம் ஆண்டில் வீர மரணம் அடைந்தார். தற்போது கணவர் இன்றி பசவராஜேஸ்வரி வசித்து வருகிறார்.

இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் சசிகலா. இவர் ஆன்லைனில் ஹேர் டிரையர் ஆர்டர் செய்ததாக கூறப்படுகிறது.. இதையடுத்து அந்த ஹேர் டிரையர் டிடிடிசி கொரியர் மூலம் நவம்பர் 15ம் தேதி வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பார்சலை கொண்டு வந்தவர் சசிகலாவுக்கு போன் செய்து பேசினார்.
அப்போது சசிகலா,‛‛நான் வீட்டில் இல்லை. வெளியூர் வந்து விட்டேன். ஹேர் டிரையரை பக்கத்து வீட்டில் உள்ள பசவராஜேஸ்வரியிடம் வழங்கிவிட்டு செல்லுங்கள்'' என்று கூறினார். மேலும் சசிகலா, பசவராஜேஸ்வரிக்கு போன் செய்து ஹேர் டிரையரை வாங்கி வைக்கும்படி கூறினார். இதையடுத்து பசவராஜேஸ்வரி ஹேர்டிரையரை வாங்கி தனது வீட்டில் பரிசோதிக்க முயன்றார்.
ஹேர் டிரையரை அவர் ஆன் செய்து பரிசோதிக்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக ஹேர் டிரையர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.இந்த சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தில் வசிக்கும் மக்கள் ஓடிவந்து பார்த்தனர். அப்போது பசவராஜேஸ்வரி படுகாயம் அடைந்து இருந்தார். அவரது கை மற்றும் விரல்களில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது. அவர் வலியால் அலறி துடித்தார். இதையடுத்து அவர்கள் பசவராஜேஸ்வரியை மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மருத்துவமனையில் அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இருப்பினும் அவரது ஒரு கை செயலிழந்தது. இதனால் கை துண்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஹேர் டிரையர் வெடித்ததில் அவரது இரு கைகளில் உள்ள விரல்களும் துண்டிக்கப்பட்டன. தற்போது தொடர்ந்து பசவராஜேஸ்வரிக்கு சிகிச்சை என்பது அளிக்கப்பட்டு வருகிறது.
இதுபற்றி பாகல்கோட்டை எஸ்பி அமர்நாத் ரெட்டி கூறுகையில், ‛‛சம்பவம் தொடர்பாக இலகல் போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹேர்டிரையர் வெடித்து பெண் படுகாயமடைந்த இடத்தை மின்சாரத்துறை அதிகாரிகள், போலீசார் ஆய்வு செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக ஹேர் டிரையர் வெடித்து இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. வெடித்த ஹேர்டிரையரின் நிறுவனம் விசாகப்பட்டினத்தை மையப்படுத்தி செயல்பட்டு வருகிறது. சசிகலாவிடம் விசாரித்து உள்ளோம். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்'' என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications