"சாயங்காலம் ஆயிடுச்சுன்னா.. எங்களால முடியல.. அதான் கொன்றோம்".. அதிர வைத்த 3 திருநங்கைகள்.. ஷாக்
3 திருநங்கைகள் தொழிலாளியை அடித்து கொன்றுள்ளனர்
பெங்களூரு: "சாயங்காலம் நேரம் ஆயிடுச்சுன்னா அவர் இந்த மாதிரி காரியத்தை செய்யறார்.. அது எங்களுக்கு பிடிக்கல.. அதனால்தான் கொன்றோம்" என்று 3 திருநங்கைகள் தொழிலாளியை கொன்ற விவகாரத்தில் வாக்குமூலம் தந்து பெங்களூர் போலீஸை அதிர வைத்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் ராமநகர் டவுனை சேர்ந்தவர் ராஜேந்திரா... இவர் பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டி பகுதியில் ஒரு கார்மென்ட்டில் வேலை பார்த்து வந்தார்.. இந்நிலையில், அவரை 3 திருநங்கைகள் ராம்நகர் அரசு ஆஸ்பத்திரிக்கு தூக்கி கொண்டு வந்தனர்.

ராஜேந்திரா சுயநினைவே இல்லாமல் கிடந்தார்.. அவரை செக் செய்து பார்த்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக சொன்னார்கள்.. மேலும் அவருக்கு என்ன ஆச்சு என்று 3 திருநங்கைகளிடம் கேட்டனர்.. ஆனால் 3 பேருமே மாறி மாறி உளறினார்கள். அதனால் டாக்டர்களுக்கு வந்தேகம் வந்தது.
உடனே போலீசுக்கு விஷயத்தை சொல்லவும், அவர்களும் விரைந்து வந்தனர்.. 3 பேரையும் பிடித்து விசாரித்தனர்.. பிறகுதான் ராஜேந்திராவை அடித்தே கொன்றோம் என்று சொல்லி போலீஸை அதிர வைத்தனர் திருநங்கைகள்.
அதாவது கார்மென்ட்டில் ராஜேந்திரா வேலை பார்த்தாலும், சாயங்காலம் ஆனால், திருநங்கை போல மாறிவிடுவாராம்.. அவர்களை போலவே டிரஸ் செய்து கொண்டு, பெங்களூரு நைஸ் ரோட்டில் வந்து நின்று விடுவாராம்.. அங்கு செல்லும் வண்டிகளை வழிமறித்து பணமும் வாங்குவாராம்.. இதை திருநங்கைகளான தேவி, பாவனா, நித்யா 3 பேரும் கவனித்தனர்.
இதனால் இவர்களுக்கு வருமானமும் போனது.. அதனால் சம்பவத்தன்று இரவு ராஜேந்திரா வழக்கம்போல், திருநங்கை கெட்டப்பில் ரோட்டில் நின்று கொண்டிருந்தபோது, 3 பேரும் அங்கு சென்று இதை பற்றி கேட்டுள்ளனர்.. அப்போது வாக்குவாதம் முற்றியுள்ளது.
"அப்படித்தான் டிரஸ் பண்ணிட்டு பணம் வாங்குவேன்" என்று ராஜேந்திரா சொல்லி உள்ளது போல தெரிகிறது.. இதனால் ஆத்திரம் அடைந்த திருநங்கைகள் 3 பேரும் சேர்ந்து ராஜேந்திராவை பிடித்து சரமாரியாக அடித்து உள்ளனர்... அதில் அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்... உடனே இதை பார்த்து பதறிபோன 3 பேரும் ஆஸ்பத்திரிக்கு தூக்கி வந்துள்ளனர். இவ்வளவும் விசாரணையில் தெரியவந்தள்ளது.
இதன்பிறகு ராமநகர் போலீசார், எலெக்ட்ரானிக் சிட்டி போலீசாருக்கும் தகவல் கொடுத்து, அவர்களிடம் 3 பேரையும் ஒப்படைத்தனர்.. இப்போது, திருநங்கைகள் 3 பேர் மீதும் எலெக்ட்ரானிக் சிட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications