Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தப்பு.. தப்பு! எடியூரப்பாவே சொல்லிட்டாரே.. ஹிஜாப், திப்பு சுல்தான் விவகாரம் -பாஜகவினருக்கு அட்வைஸ்

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: மே மாதம் 10 ஆம் தேதி கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக தலைவர்கள் ஹிஜாப், ஹலால், திப்பு சுல்தான் விவகாரங்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது சரியல்ல என்று அக்கட்சியின் மூத்த தலைவர் எடியூரப்பா தெரிவித்து உள்ளார்.

கர்நாடக முன்னாள் முதலமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா ஷிகாரிபுரா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். இதற்காக எடியூரப்பாவுடன் சென்று அவர் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதை தொடர்ந்து தனியார் ஊடகத்துக்கு பேட்டியளித்து இருக்கும் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து உள்ளார்.

Yediyurappa opposing BJP leader speech in Hijab, Tippu sulthan issue

அவர் தெரிவித்து இருப்பதாவது, "விஜயேந்திராவுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அவர் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார். நாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிக எண்ணிக்கையிலான மக்கள் அனைத்து பூத்களில் இருந்தும் வந்துள்ளார்கள். பூத் மட்டத்தில் நாங்கள் நன்றாக பணியாற்றி உள்ளோம். அதிக எண்ணிக்கையிலான வாக்குகளை நாங்கள் பெறுவோம்.

ஆட்சி அமைக்க தேவையான முழு பொரும்பான்மையை பாஜக பெறும் என்பதில் 100 சதவீத நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நான் இந்த மாநிலத்தின் அனைத்து மூளை முடுக்குகளுக்கும் சென்று இருக்கிறேன். மக்களிடம் நம்பிக்கையை நான் பார்க்கிறேன். எங்கள் மீது அவர்கள் நம்பிக்கை வைத்து உள்ளார்கள். பிரதமர் நரேந்திர மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் மீண்டும் வருவார்கள். சூழல் மேம்படும். எங்கள் பலமும் அதிகரிக்கும்.

எங்களிடம் இருக்கும் அளவுக்கு காங்கிரஸ் கட்சியிடம் தலைவர்கள் இல்லை. ராகுல் காந்தி இந்த மாநிலத்துக்கு வருகை தந்து இருக்கிறார். ஆனால், அவர் பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா ஆகியோருக்கு ஈடாக மாட்டார். எனக்கு பிரதமர் மோடி மீது மிகுந்த மரியாதை உள்ளது. அவர் ஒரு தேசிய தலைவர். ஒட்டுமொத்த உலகமும் அவரை அங்கீகரித்து உள்ளது. இதுபோன்ற ஒரு தலைமைத்துவத்தை பெறுவது அரிது. அவர் மீது நம்பிக்கை வைத்து உள்ளேன். அவரும் என் மீது அதிக மரியாதையும் நம்பிக்கையும் வைத்து உள்ளார். அமித்ஷாவும் இதே மரியாதையை வைத்து இருக்கிறார்.

Yediyurappa opposing BJP leader speech in Hijab, Tippu sulthan issue

பாஜகவில் லிங்காயத்து சமூகத்தை சேர்ந்த பல தலைவர்கள் உள்ளார்கள். என்னுடைய இடத்தை யார் நிரப்புவார்கள் என்பதை தேர்தலுக்கு பிறகு பார்த்துக்கொள்வோம். முதலமைச்சர் பசவராஜ் பொம்மை சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அடுத்த முதலமைச்சர் யார் என்பதை தேர்தலுக்கு பிறகு பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.

ஜெகதீஷ் ஷெட்டர், லக்‌ஷ்மன் சாவடி ஆகியோர் பாஜகவில் இருந்து விலகியதால் எந்த பாதிப்பும் இல்லை என்பதில் 100 சதவீதம் உறுதியாக உள்ளேன். ஷெட்டருக்கு நாங்கள் எந்த அநீதியும் இழைக்கவில்லை. அனைத்து வாக்குறுதிகளை நிறைவேற்றினோம். அவரை மாநிலங்களவை உறுப்பினராக்குவதாக சொன்னோம். தனது குடும்பத்தில் ஒருவரை களமிறக்க சொன்னோம். இருந்தும் அவர் கட்சியிலிருந்து விலகிவிட்டார்.

திப்பு சுல்தான் - சாவர்க்கர் விவகாரம், ஹிஜாப் எதிர்ப்பு, ஹலால் சர்ச்சை போன்றவற்றுக்கு நான் ஆதரவளிக்க மாட்டேன். கட்சியில் உள்ள மற்ற தலைவர்கள் இதை ஆதரித்தாலும், அது சரியல்ல. இதுபோன்று பேச வேண்டாம் என்று நான் அவர்களிடம் சொல்வேன். என்னை யாருமே ஓரம்கட்டவில்லை. நானாகவே முதலமைச்சர் பதவியில் இருந்து விலகினேன். இப்போது நானாகவே தேர்தலில் போட்டியிடவில்லை. இந்த தேர்தலில் முழு பொரும்பான்மை பெறுவதுடன், மக்களவைத் தேர்தலிலும் 25 க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றிபெறுவோம்." என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+