கர்நாடகாவில் “மெகா டுவிஸ்டு”.. 2024 தேர்தலில் குமாரசாமியுடன் பாஜக கூட்டணியா? போட்டுடைத்த எடியூரப்பா
பெங்களூர்: எதிர்காலத்தில் குமாரசாமியுடன் இணைந்து போட்டியிடுவோம் என்று பாஜக தலைவரும் கர்நாடக முன்னாள் முதலமைச்சருமான எடியூரப்பா தெரிவித்து இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாரின் சகோதரர் மகன் அஜித் பவார் அக்கட்சியின் 30 எம்.எல்.ஏக்களுடன் பாஜக - சிவசேனா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து துணை முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இதுகுறித்து கடந்த திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முன்னாள் முதலமைச்சரும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான குமாரசாமி, மகாராஷ்டிராவை போன்ற அதிர்ச்சி நிகழ்வு கர்நாடகாவிலும் நடக்கலாம் என்று தெரிவித்து இருந்தார்.
"பாஜகவை ஆதரிக்கப்போவதாக அஜித் பவார் அறிவித்தவுடன் கர்நாடகாவில் என்ன நடக்கப்போகிறதோ என்று அஞ்சினேன். கர்நாடகாவின் அஜித் பவார் யார் என்று பார்க்க காத்திருக்கிறேன்." என அவர் தெரிவித்தார். குமாரசாமியின் இந்த பேச்சு கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இன்று கர்நாடக முன்னாள் முதலமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பாவிடம் குமாரசாமியின் கருத்து குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்த அவர், "குமாரசாமி சொன்னது முற்றிலும் உண்மை. அவரது கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன். குமராசாமியும் நாங்களும் எதிர்காலத்தில் இணைந்து போட்டியிடுவோம்." என்றார்.
தொடர்ந்து பேசிய எடியூரப்பா, "கர்நாடக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. எனவே மாநிலம் தழுவிய போராட்டங்களை நடத்த உள்ளோம். கர்நாடக அரசு ஏராளமான வாக்குறுதிகளை நிறைவேற்றியது. ஆனால், எதையும் செய்யவில்லை. எந்த புதிய கோரிக்கையும் எங்களிடம் இல்லை.
5 கோரிக்கைகளை மட்டும் நிறைவேற்றினால் போதும். வரும் வாரத்தில் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காவிட்டால் நாங்கள் மேடை போட்டு போராட்டம் செய்வோம்." என்றார். இதில் எடியூரப்பாவின் போராட்ட எச்சரிக்கையை விட குமாரசாமியுடன் கூட்டணி என்ற கருத்து கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குமாரசாமியும் அவரது ஆட்சி கவிழ்ந்த பிறகு காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறார். குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் போன்றவற்றிலும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுடன் அவர் இணையவில்லை. கர்நாடக தேர்தலிலும் தனித்துப் போட்டியிட்ட அவர், முன்பை விட குறைவான தொகுதிகளிலேயே வென்றார்.
2024 மக்களவைத் தேர்தல் தொடர்பாக பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டத்திலும் மதசார்பற்ற ஜனதா தளம் கலந்துகொள்ளவில்லை. அவருக்கு அழைப்பும் விடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் குமாரசாமியுடன் இணைந்து போட்டியிடுவோம் என்று எடியூரப்பா தெரிவித்திருக்கும் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.
-
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
இட்லி, வடை, சாம்பார்.. கர்நாடகாவில் நாளை நடக்கும் மிக பெரிய அரசியல் மாற்றம்! ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விடைபெற்ற சித்தராமையா.. ராஜினாமா செய்த பின் உருக்கமான பதிவு -
அவ்வளவு தூரம் சொன்ன டெல்லி மேலிடம்.. "முடியவே முடியாது.." திட்டவட்டமாக மறுத்த சித்தராமையா.. ட்விஸ்ட் -
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட் -
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
பெங்களூரில் புகுந்த உயிரை பறிக்கும் எபோலா? உகாண்டாவில் இருந்த பெண் மருத்துவமனையில் அனுமதி.. திக்திக்












Click it and Unblock the Notifications