திப்பு “மேட்டர் வேஸ்ட்”.. முஸ்லிம்களை பாஜக ஒதுக்கவில்லை! கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா பளார்
திப்பு சுல்தான் விவகாரம் தேவையற்றது என்றும், பாஜக இஸ்லாமியர்களை ஒதுக்கவில்லை எனவும் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்து உள்ளார்.
பெங்களூரு: கர்நாடகாவில் பாரதிய ஜனதா கட்சியினர் திப்பு சுல்தானை தொடர்ந்து விமர்சித்து பேசி வரும் நிலையில், திப்பு சுல்தான் தொடர்பான விவகாரம் தேவையற்றது என்றும், வேறு பல விசயங்களை கையில் எடுத்து இருக்கலாம் என்றும் அம்மாநில முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்து உள்ளார். தான் பதவியில் இருந்தபோது இஸ்லாமியர்களை ஒதுக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
கர்நாடகாவில் பசவராஜ் பொம்மை தலைமையில் நடைபெற்று வரும் பாரதிய ஜனதா ஆட்சியின் பதவிக்காலம் வரும் மே மாதம் 24 ஆம் தேதியோடு நிறைவடைகிறது. எனவே ஒன்று, இரண்டு மாதங்களில் கர்நாடக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
கர்நாடகாவில் முதலமைச்சராக பசவராஜ் பொம்மை பதவியேற்ற பிறகு அம்மாநிலத்தில் ஹிஜாப், ஹலால் பிரச்சனை மற்றும் அதனால் வெடித்த மத கலவரங்களால் அம்மாநிலமே அமைதி இழந்து காணப்படுகின்றது.

தொடர் பிரச்சனைகள்
உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம் போன்ற வடமாநிலங்களை போல் கர்நாடகாவிலும் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்து இருக்கின்றனர். இது அல்லாமல் லிங்காயத்துக்கு மக்களின் எதிர்ப்பு, பாஜக உட்கட்சி பூசல், வேலையிழப்புகள், பெங்களூரு வெள்ளம் போன்ற பிரச்சனைகளால் இந்த தேர்தல் பாஜகவுக்கு கடினமானதாக இருக்கும் என்று பேசப்படுகிறது.

திப்பு சுல்தான் பிரச்சனை
இதன் காரணமாக கர்நாடக மாநில எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், மூத்த நிர்வாகிகளை வைத்து இப்போதே தொகுதி வாரியாக அக்கட்சி பொதுக்கூட்டங்களை நடத்த தொடங்கி உள்ளது. இதிலும் திப்பு சுல்தான் மீதான விமர்சனம், சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு பேச்சுக்களை அக்கட்சித் தலைவர்கள் பேசி வருவதால் சர்ச்சைகள் சுழன்றடித்துக்கொண்டு இருக்கின்றன.

லிங்காயத்து எதிர்ப்பு
கர்நாடகாவில் பெரிய வாக்கு வங்கியை வைத்துள்ள லிங்காயத்து சமுதாயத்தை சேர்ந்தவரான எடியூரப்பாவை பாஜக அவமதித்ததாக குற்றச்சாட்டு எழுந்ததுடன், அடுத்தடுத்து லிங்காயத்து மடத்தின் சாமியார்கள் கைது செய்யப்பட்டதால் அந்த சமுதாயத்தினர் பாஜகவுக்கு எதிரான மனநிலையில் இருப்பதாக கூறப்பட்டுகிறது.

எடியூரப்பாவுக்கு முக்கியத்துவம்
சமீபத்தில் லிங்காயத்து சமுதாயத்தினர் இந்து மதத்திலிருந்து தங்களை விடுவித்து மீண்டும் தனி மத அந்தஸ்து வழங்க வலியுறுத்தி உள்ளனர். இந்த நிலையில்தான் மீண்டும் எடியூரப்பாவுக்கு பாஜக மீண்டும் முக்கியத்துவம் கொடுக்க தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று பிரதமர் மோடி கலந்துகொண்ட ஷிமோகா விமான நிலைய திறப்பு விழாவில் எடியூரப்பாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

எடியூரப்பா பேட்டி
இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த எடியூரப்பா, "நான் கர்நாடக மாநில தேர்தலில் மட்டுமே கவனம் செலுத்தவில்லை. மக்களவை தேர்தலையும் கவனித்து வருகிறேன். மீண்டும் கர்நாடகாவில் பாஜக ஆட்சி வர பாடுபடுவேன். என்னை பாஜகவில் யாரும் ஒதுக்கவில்லை. கட்சி எனக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. பிரதமர் மோடி என் மீது நம்பிக்கை வைத்துள்ளார்.

ஹிஜாப் விவகாரம் பழையது
லிங்காயத்து மக்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுவோம். அவர்களின் கோரிக்கைகள், பிரச்சனைகளை தீர்க்க முயற்சிப்போம். லிங்காயத்து மக்கள் எங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும். திப்பு சுல்தான் VS சாவர்க்கர் சர்ச்சைகளால் பெரிய தாக்கங்கள் ஏற்படாது. ஹிஜாப், ஹலால் பிரச்சனைகள் எல்லாம் பழைய விசயங்கள்.

முஸ்லிம்களை பாஜக ஒதுக்கவில்லை
திப்பு சுல்தான் பிரச்சனை என்பது தேவையற்றது. நாம் கையில் எடுக்க வேண்டிய பிரச்சனைகள் நிறைய உள்ளன. பாரதிய ஜனதா கட்சி இஸ்லாமிய சமுதாயத்தினரை புறக்கணிக்கவோ, சிதைக்கவோ இல்லை. நான் முதலமைச்சராக இருந்தபோது இஸ்லாமிய சமுதாயத்தினரை ஒதுக்கவில்லை. அவர்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் அதற்கும் தீர்வு பெற்று கொடுப்பேன்." என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications