3 ஆண்டுகளாக கைது செய்தாதது ஏன்? செந்தில் பாலாஜி தம்பி அசோக் குமார் வழக்கில் நீதிமன்றம் கேள்வி

Subscribe to Oneindia Tamil

மதுரை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் மீது 3 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காமல், தற்போது நடவடிக்கை எடுப்பது ஏன் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. 2023ஆம் ஆண்டு மே 26ஆம் தேதி சோதனைக்கு வந்த வருமான வரித்துறை அதிகாரிகளின் காரை உடைத்ததாக அசோக் குமார் மீது தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பி இருக்கிறது.

கடந்த 2023ஆம் ஆண்டு மே 26ஆம் தேதி, கரூரில் உள்ள செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக் குமார் ஆகியோருக்குத் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு திரண்ட ஆதரவாளர்கள், சோதனைக்கு வந்த அதிகாரிகளின் காரை மறித்துச் சேதப்படுத்தியதாகப் புகார் எழுந்தது.

Senthil Balaji

இந்தச் சம்பவம் தொடர்பாக அசோக் குமார் உட்படப் பலர் மீது கரூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு நிலுவையில் உள்ள சூழலில், அசோக் குமார் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முன் ஜாமீன் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், 2023ல் நடந்த நிகழ்வின் போது மனுதாரர் சம்பந்தப்பட்ட இடத்தில் இல்லை.

பிரச்சனை செய்ய தூண்டியதாகவே வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, காவல்துறை மற்றும் அரசு தரப்பைக் நோக்கிப் பல அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியது. அதில், செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரை 3 ஆண்டுகளாக கைது செய்யாதது ஏன்?

ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காமல், தற்போது நடவடிக்கை எடுப்பது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினர். கடந்த வாரத்தில் சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள செந்தில் பாலாஜியின் வீட்டில் திடீரென காவல்துறையினர் சோதனை நடத்தினர். அந்த சோதனை செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரை கைது செய்ய நடத்தப்பட்டது என்று சொல்லப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+