ஷிகாரிபுராவில் மண்ணை கவ்விய காங்கிரஸ்.. விஜயேந்திரா அபாரம்.. பஞ்சாரா ஆதரவை அள்ளிய எடியூரப்பா மகன்
பெங்களூர்: கர்நாடகா சட்டசபைத் தேர்தலில் ஷிக்காரிபுரா தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் பி.ஒய்.விஜயேந்திரா வெற்றி பெற்றுள்ளார்.
கல்லூரி காலங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பில் இணைந்து பொதுச் சேவையாற்றிய எடியூரப்பா பின்னாளில் பாஜகவில் இணைந்தார். கடந்த 2008ஆம் ஆண்டு கர்நாடகாவில் முதல் முறையாக முதல்வர் பதவியை ஏற்றார். அதனால் இவரே தென்னிந்தியாவின் முதல் பாஜக முதல்வர் என்ற பெருமையை பெற்றார். இவர் லிங்காயத்து சமூகத்தை சேர்ந்தவர்.
கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாஜக மெஜாரிட்டியே பெறாவிட்டாலும் ஆட்சி அமைக்க எடியூரப்பா உரிமை கோரினார். இதையடுத்து இந்த வாய்ப்பு பாஜகவுக்கு செல்லக் கூடாது என்பதற்காக குமாரசாமியின் மதசார்பற்ற கட்சியின் குமாரசாமிக்கு காங்கிரஸ் ஆதரவு கொடுத்து அவரை முதல்வராக்கியது.

இந்த நிலையில் சில மாதங்கள் கழித்து குமாரசாமிக்கு ஆதரவளித்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததை அடுத்து அவருடைய ஆட்சி பெரும்பான்மையை இழந்தது. இதையடுத்து சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியதில் அவர் தோல்வியுள்ளார், குமாரசாமியின் ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து பாஜக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி அதில் வென்று எடியூரப்பா முதல்வரானார்.
இந்த நிலையில் இவருடைய வயதை காரணம் காட்டி அவரை முதல்வர் பதவியிலிருந்து விலக பாஜக தலைமை கூறியது. இதையடுத்து அவரும் பதவி விலகிய நிலையில் பசவராஜ் பொம்மை முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் கடந்த 10ஆம் தேதி நடந்த கர்நாடகா சட்டசபை தேர்தலில் எடியூரப்பாவின் மகன் பிஒய் விஜேயந்திராவுக்கு பாஜக சீட் கொடுத்தது.
இதையடுத்து அவர் சிக்கரிப்பூரில் போட்டியிடுள்ளார். தேர்தலுக்கு முன்னர் விஜயேந்திரா கூறுகையில் சிக்கரிபூர் தொகுதியில் போட்டியிடுவதை பாக்கியமாக கருதுகிறேன். நான் எடியூரப்பாவின் மகன் என்பதால் எனக்கு சீட்டு கிடைத்ததாக சொல்வதை ஏற்க முடியாது. பிஎஸ் எடியூரப்பா மற்றும் மூத்த தலைவர்களால் கர்நாடகாவில் மூலை முடுக்கெல்லாம் பாஜக வளர்ச்சியடைந்துள்ளது என்றார்.
சிக்கரிபூர் தொகுதியானது 1962 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிலையில் இது பிஎஸ் எடியூரப்பாவின் கோட்டை என சொல்லும் அளவுக்கு அவர் அந்த தொகுதியில் வென்றுள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த இடைத் தேர்தலில் பிஒய் ராகவேந்திரா இந்த தொகுதியில் வென்று எம்எல்ஏவாக இருந்தார். இதைத் தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு எடியூரப்பா சிக்கரிபூர் தொகுதியில்தான் போட்டியிட்டு வென்றார்.
வயது மூப்பு காரணம் காட்டி அவருக்கு சீட் மறுக்கப்பட்டதை அடுத்து தனது மகனுக்காவது சீட் வேண்டும் சிக்கரிபூர் தொகுதியை எடியூரப்பா கேட்டு பெற்றதாக தெரிகிறது. இந்த தொகுதி ஷிமோகா மாவட்டத்தை சேர்ந்தது. இது ஷிமோகா லோக்சபா தொகுதிக்குள்பட்டது. தந்தையின் கோட்டையான சிக்கரிபூரில் மகன் வெல்வாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் விஜயேந்திரா அபாரமாக வென்றார்.
கர்நாடகாவில் சிக்கரிபூர் தொகுதி மட்டுமே பாஜக தொடர்ந்து வெற்றி பெற்று வரும் தொகுதியாகும். கடந்த 1980 ஆம் ஆண்டு இந்த தொகுதி உருவான போது பாஜக இரு முறை இந்த தொகுதியில் தோல்வியடைந்தது. 1999 ஆம் ஆண்டு காங்கிரஸ் வேட்பாளரிடம் எடியூரப்பா தோற்றார். இரண்டாவது முறையாக 2013 ஆம் ஆண்டு எடியூரப்பா போர்க் கொடி உயர்த்தி கர்நாடகா ஜனதா பக்ஷா எனும் கட்சியை உருவாக்கினார். தற்போது கடந்த முறை எடியூரப்பாவிடம் 35 ஆயிரம் வாக்குகளை இழந்த காங்கிரஸ் வேட்பாளர் கோனி மாலடேஷை எதிர்த்து விஜயேந்திரா போட்டியிடுள்ளார்.
இந்த தொகுதியில் 184941 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 93,983 ஆண் வாக்காளர்கள், 90,958 பெண் வாக்காளர்கள் ஆவர். பாஜக தொடர்ந்து இந்த தொகுதியில் வென்றிருந்தாலும் இந்த முறை வெல்வது சாதாரண விஷயம் கிடையாது என்கிறார்கள். சிக்கரிபூரில் லிங்காயத்து சமூக மக்கள் அதிகம் வசிக்கிறார்கள். அவர்களை தொடர்ந்து எஸ்டி, எஸ்டி மற்றும் முஸ்லீம்களும் அதிகமாக வசிக்கிறார்கள். அதனால் பாஜகவுக்கு இந்த முறை வெற்றி கிடைக்குமா என்பது சந்தேகமாக இருக்கிறது. எஸ்சி பிரிவுக்கு உள்பட்ட பஞ்சாரா சமூகத்தினர் பாஜகவுக்கு நீண்ட காலமாக ஆதரவு தந்து வந்தனர். இந்த நிலையில் பட்டியல் சாதியினருக்கான இடஒதுக்கீடு தொடர்பான கர்நாடக அரசின் சமீபத்திய இடஒதுக்கீட்டை எதிர்த்து பஞ்சாரா சமூகத்தினர் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். பஞ்சாரா சமூகத்தினர் எடியூரப்பாவின் வீட்டில் கல் வீசி போராட்டம் நடத்தியிருந்தனர்.
எஸ்சி பிரிவினருக்கான 17 சதவீத இடஒதுக்கீட்டில் 6 சதவீதம் பட்டியல் சாதியினருக்கு (இடது), 5.5 சதவீதம் பட்டியல் சாதியினருக்கு (வலது), 4.5 சதவீதம் "தீண்டுவோர்" மற்றும் ஒரு சதவீத இடஒதுக்கீடு மற்றவர்களுக்கு என்று பரிந்துரைத்துள்ளனர். அந்த வகையில் பஞ்சாரா, கோவி, கோரச்சா மற்றும் கோரமா சமூகத்தினருக்கு இடஒதுக்கீட்டு குறைந்த அளவே கிடைக்கும். இதனால் இந்த இடஒதுக்கீடு முறைக்கு பஞ்சாரா சமூகம் எதிர்ப்பு தெரிவித்தது.
இதனால் இந்த சமூகத்து மக்கள் பாஜகவுக்கு ஆதரவு தருவார்களா என்பது சந்தேகம் இருந்து வந்தது. அதே வேளையில் மறுபுறம் மொத்த ஓட்டுகளில் 20 சதவீதம் உள்ள லிங்காயத்து வாக்காளர்கள் தந்தை எடியூரப்பா- மகன் விஜயேந்திரா மீது அசைக்க முடியாத நம்பிக்கை பெற்றுள்ளார்கள் என கூறப்பட்டு வந்தது. விஜேயந்திராவும் இந்த தேர்தலில் வெல்வதற்கு சாதகமான எதையும் விட்டு வைக்காமல் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். இதற்கு பலனாக வாக்கு எண்ணிக்கையில் விஜயேந்திரா 81,810 வாக்குகளையும் சுயேச்சை உறுப்பினர் 70,802 வாக்குகளை பெற்றார். இருவருக்கும் வாக்கு வித்தியாசம் 11,008 ஆகும். காங்கிரஸ் வேட்பாளர் கோனி மலாடேஷா வெறும் 8,101 வாக்குகளை மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்துள்ளார். 134 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வென்றுள்ள நிலையில் இந்த தொகுதியில் சுயேச்சையை விட மிகவும் மோசமான வாக்குகளை பெற்று தோல்வி அடைந்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications