"வரலாற்று சாதனைப்பா இது".. விஜய் முதல்வரான பின் போன்போட்டு பேசிய சித்தராமையா.. வீடியோ பாருங்க

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: தமிழ்நாடு முதல்வராக தவெக தலைவர் விஜய் நேற்று பதவியேற்றார். இதையடுத்து முதல்வர் விஜய்க்கு, கர்நாடகா முதல்வர் சித்தராமையா போனில் தொடர்பு கொண்டு பேசினார். விஜய்யிடம், சித்தராமையா பேசிய வீடியோ தற்போது இணைதயளங்களில் வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு முதல்வராக தவெக தலைவர் விஜய் நேற்று பதவியேற்றார். மெஜாரிட்டி இல்லாத நிலையில் காங்கிரஸ் உள்பட பிற திமுக கூட்டணிகளின் ஆதரவில் ஆட்சியமைத்துள்ளார்.

you-are-creating-history-siddaramaiah-wishes-to-vijay-after-he-takes-oath-as-a-cm-of-tamil-nadu

குறிப்பாக விஜய்யின் தவெக உடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்தள்ளது. இந்நிலையில் தான் கர்நாடகா முதல்வர் சித்தராமையா, நேற்று முதல்வர் விஜய்க்கு போன் செய்து வாழ்த்து தெரிவித்தார்.

சித்தராமையா, விஜய்யிடம் செல்போனில் பேசினார்.இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. அதில் சித்தராமையா, ''வாழ்த்துகள் விஜய்..நீங்கள் வரலாற்றை உருவாக்கி உள்ளீர்கள்'' என்று சிரித்தபடி கூறுவது பதிவாகி உள்ளது. மேலும் விஜய்யிடம் பேசியது பற்றி சித்தராமையா தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதில், ''தமிழக முதலமைச்சர் விஜய் திரையுலகிலிருந்து மக்கள் சேவைக்கான களம் நோக்கி ஒரு மகத்தான ஜனநாயக பயணத்தை முன்னெடுத்துள்ளார். தமிழக முதலமைச்சராக பதவியேற்றுள்ள அவருக்கு, எனது உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

கர்நாடகமும் தமிழகமும் ஆழமான நாகரீக பிணைப்புகளையும், கலாச்சார நெருக்கத்தையும், சமூக நீதி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் கூட்டாட்சி ஒத்துழைப்பு ஆகியவற்றை கொண்டுள்ளது. நமது இரு மாநிலங்களுக்கு இடையிலான நல்லுறவை வலுப்படுத்தவும், மதச்சார்பின்மை, அரசியலமைப்பு விழுமியங்கள் மற்றும் பிளவுபடுத்தும், பாசிச சக்திகளுக்கு எதிரான கூட்டு போராட்டத்தை முன்னெடுத்து செல்லவும், அவருடன் இணைந்து நெருக்கமாகப் பணியாற்றவும் நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

தமிழக மக்களுக்குச் சேவையாற்றும் வகையில், விஜய்யின் பதவிக்காலம் வெற்றிகரமானதாகவும், ஆக்கப்பூர்வமான மாற்றங்களை உருவாக்கும் வகையிலும் அமைய எனது நல்வாழ்த்துகள்'' என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+