"காப்பாத்துங்களேன்".. இப்படி ஒரு நிலைமையா.. எல்லைகளில் கதறும் ஆப்கன்கள்.. ஷாக் சாட்டிலைட் போட்டோ
இளம்பெண்ணை நிர்வாணமாக்கி தாக்கிய இளைஞர்களை கைதாகி உள்ளனர்
பெங்களூரு: திருட்டுப்பட்டம் சுமத்தி, ஒரு பெண்ணை 4 இளைஞர்கள் நிர்வாணப்படுத்தி தாக்கி உள்ளனர்.. இப்படி ஒரு கொடூர சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலம் யாத்கிரி நகர் பகுதியை சேர்ந்தவர் அந்த இளம்பெண்.. அங்குள்ள ஒரு வீட்டில் வேலை பார்த்து வந்துள்ளார்.. அப்போது அந்த வீட்டிலிருந்த நகைகள் திருடு போனதாக கூறப்படுகிறது.
உடனே அங்குள்ளவர்களுக்கு இந்த பெண்ணின் மீது சந்தேகம் வந்துள்ளது.. நகையை பெண் திருடினாரா என்று விசாரிக்க 4 இளைஞர்கள் ஒன்றுகூடி உள்ளனர்..

இளைஞர்கள்
4 பேருமே அந்த பெண்ணை நிர்வாணப்படுத்தியுள்ளனர்.. கீழே கிடந்த குச்சிகளை எடுத்து வந்து அந்த பெண்ணை ஈவிரக்கமே இல்லாமல் கடுமையாக தாக்கியுள்ளனர். வலி தாங்கமுடியாமல் அந்தப்பெண் அலறித் துடித்துள்ளார்.. இந்த சம்பவம் வீடியோவாக சோஷியல் மீடியாவில் வெளிவந்துள்ளது.

வீடியோ
அந்த 4 இளைஞர்களுமே பெண்ணை தாக்குவதும், அதற்கு அந்த பெண், நான் திருடல.. திருடல என்று அலறுவதும் வீடியோவில் பதிவாகி உள்ளது.. தன்னை அடிக்க வேண்டாம் என்று இளைஞர்களிடம் அந்த பெண் கெஞ்சி கேட்கிறார்.. ஆனாலும் மனசாட்சியே இல்லாமல் அடித்து நொறுக்குகிறார்கள்.. இந்த வீடியோ கிட்டத்தட்ட 2.5 நிமிடம் ஓடுகிறது..

வழக்கு
பொதுமக்கள் இந்த வீடியோவை பார்த்து கடுமையான அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.. அதேசமயம், நடந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் புகார் எதுவும் தரவில்லை.. ஆனாலும் வீடியோ வைரலாகிவிட்டதால், போலீசார் முன்வந்து இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.. சம்பந்தப்பட்ட 4 இளைஞர்களையும் கைது செய்துள்ளனர்.

திருட்டு பட்டம்
இதுகுறித்து யாத்கிரி மாவட்ட எஸ்பி வேத மூர்த்தி சொல்லும்போது,"இந்த சம்பவம் சுமார் 8 மாதங்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட அந்த பெண் நைட் நேரம், தன்னுடைய வேலை முடித்துவிட்டு வீட்டுக்கு செல்வதற்காக பஸ்ஸூக்காக அங்கிருந்த பஸ் ஸ்டாப்பில் நின்றுள்ளார்... அப்போதுதான் சம்பந்தப்பட்ட 4 இளைஞர்களும் காரில் வந்து, அவரை வலுக்கட்டாயமாக ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு தூக்கி சென்றுள்ளனர். ..

விசாரணை
சஹாபூர் என்ற ஒதுக்குப்புறமான பகுதியில், அவரை கொடுமைப்படுத்தி வீடியோவும் எடுத்துள்ளனர். பீமராயா, லிங்கராஜூ, ஷாரானு, ஐயப்பா போன்றோர்தான் அந்த 4 இளைஞர்கள்.. அதேபகுதியை சேர்ந்தவர்கள்.. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.. அந்தப்பெண் இப்போதுதான் புகார் தந்துள்ளார்.. அதனால் 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.
-
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications