12 மணி நேரம்.. பெண்ணின் செயலால் நேர்ந்த விபரீதம்.. என்ன நடந்ததுன்னு பாருங்க ஆடிப்போயிருவீங்க

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் செல்ஃபி எடுத்தபோது கால் தவறி விழுந்ததில் பாறை இடுக்கில் சிக்கிய இளம்பெண் 12 மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னர் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய இளைஞர்களிடையே செல்ஃபி மோகம் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நமக்கு பிடித்த விஷயங்களை, பிடித்த இடங்களை, மனிதர்களை நினைவு கொள்வதற்காக எடுக்கும் ஒரு அற்புதமான பரிசு புகைப்படம். ஆனால், இப்போது பல் துலக்கினால் செல்ஃபி, புது டிரெஸ் போட்டால் செல்ஃபி, பூச்சியைக் கண்டால் செல்ஃபி என புகைப்படத்துக்கான மதிப்பே போய்விட்டது என்று கூட சொல்லலாம்.

karnataka lake girl

சுற்றுலா, நண்பர்களுடன் வெளியில் செல்லும்போது இவ்வாறு புகைப்படம் எடுக்கும் இளைஞர்கள் அதிக லைக்ஸ்களை குவிக்க வேண்டும் என்பதற்காக சில ஆபத்தான விஷயங்களிலும் ஈடுபடுகின்றனர். இயற்கை எவ்வளவு அழகானதோ, அவ்வளவு ஆபத்து நிறைந்தது. எனவே, ஆபத்தான பகுதிகளில் செல்ஃபி எடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தப்படுகின்றனர்.

ஆனாலும் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவதால் பலமுறை உயிருக்கே ஆபத்தாக முடிந்து விடுகிறது. அந்த வகையில், கர்நாடக மாநிலம், துமக்குரு மாவட்டத்தில் உள்ள மைடாலா ஏரியில் செல்பி எடுத்தபோது தவறி விழுந்து பாறையில் சிக்கிய நிலையில் 12 மணி நேரப் போராட்டத்துக்குப் பின் இளம்பெண் மீட்கப்பட்ட சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம், துமக்குரு மாவட்டத்தில் மைடாலா என்ற மிகவும் பிரபலமான ஏரி உள்ளது. விடுமுறை நாட்களில் இப்பகுதிக்கு ஏராளமான பொதுமக்கள் வந்து ஏரியில் குளித்து, மகிழ்ந்து செல்வது வழக்கம்.

அந்த வகையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இந்த ஏரியில் குவிந்து இயற்கையை ரசித்து வந்தனர். குடும்பத்துடன் வந்திருந்த மக்கள் ஏராளமானோர் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர். பலர் பாறைகளின் அருகில் நின்று கொண்டு செல்பிக்களை எடுத்துக் கொண்டிருந்தனர்.

துமக்குரு மாவட்டம், குப்பி தாலுகா, ஸ்ரீவர்ணபுரா கிராமத்தைச் சேர்ந்த சோம்நாத் என்பவரின் மகள் அம்சா (19). நேற்று விடுமுறை தினம் என்பதால் அம்சாவும் தனது நண்பர்களுடன் ஏரிக்குச் சென்றுள்ளார். அப்போது, பாறைகளுக்கு இடையில் நின்று செல்ஃபிக்கள் எடுத்துக் கொண்டு இருந்துள்ளார். அப்போது திடீரென கால் தவறி விழுந்து பாறைகளுக்கு நடுவில் சிக்கிக் கொண்டார்.

இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் மற்றும் அருகில் இருந்தவர்கள் உடனடியாக காவல் துறையினருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர் அப்பெண்ணை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், பாறைகளுக்கு இடையில் சிக்கியதால் அவரை மீட்பதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டன.

இந்நிலையில், நேற்று முழுவதும் அவரை மீட்க முடியாமல் அதிகாரிகள் திணறி வந்தனர். அதைத்தொடர்ந்து, இன்று மதியம் 2 மணியளவில் அப்பெண் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+