பாகிஸ்தான் பாஜகவுக்கு தான் எதிரி நாடு.. எங்களுக்கு அல்ல! கர்நாடகா காங்கிரஸ் தலைவர் பேச்சால் சர்ச்சை
பெங்களூர்: கர்நாடகா சட்டசபையில் நேற்று ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்ற பிறகு கொண்டாட்டம் நடந்தது. அப்போது ‛பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என கோஷமிடப்பட்டது. இதுதொடர்பாக கர்நாடகா மேல்சபையில் இன்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்எல்சி ஹரிபிரசாத் பேசியபோது, ‛‛பாகிஸ்தான் பாஜகவுக்கு தான் எதிரி நாடு. எங்களுக்கு அல்ல’’ எனக்கூறியது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
கர்நாடகாவில் காலியாகும் 4 ராஜ்யசபா எம்பி இடங்களுக்கு நேற்று தேர்தல் நடந்தது. இதில் காங்கிரஸ் சார்பில் 3 வேட்பாளர்கள், பாஜக மற்றும் ஜேடிஎஸ் சார்பில் தலா ஒரு வேட்பாளர்கள் என மொத்தம் 5 பேர் போட்டியிட்டனர். இதில் காங்கிரஸ் சார்பில் தேசிய பொருளாளர் அஜய் மக்கான், நசீர் உசேன், ஜிசி சந்திரசேகர் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

அதேபோல் பாஜக சார்பில் நாராயண பாண்டேகே களமிறங்கிய நிலையில் அவரும் வெற்றி பெற்றார். மாறாக ஜனதா தளம் கட்சியின் குபேந்திர ரெட்டி மட்டுமே தோல்வியடைந்தார். இந்த தேர்தலில் பாஜக வேட்பாளர் எஸ்டி சோமசேகர் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக ஓட்டளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து கர்நாடகா சட்டசபையான பெங்களூர் விதானசவுதாவில் காங்கிரஸ் கட்சியினர் வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு மாலை அணிவித்து தோளில் தூக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நசீர் உசேனை சூழ்ந்து காங்கிரஸ் கட்சியினர் கோஷமிட்டனர். அப்போது சிலர் ‛பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என கோஷமிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையானது. மேலும் பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக சார்பில் பெங்களூர் விதானசவுதா போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் தான் கர்நாடகா சட்டசபை கூட்டம் இன்று நடந்தது. கர்நாடகாவில் உள்ள இரு சபைகளும் (சட்டசபை மற்றும் சட்ட மேலவை )இன்று வழக்கம்போல் தொடங்கின.
இந்த வேளையில் நேற்றைய தினம் கர்நாடகா சட்டசபை கட்டடத்தில் ராஜ்யசபா தேர்தல் வெற்றியை காங்கிரஸ் கொண்டாடியபோது எழுப்பப்பட்ட ‛பாகிஸ்தான் ஜிந்தாபாத்' கோஷம் குறித்து பாஜகவினர் கேள்வி எழுப்பினர். இதற்கு கர்நாடகா சட்ட மேலவையில் காங்கிரஸ் எம்எல்சி ஹரிபிரசாத் பதிலளித்து பேசினார். அப்போது அவர் கூறியது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
அதாவது பாகிஸ்தான் பாஜகவுக்கு மட்டும் தான் எதிரி நாடு. எங்களை (காங்கிரஸ்) பொறுத்தமட்டில் அது அண்டை நாடு என கூறியது தான் தற்போது விவாதத்தை கிளப்பி உள்ளது. இதுதொடர்பாக ஹரிபிரசாத் கூறுகையில், ‛‛அவர்கள் எதிரி நாட்டுடன் நம்முடைய உறவு பற்றி பேசுகின்றனர். அவர்களை பொறுத்தமட்டில் பாகிஸ்தான் என்பது எதிரி நாடு. ஆனால் எங்களை பொறுத்தமட்டில் பாகிஸ்தான் என்பது எதிரி நாடு அல்ல. அது நம்முடைய அண்டை நாடு.
அவர்கள் (பாஜக) பாகிஸ்தானை எதிரி நாடாக கூறுகின்றனர். ஆனால் சமீபத்தில் அவர்கள் எல்கே அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவித்தனர். எல்கே அத்வானி பாகிஸ்தானின் லாகூரில் உள்ள ஜின்னாவின் சமாதிக்கு சென்று அவரை போல் மதச்சார்பற்ற தலைவர் வேறு யாரும் இல்லை என்று கூறியிருக்கிறார். அப்போது பாகிஸ்தான் எதிரி நாடாக இல்லையா?’’ என கேள்வி எழுப்பி உள்ளார். இந்நிலையில் தான் ஹரிபிரசாத்தின் இந்த பேச்சுக்கு பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications