இந்தியா கூட்டணிக்கு ‘இடி’.. பாஜக மொத்தமா அள்ளுதே.. கர்நாடகாவிலேயே இந்த நிலையா? நியூஸ் 18 கணிப்பு!
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் மொத்தம் 28 லோக்சபா தொகுதிகள் உள்ள நிலையில், அங்கு யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்பது குறித்து நியூஸ் 18 மெகா கருத்துக்கணிப்பு நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியா கூட்டணிக்கு கடும் பின்னடைவு இருக்கும் என்று முடிவுகள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. இதையொட்டி, தேர்தல் களம் களைகட்டியுள்ளது. இந்நிலையில், தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளை பல்வேறு நிறுவனங்கள் நடத்தியுள்ளன. முன்னணி செய்தி ஊடகமான நியூஸ் 18 - சி.என்.என் இணைந்து நாடு முழுவதும் தேர்தல் கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது. அதன் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

முதல் நாளில் 242 தொகுதிகளுக்கான கருத்துக்கணிப்பு ரிசல்ட் வெளியிடப்பட்டது. அதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 174 தொகுதிகளில் வெல்லும் என தெரிவிக்கப்பட்ட. இந்தியா கூட்டணி 61 இடங்களும், மற்ற கட்சிகளுக்கு 7 இடங்களும் கிடைக்கும் என நியூஸ் 18 கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதைத்தொடர்ந்து, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு ரிசல்ட் வெளியிடப்பட்டுள்ளது. கர்நாடகாவில் மொத்தம் உள்ள 28 லோக்சபா தொகுதிகளில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 25 இடங்களில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு 3 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என நியூஸ் 18 கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. மற்றவர்களுக்கு வெற்றி வாய்ப்பு இல்லை என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் வாக்கு சதவிகிதத்தைப் பொறுத்தரை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி 58 சதவீதம் வாக்குபெறும் என கணிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 35 சதவீத வாக்குகள் பெறும் என்ற கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. மேலும், மற்ற கட்சிகள் 7 சதவீத வாக்குகள் மட்டுமே பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019 தேர்தலில் பாஜக 25 இடங்களிலும், ஜேடிஎஸ், காங்கிரஸ் தலா ஒரு இடத்திலும், மாண்டியாவில் சுயேச்சையாக போட்டியிட்ட மறைந்த நடிகர் அம்பரீசின் மனைவி சுமலதாவும் வெற்றி பெற்றிருந்தனர். கர்நாடகாவில் கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது.
இந்நிலையில் தான் விரைவில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. சட்டசபை தேர்தல் தந்த வெற்றியோடு கர்நாடகாவில் நம்பிக்கையுடன் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு வரும் லோக்சபா தேர்தலில் 3 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என நியூஸ் 18 கணிப்பு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications