Bobcut Sengamalam: கட்டு கரும்புடன் போஸ்.. பாப்கட் செங்கமலம் பொங்கல் ஸ்பெஷல்.. செம அழகுடி செல்லம்!

Subscribe to Oneindia Tamil

மன்னார்குடி: மன்னார்குடி மாவட்டத்துச் செல்லப்பிள்ளை பாப்கட் செங்கமலம் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடியது. ஒரு கட்டு கரும்புடன் செமையாக போஸ் கொடுத்த படம் வைரலாகி வருகிறது.

மன்னார்குடியில் ராஜகோபால சுவாமி திருக்கோயிலில் செங்கமலம் என்ற யானை உள்ளது. இதன் தனித்துவமான ஹேர்ஸ்டைலுக்காக ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்த யானையின் ஹேர்ஸ்டைலுடன் இந்திய வனத் துறை அதிகாரி ஒருவர் படம் பிடித்து தனது ட்விட்டரில் போட்டவுடன் இந்த செங்கமலம் மிகவும் ஃபேமஸ் ஆகிவிட்டது.

இந்த யானை கேரளாவிலிருந்து 2003 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இதன் பாகன் பெயர் ராஜகோபால். இதன் தனித்துவமான ஹேர்ஸ்டைலை இவர்தான் பராமரித்து வருகிறது. தினந்தோறும் செங்கமலத்தை குளிக்க வைத்து அதன் தலைமுடியை துவட்டிவிட்டு, பின்னர் சீப்பால் வாரி விடுவார். அத்தனை அழகாக இருக்கும் இந்த செங்கமலம்.

குழந்தை

குழந்தை

இதுகுறித்து ராஜகோபால் கூறுகையில், செங்கமலம் எனது குழந்தை போன்றது. எனது "குழந்தைக்கு" சிறப்பான ஹேர்ஸ்டைலை வைக்க வேண்டும் என நினைத்து அதற்கு முடியை வளர்த்து விட்டேன். பின்னர் செங்கமலம் சாந்தமாக இருந்ததால் பாப்கட் செய்வதற்கு எந்த இடையூறையும் செய்யாமல் சமர்த்தாக இருந்தது.

பாப்கட் செங்கமலம்

பாப்கட் செங்கமலம்

அனைவருடனும் நன்றாக பழகும் என்பதால் கோயில்களில் சில யானைகளை கட்டி வைப்பதில்லை. அதில் ஒரு யானை இந்த செங்கமலம். இதை எப்போதும் கட்டி வைப்பதில்லை. கோயில் மூடியபின்னர் கோயிலை சுற்றி வருகிறது செங்கமலம். இவளுக்கு கோடை காலங்களில் தினமும் 3 முறை தலைக்கு குளிக்க வைப்பது வழக்கம்.

45 ஆயிரம் ரூபாய்

45 ஆயிரம் ரூபாய்

அது போல் மற்ற நாட்களில் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது தலைக்கு குளிக்க வைத்துவிடுவார் ராஜகோபால். கோடை காலங்களில் வெப்பத்தை தணிப்பதற்காகவே ரூ 45 ஆயிரம் செலவில் ஸ்பெஷலான ஷவர் வைத்துள்ளார். பின்னர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் செங்கமலத்திற்காக ராஜகோபால சுவாமி கோயிலில் நீச்சல் குளம் அமைக்கப்பட்டது.

கட்டி கரும்புடன் போஸ் கொடுத்த பாப்கட் செங்கமலம்

கட்டி கரும்புடன் போஸ் கொடுத்த பாப்கட் செங்கமலம்

பொங்கல் பண்டிகையை தமிழகமே கொண்டாடி வரும் நிலையில் செங்கமலம் மட்டும் என்ன விதிவிலக்கா? காலையில் குளித்து முடித்து தலையை சீவிக் கொண்டு ஒரு கட்டு கரும்பை சுவைத்தது. அந்த கரும்பை பார்த்தவுடன் உற்சாகமாக போஸ் கொடுத்தது. இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. செங்கமலம் சிரிக்குது..!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+