திவாலாகும் நிறுவனத்தை காப்பாற்றிய ஏஐ.. ஓவர் நைட்டில் ஒபாமா ஆன கதை

Subscribe to Oneindia Tamil

இன்றைய உலகில் தொழில்நுட்ப மாற்றங்கள் வேகமாக நடைபெறும் நிலையில், பல நிறுவனங்கள் தங்களது பழைய வியாபார மாதிரியை முழுமையாக மாற்றி அமைக்கும் முடிவுகளை எடுக்கின்றன. இத்தகைய ஒரு ஆச்சரியமான மாற்றத்தை செய்த அமெரிக்காவின் ஷூ தயாரிப்பு நிறுவனமான ஆல்பேர்ட்ஸ் (AllBirds) எதிர்கொண்டுள்ளது.

இதில் வேடிக்கை என்னவென்றால் AllBirds நிறுவனத்தின் வர்த்தகம் முடங்கியதால் இந்நிறுவனத்தை விற்பனை செய்ய விலையும் பேச்சப்பட்ட நிலையில், கடைசி கட்டத்தில் எடுத்த ஒரு முடிவு அதன் தலையெழுத்தையே மாற்றியுள்ளது.

AI Stock market USA Shoe Allbirds AI Pivot Allbirds Stock Surge 582 Shoes to AI Cloud NewBird Inc Launch GPUaaS Allbirds 582 allbirds ai pivot 2026 allbirds stock surges 582 percent allbirds rebrands to newbird allbirds gpu as a service eco shoe company becomes ai firm allbirds overnight stock explosion allbirds convertible debt ai plan from shoes to ai infrastructure allbirds newbird inc gpu cloud allbirds meme stock rally roundhill etf buys allbirds matt maley allbirds froth warning allbirds market cap jumps 120 million allbirds 2021 ipo to ai pivot allbirds saves itself with ai pivot 2026 582 2021

ஷூ தயாரிப்பில் புகழ் பெற்ற ஆல்பேர்ட்ஸ்

Eco-Friendly ஷூக்களுக்காக உலகம் முழுவதும் பிரபலமாக இருந்த ஆல்பேர்ட்ஸ் இன்க்., மார்ச் 31 அன்று தனது செயல்பாடுகளை முழுமையாக நிறுத்தி, அனைத்து சொத்துக்களையும் அமெரிக்கன் எக்ஸ்சேஞ்ச் கார்ப்பரேஷனுக்கு 39 மில்லியன் டாலருக்கு விற்கப் போவதாக அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு நிறுவனத்தின் எதிர்காலம் குறித்து பலருக்கு கவலை ஏற்படுத்தியது.

புதிய ஐடியா

நஷ்டத்தை எதிர்கொள்ள முடியாமல் திவால் ஆவதற்கு நிறுவனத்தை நல்ல விலைக்கு விற்றுவிட வேண்டும் என திட்டமிட்டு தான் மார்ச் 31ஆம் தேதி இத்தகைய அறிவிப்பை வெளியிட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில் முக்கியமான ஐடியா உருவானது.

புதன்கிழமை ஆல்பேர்ட்ஸ் நிறுவனம் ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டது. ஷூ தயாரிப்பு செயல்பாடுகளை நிறுத்தும் திட்டத்தை கைவிட்டு, AI கம்ப்யூட்டிங் உள்கட்டமைப்பு வியாபாரத்துக்கு முழுமையாக நிறுவனச்தை திரும்புவதாக அறிவித்தது. அதோடு, நிறுவனத்தின் பெயரையும் NewBird Inc. என்று மாற்ற முடிவு செய்துள்ளது.

AI Stock market USA Shoe Allbirds AI Pivot Allbirds Stock Surge 582 Shoes to AI Cloud NewBird Inc Launch GPUaaS Allbirds 582 allbirds ai pivot 2026 allbirds stock surges 582 percent allbirds rebrands to newbird allbirds gpu as a service eco shoe company becomes ai firm allbirds overnight stock explosion allbirds convertible debt ai plan from shoes to ai infrastructure allbirds newbird inc gpu cloud allbirds meme stock rally roundhill etf buys allbirds matt maley allbirds froth warning allbirds market cap jumps 120 million allbirds 2021 ipo to ai pivot allbirds saves itself with ai pivot 2026 582 2021

புதிய சேவை

இந்த புதிய திட்டத்தின் கீழ், GPU-as-a-Service (GPUaaS) மற்றும் AI நேட்டிவ் கிளவுட் தீர்வுகளை வழங்கும் முழு ஒருங்கிணைந்த நிறுவனமாக உருமாற திட்டமிட்டுள்ளது AllBirds மன்னிக்கவும் NewBird. இதற்காக 50 மில்லியன் டாலர் மதிப்பிலான கடன் பத்திரங்களை விற்பனை செய்து, கணினி உபகரணங்களை வாங்கி நீண்டகால பார்வையை நிறைவேற்ற உள்ளது.

ஏஐ தொழில்நுட்பம் உச்சத்தில் இருக்கும் இத்தகைய சூழ்நிலையில் ஆல்பேர்ட்ஸ் எடுத்த முடிவு பங்குச்சந்தையில் உடனடியாக எதிரொலித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியான உடனேயே நிறுவனத்தின் பங்கு விலை அசாதாரணமான உயர்வைப் பதிவு செய்தது.

பங்குச்சந்தை சர்ப்ரைஸ்

செவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவில் 2.49 டாலராக இருந்த பங்கு விலை, புதன்கிழமை அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில் 24.31 டாலர் உச்சத்தைத் தொட்டது. இது 876 சதவீத உயர்வாகும். இதேவேளையில் புதன்கிழமை வர்த்தகம் முடிவில் பங்கு விலை உச்சத்திலிருந்து 30 சதவீதம் குறைந்தாலும், இறுதியில் 582 சதவீத லாபத்துடன் முடிந்தது.

இதன் மூலம் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ஒரே இரவில் 120 மில்லியன் டாலர் மேல் அதிகரித்தது, ஒரே நாளில் 3 மடங்கு அதிக சந்தை மதிப்பை பெற்றது. ஷூக்கள் தயாரிப்பு மற்றும் AI உள்கட்டமைப்பு ஆகியவற்றுக்கிடையே எந்த தொடர்பும் இல்லாத நிலையிலும் இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ஏஐ சார்ந்த நிறுவனங்களுக்கு சந்தையில் எவ்வளவு வரவேற்பு இருக்கிறது என்பதை தெளிவாக காட்டுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+