இனி நாடு முழுவதும் “4 ஜி”தான் - தேசிய அளவிலான சேவையைத் தொடங்கியது ஏர்டெல்
டெல்லி: முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல் நிறுவனம் தன்னுடைய 4ஜி தொலைத் தொடர்பு சேவையை நாடு தழுவிய அளவில் 296 நகரங்களில் நேற்று தொடங்கியது.
டெல்லியில் பேசிய அந்த நிறுவனத்தின் இந்தியா மற்றும் தெற்காசிய பிரிவின் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான கோபால் விட்டல், "கடந்த சில மாதங்களாக நாட்டின் பல்வேறு நகரங்களில் 4ஜி தொலைத் தொடர்பு சேவை கட்டமைப்பை அமைத்து சோதனை நடத்தி வந்தோம்.

இதையடுத்து முழுமூச்சாக நாடு முழுவதும் 4ஜி சேவை தொடங்கியுள்ளோம். இதன் மூலம் ஹெச்.டி வீடியோ, பெரிய அளவிலான படங்கள், பாடல் ஃபைல்களை அதிவிரைவில் அப்லோட், டவுன்லோட் செய்யலாம்.
செல்லிடப்பேசிகள், டாங்கிள்கள், பொது இடங்களில் 4ஜி "ஹாட் ஸ்பாட்" வைபை டாங்கிள்கள் வழியாக இந்த சேவையைப் பெறலாம். ஏற்கெனவே 3ஜி சிம் கார்டு வைத்துள்ளவர்கள் புதிய 4ஜி சேவைக்கு மாறினால் 3ஜி சேவைகளின் கட்டணத்திலேயே ஏர்டெல் 4ஜி சேவை பெறலாம்" என்று அவர் தெரிவித்தார்.
இந்த ஏர்டெல் 4 ஜி சேவை முதன் முதலில் கொல்கத்தாவில்தான் கடந்த 2012 ஆம் ஆண்டில் துவக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications