தங்கம் வாங்குவது இருக்கட்டும்.. அக்ஷய திருதியை நாளில் இதை மட்டும் செய்யாதீங்க.. உஷார்!
அட்சய திருதியை பண்டிகை இன்றும், நாளையும் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தங்கம் விலை அதிகமாக இருக்கும் காரணத்தாலும், அதிகப்படியான தடுமாற்றம் இருக்கும் காரணத்தாலும் இன்றைய தினத்தில் தங்கம் வாங்கும் மக்கள் எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்துள்ளதாக நகைக்கடை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
அட்சய திருதியை நாளில் 2-3 முறை தங்கம் விலை மாறும் காலம் போய் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் நேற்றை விலைக்கு விற்கப்பட்டு வருகிறது. சென்னை ரீடைல் சந்தையில் 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.15,666, 22 கேரட் ரூ.14,360, 18 கேரட் ரூ.11,980 விலையில் வர்த்தகமாகி வருகிறது. வெள்ளி ஒரு கிராம் ரூ.280 மற்றும் ஒரு கிலோ ரூ.2,80,000 ஆக விற்பனையாகிறது. பிளாட்டினம் ஒரு கிராம் ரூ.6,201 மற்றும் 10 கிராம் ரூ.62,010 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்திய மக்களின் மனதில் அட்சய திருதியை என்றால் செல்வம் மற்றும் பணம் என்று ஆழமாகப் பதிந்துள்ளது. அக்ஷய என்ற சொல்லுக்கு ஒருபோதும் குறையாதது அல்லது என்றும் வளர்பவை என்று பொருள். இந்த நாளில் நீங்கள் எதைத் தொடங்கினாலும் அது பல ஆண்டுகளாக வளர்ந்து பெருகும் என்ற நம்பிக்கை உள்ளது.
இந்த நாளில் விதைக்கப்படும் எந்த நல்ல செயலும் காலப்போக்கில் பெருகி நன்மையைத் தரும் என்று நம்பப்படுகிறது. தங்கம் வாங்குவது, புதிய தொழில் தொடங்குவது, முதலீடு செய்வது போன்றவை இந்த நாளில் மிகவும் சிறப்பானவையாகக் கருதப்படுகின்றன. இதேவேளையில் அட்சய திருதியை நாளில் செய்யக்கூடாத சில விஷயங்களும் உண்டு
1. அட்சய திருதியை நாளில் கடன் அல்லது கிரெடிட் கார்டு மூலம் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். இது தொடர் கடன் சுமையை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. அதேபோல், மற்றவர்களுக்கு பணம் கொடுப்பதையும் தவிர்க்கலாம். ஏனெனில் இது தனது வீட்டின் அதிர்ஷ்டத்தை வெளியேற்றுவது போல் அமையும்.
குறிப்பாக கிரெடிட் கார்டு மூலம் தங்கத்தை வாங்காதீங்க. இது நம்பிக்கையை தாண்டி முதலீட்டிலும் தவறான முடிவு. தங்கம் விலை உயர்வ காட்டிலும் கிரெடிட் கார்டு மீது வாங்கும் கடனுக்கு வட்டி அதிகம். இதனால் இத்தகைய முயற்சி கட்டாயம் நஷ்டத்தில் தான் முடியும்.
2. பெரிய ஆடம்பரப் பொருட்களை வாங்குவதற்குப் பதிலாக, நீண்ட கால மதிப்பு கொண்ட விஷயங்களில் கவனம் செலுத்துவது நல்லது. தங்கம் போன்றவற்றை வாங்குவது செல்வ வளர்ச்சிக்கு உகந்தது.
தங்கம் வாங்குவதற்கு பதில் இதை செய்யலாம்
1. ஏற்கனவே உள்ள கடன்களை அடைப்பது இந்த நாளில் மிகவும் நல்லது. இதனால் கடன் பொறுப்புகளிலிருந்து விடுபட்டு புதிய தொடக்கத்திற்கு வழி ஏற்படும்.
2. தானம் செய்வது இந்த நாளின் மிக முக்கிய அம்சம். இங்கு செய்யப்படும் தானங்கள் அக்ஷய புண்ணியம் என்று அழைக்கப்படும். இது என்றும் முடிவில்லாத நன்மையைத் தரும் என்றும், பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும் என்றும் நம்பப்படுகிறது. எளிய மக்களுக்கு உணவு, உடை அல்லது பண உதவி செய்வது இந்த நாளில் பெரும் புண்ணியத்தைத் தரும் எனவும் நம்பப்படுகிறது.
அட்சய திருதியை ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை மற்றும் ஏப்ரல் 20, திங்கட்கிழமை ஆகிய இரண்டு நாட்களிலும் கொண்டாடப்படுகிறது. இந்த திதி ஏப்ரல் 19, 2026 அன்று காலை 10:49 மணிக்கு துவங்கி, ஏப்ரல் 20, 2026 அன்று காலை 07:27 மணிக்கு முடிவடைகிறது. இதனால் இக்காலக்கட்டத்தில் உங்கள் செல்வத்தை பெருக்கும் செயல்களையோ அல்லது கடன் சுமையை குறைக்கும் செயலையோ செய்யலாம்.
-
இந்தியாவில் வீடுகளில் தேங்கி கிடக்கும் 32,000 டன் தங்கம்.. மறுசுழற்சி செய்ய விரும்பும் மோடி! ஏன்? -
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல் -
இனி தங்கம் உங்க கையில விளையாடும்! தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! 5 நாள் ட்ரெய்னிங் போதும்! -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஆட்டம் போடும் அமெரிக்க டாலர்.. கோடிக்கணக்கான ரூபாய் தங்கத்தை விற்ற ரிசர்வ் வங்கி! இது தான் காரணமா? -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
அய்யா ட்ரம்பு நல்ல சீட்டா எடுத்து போடுங்க! சூப்பர் ஸ்ட்ராங்கான டாலர்! தாறுமாறாக தங்கம் விலை! ஷாக்! -
Gold rate today: தங்கம் விலை அதிரடி சரிவு.. இன்று ஒரே நாளில் ரூ.1,040 குறைவு.. நகை பிரியர்கள் குஷி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications