டிம் குக் ராஜினாமா.. கைமாறும் ஆப்பிள் சிஇஓ பதவி.. ஸ்டீவ் ஜாப்ஸ் கனவு நிறைவேறுமா?

Subscribe to Oneindia Tamil

உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், கிட்டத்தட்ட 2 வருட போராட்டத்திற்கு பின்பு தனது தலைமை நிர்வாகத்தில் ஒரு முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் அறிவிப்பில், புது சிஇஓ தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாகவும், டிம் குக் செப்டம்பர் 2026-ல் பதவியை விட்டு விலக உள்ளதாகவும் அறிவித்துள்ளது. இதேவேளையில் டிம் குக் நிறுவனத்தை முழுமையாக விட்டு வெளியேறாமல், அவர் எக்ஸிக்யூட்டிவ் சேர்மேன் என்ற புதிய பொறுப்புக்கு மாறுகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Apple Tim cook

ஆப்பிள் நிறுவனத்தின் சமீபத்திய தயாரிப்புகள் மக்கள் மத்தியில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை, இதேபோல் சீன சந்தை வர்த்தகத்தையும் மெல்ல மெல்ல இழந்து வருகிறது. இதோடு பெரும் பகுதி உற்பத்தியை சீனாவில் இருந்து இந்தியாவுக்கும், பிற ஆசிய நாடுகளுக்கும் மாற்றியதில் பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டு வருகிறது. இதற்கு மத்தியில் ஏஐ, சர்ச் ஆதிக்க பிரச்சனைகளும் ஆப்பிளை வாட்டி வதைத்து வருகிறது.

இந்த மோசமான நிலையை ஆப்பிள் நிறுவனத்தின் 65 வயதான தலைமை நிர்வாக அதிகாரி (CEO) டிம் குக் சமாளிக்க பெரும் போராட்டத்தை எதிர்கொண்டு வந்தார். மேலும் வயது காரணமாகவும் அவர் இப்பதவியில் இருந்து ஒய்வு பெற வேண்டிய கட்டாயமும் இருக்கும் காரணத்தால் கடந்த 2 வருடங்களாக ஆப்பிள் நிறுவனத்திற்கான புது சிஇஓ தேடும் பணிகளை நடந்து வந்தது.

இதேவேளையில் அமெரிக்காவின் முன்னணி டெக் நிறுவனங்களில் இருப்பது போல் ஆப்பிள் நிறுவனத்திலும் இந்திய சிஇஓ நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இது ஏமாற்றமாக இருக்கிறது.

டிம் குக் 15 ஆண்டுகால சாதனை

2011-ம் ஆண்டு ஸ்டீவ் ஜாப்ஸ் பதவியை விட்டு விலகியபோது ஆப்பிள் நிறுவனம் பெரும் நெருக்கடியில் இருந்தது. அந்த நேரத்தில் பொறுப்பேற்ற டிம் குக், ஆப்பிள் நிறுவனத்தை உலகின் மிகப்பெரிய 4 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள நிறுவனமாக மாற்றினார்.

அவர் பதவியேற்றபோது நிறுவனத்தின் மதிப்பு சுமார் 400 பில்லியன் டாலராக மட்டுமே இருந்தது. அதாவது, அவர் தலைமையில் நிறுவனம் 3.6 டிரில்லியன் டாலர் அளவுக்கு வளர்ந்துள்ளது. வெறுமென ஹைப் மட்டும் அல்லாமல், செயல்திறன், வரிவாக்கம் மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றில் டிக் குக் கவனம் செலுத்தி ஆப்பிள் நிறுவனத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு வந்தார்.

ஜான் டெர்னஸ் புதிய CEO

டிம் குக் பதவியை விட்டு நீக்கப்படும் நிலையில் செப்டம்பர் 1-ம் தேதி முதல், நிறுவனத்தின் ஹார்ட்வேர் பிரிவை தலைமையேற்று நடத்தி வரும் ஜான் டெர்னஸ் (John Ternus) புதிய CEO-வாக பொறுப்பேற்கிறார்.

50 வயதான ஜான் டெர்னஸ், ஆப்பிளில் சுமார் 25 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஐபோன், மேக், மற்றும் விஷன் ப்ரோ உள்ளிட்ட நிறுவனத்தின் முக்கிய தயாரிப்புகளின் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளார் John Ternus. இதனால் ஆப்பிள் நிறுவனத்திற்கும், உயர்மட்ட நிர்வாகத்திற்கும் John Ternus புதிய முகம் அல்ல, நிறுவனத்தின் செயல்பாடுகளை முழுமையாக தெரிந்துகொண்டும், புரிந்துக்கொண்டும் இயங்கும் நபராக ஜான் டெர்னஸ் விளங்குகிறார்.

இது மாற்றமில்லை, தொடர்ச்சி

இந்த தலைமை பொறுப்பு மாற்றத்தால் ஆப்பிள் நிறுவனத்திற்கு எந்தவித அதிர்ச்சியும் ஏற்படாது. இது நீண்டகால வளர்ச்சி திட்டத்தின் ஒரு பகுதி என்று நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது. டிம் குக் தனது விலகல் மற்றும் புது சிஇஓ நியமனம் குறித்து ஊழியர்களுக்கு வெளியிட்ட செய்தியில், ஆப்பிளின் அடிப்படை கொள்கைகளான எளிமை, அர்த்தமுள்ள புதுமையில் மட்டும் கவனம் செலுத்துவது மற்றும் சிறந்த தரத்தை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

ஜான் டெர்னஸை ஒரு தொலைநோக்கு பார்வை கொண்டவர் என்றும், நிறுவனத்தின் தயாரிப்புகளையும், கொள்கைகளையும் நன்கு அறிந்தவர் என்றும் குக் பாராட்டியுள்ளார் டிம் குக்.

இதோடு டிம் குக் தொடர்ந்து நிறுவனத்தில் இருப்பதால், ஆப்பிளின் முகமாக தொடர்ந்து அவரே இருப்பார். காலப்போக்கில் குறிப்பாக WWDC கூட்டத்தின் மூலமாகவும், பிற சந்தர்பங்களில் ஜான் டெர்னஸ் மெல்ல மெல்ல முன்னிலைப்படுத்தப்படுவார். இதனால் நிர்வாகம், வர்த்தகம், புதுமை என அனைத்தும் ஒருசேர இயங்கும் வகையில் தற்போது ஆப்பிள் உருவெடுத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+