அதிர்ஷ்டம் ஒரு முறை தான் கதவை தட்டும்.. 100 ரூபாய்க்கும் குறைவான 3 அண்டர்வேல்யூ பென்னி ஸ்டாக்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பங்குச் சந்தையில் அதிர்ஷ்டம் ஒரு முறை கதவை தட்டும் என்பார்கள். அதை நிரூபிக்கும் வகையில், இந்தியப் பங்குச் சந்தை சில அதிசயமான பங்குகள் பெரும் லாபத்தை முதலீட்டாளர்களுக்கு கொடுத்துள்ளது. அதிலும் குறிப்பாக, மிகக் குறைந்த விலையில் வர்த்தகமாகும் பென்னி ஸ்டாக்-ல் முதலீடு செய்தவர்கள் தங்கள் வாழ்க்கையையே மாற்றிக் கொள்ளும் அளவுக்கு பெரும் லாபம் ஈட்டியுள்ளனர்.

இப்படி பங்குச் சந்தையில் அதிக விலை கொண்ட பங்குகள் மட்டுமல்ல, குறைந்த விலையில் உள்ள சில பங்குகளும் நல்ல அடிப்படை வலிமையுடன் இருக்கும் என்பதை முதலீட்டாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

குறைந்த விலை என்பது எப்போதும் பலவீனமான நிறுவனம் என்று அர்த்தமல்ல. சரியான ஆராய்ச்சி, தரவுகள் உடன் தேர்ந்தெடுக்கப்படும் பங்குகள் நீண்டகாலத்தில் நல்ல லாபத்தைத் தரும். தற்போது ரூ.100-க்கு கீழே உள்ள சில வலுவான நிதியியல் அடிப்படை கொண்ட பங்குகளை பார்ப்போம்.

Stock market investment Best Stocks Under 100 Rupees 2026 NMDC Share Price Analysis Suzlon Energy Investment 2026 Punjab National Bank Stock Undervalued Stocks India Stocks Under Rs 100 with Good Fundamentals NMDC Suzlon PNB Recommendations Low PE Stocks India 2026 Dividend Yield Stocks Under 100 Best Penny Stocks with Strong Fundamentals 100 2026 PE 2026

என்எம்டிசி (NMDC)

இந்தியாவின் மிகப் பெரிய இரும்புத் தாது உற்பத்தி நிறுவனமான என்எம்டிசி (NMDC), ஸ்டீல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நவரத்னா பொதுத்துறை நிறுவனம். சத்தீஸ்கர் மற்றும் கர்நாடகாவில் பெரிய சுரங்கங்களை நடத்தி வரும் என்எம்டிசி, இரும்புத் தாது மட்டுமின்றி ஸ்டீல் உற்பத்தியிலும் விரிவாக்கம் செய்து வருகிறது.

தற்போது இந்தப் பங்கின் விலை ரூ.87.40 ஆக உள்ளது. இதன் PE விகிதம் 11.2 மட்டுமே (இத்துறை சராசரி 19.18). டிவிடெண்ட் லாபம் 3.8 சதவீதம் உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இந்நிறுவனத்தின் விற்பனை 15.4 சதவீதமும், நிகர லாபம் 12.7 சதவீதமும் வளர்ச்சி கண்டுள்ளது. நல்ல டிவிடெண்ட் மற்றும் வலுவான நிதி நிலை கொண்ட இந்தப் பங்கு பாதுகாப்பான முதலீட்டு விருப்பமாகக் கருதப்படுகிறது.

சுஸ்லான் எனர்ஜி (Suzlon Energy)

புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் இந்தியாவின் முன்னணி நிறுவனமான திகழ்கிறது சுஸ்லான் எனர்ஜி, உலக அளவில் 21.5 ஜிகாவாட் அளவுக்கு காற்றாலை மின்னுற்பத்தி திறனை நிறுவியுள்ளது. ஜெர்மனி, நெதர்லாந்து, டென்மார்க் உள்ளிட்ட நாடுகளில் ஆராய்ச்சி மையங்களுடன் செயல்படும் சுஸ்லான் எனர்ஜி, இந்தியாவில் 15.5 ஜிகாவாட் திறனுடன் முன்னிலையில் உள்ளது. த

ற்போது இந்தப் பங்கின் விலை ரூ.52.50 ஆக உள்ளது. PE விகிதம் 22.3 (இத்துறை சராசரி 36.96). கடந்த 5 ஆண்டுகளில் விற்பனை வளர்ச்சி 29.7 சதவீதமாக உள்ளது. கடந்த காலாண்டில் வருவாய் 42 சதவீதம் அதிகரித்து ரூ.4,228 கோடியாகவும், நிகர லாபம் ரூ.445 கோடியாகவும் உயர்ந்துள்ளது. கிரீன் எனர்ஜி துறையின் எதிர்கால வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு இந்தப் பங்கு முக்கியத்துவம் பெறுகிறது.

பஞ்சாப் நேஷனல் பேங்க் (Punjab National Bank)

இந்தியாவின் மிகப் பழமையான மற்றும் பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் பேங்க், டிஜிட்டல் சேவைகளை விரிவுபடுத்தி வருகிறது. தற்போது இந்தப் பங்கின் விலை ரூ.99.60 ஆக உள்ளது. PE விகிதம் 6.8 மட்டுமே (இத்துரை சராசரி 7.7).

புக் வேல்யூவுக்கு விலை விகிதம் 0.8. டிவிடெண்ட் விளைவு 2.9 சதவீதமாக உள்ளது. கடந்த காலாண்டில் நிகர லாபம் ரூ.5,225 கோடியாக உயர்ந்துள்ளது. பெரிய அளவிலான வங்கியாக இருந்தும் குறைந்த PE விகிதத்தில் வர்த்தகமாகும் இந்தப் பங்கு, மதிப்பு முதலீட்டாளர்களுக்கு ஈர்க்கக்கூடியதாக உள்ளது.

இந்த மூன்று நிறுவனங்களும் தங்கள் துறையில் வலுவான அடித்தளத்துடன், நல்ல வருவாய் வளர்ச்சி, குறைந்த கடன் மற்றும் நம்பகமான நிர்வாகத்துடன் செயல்பட்டு வருகின்றன.

இருப்பினும், பங்குச் சந்தை முதலீடுகள் சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு உள்ளாகும் என்பதை முதலீட்டாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும். குறைந்த விலைப் பங்குகளில் முதலீடு செய்யும் முன், நிறுவனத்தின் அடிப்படை வலிமை, தொழில் நிலை மற்றும் சொந்த ஆராய்ச்சியை மேற்கொள்ளுமாறு நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

தற்போதைய சந்தை சூழலில், நீண்டகால முதலீட்டுக்கு ஏற்ற வலுவான அடிப்படை கொண்ட இத்தகைய பங்குகள் கவனத்திற்குரியவையாக உள்ளன.

ஆனால் சில அதிசய லாபம் தரும் பங்குகள்எப்போதாவது நம் கதைவை தட்டும், ஆனால் பங்குச்சந்தை என்பது புதைகுழிப்போன்றது. எனவே அதிர்ஷ்டம் கதவை தட்டுகிறது என்ற ஆசையில் புதைகுழிக்குள் சிக்கிகொள்ள வேண்டாம். உங்களுடைய ரிஸ்க் தாங்கும் திறன் கொண்டு முதலீடு செய்வதை கொண்டு முடிவு செய்யுங்கள். பென்னி பங்குகள் மிக அதிக ஆபத்து கொண்டவை என்பதையும் முதலீட்டாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

பென்னி பங்காக இருந்தாலும் ஒரு நிறுவனத்தின் நிதி அடிப்படையும், அதன் வர்த்தக ஸ்திர தன்மை அடிப்படைய ஆராய் முதலீடு செய்யுங்கள். லாப சதவீதத்தை மட்டும் பார்த்து முதலீடு செய்ய வேண்டாம்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Tamil.oneindia.com அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+