பிஸ்கெட்டிற்கு வரி குறையுமா? - அருண்ஜெட்லியிடம் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

பிஸ்கெட் மற்றும் அதைச் சார்ந்த பொருட்களுக்கான வரியை தற்போதுள்ள 18 சதவிகிதத்திலிருந்து குறைக்க வேண்டும் என்று பிஸ்கெட் உற்பத்தித் துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பிஸ்கெட்களுக்கு தற்போது விதிக்கப்பட்டுள்ள 18 சதவிகித வரி மிக மிக அதிகமாகும். அவற்றுக்கு 5 முதல் 12 சதவிகித வரி மட்டுமே விதிக்கப்பட வேண்டும் என்பது பிஸ்கெட் உற்பத்தியாளர்களின் கோரிக்கை.

ஜூலை மாதம் 1ஆம் தேதி சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்ட போது பிஸ்கெட்களுக்கு 18 சதவிகித வரி விதிக்கப்பட்டது. அதன் பின்னர் பிஸ்கெட் விற்பனையில் 15 சதவிகித சரிவு ஏற்பட்டதாக அத்துறையினர் கவலை தெரிவிக்கின்றனர்.

Biscuit manufacturers call for lower GST rate

பிஸ்கெட் உற்பத்தித் துறையானது தொழிலாளர்கள் சார்ந்த துறையாகும். இத்துறையில் சிறு ஊழியர்கள், விநியோகஸ்தர்கள், லாஜிஸ்டிக் ஊழியர்கள், என நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 2.5 கோடிப் பேர் வேலைவாய்ப்புப் பெறுகின்றனர்.

டீ, ஜூஸ், பதப்படுத்தப்பட்ட உலர் பழங்கள், இனிப்பு வகைகள் ஆகியவற்றிக்கு கூட 5 சதவிகித வரி தான் உள்ளது என்பது பிஸ்கெட் உற்பத்தியாளர்களின் கருத்தாகும்.

ஜிஎஸ்டியில் பிஸ்கெட்களுக்கு தற்போது விதிக்கப்பட்டுள்ள 18 சதவிகித வரி மிக மிக அதிகமாகும். அவற்றுக்கு 5 முதல் 12 சதவிகித வரி மட்டுமே விதிக்கப்பட வேண்டும் என்பது பிஸ்கெட் உற்பத்தியாளர்களின் கோரிக்கை.

தற்போது பிஸ்கெட்களுக்கு வரி குறைக்கப்படாவிட்டால் பிஸ்கெட்களுக்கான விலையும் உயர்த்தப்படும் என்று இந்திய பிஸ்கெட் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய இந்திய பிஸ்கெட் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் தலைவரான பி.பி.அகர்வால் பிஸ்கெட் மற்றும் அது சார்ந்த பொருட்கள் இந்தியாவில் மிக அதிகமாக நுகரப்படுகின்றன.

பிஸ்கெட்டிற்கான வரி குறைக்கப்படாவிட்டால் தற்போது ரூ.5க்கு விற்பனையாகும் 50 கிராம் பிஸ்கெட், அதே விலைக்கு 30 கிராமாகக் குறைக்கப்படும் என்றும் பி.பி.அகர்வால் கூறியுள்ளார்.

பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்பாக டெல்லியில் இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மின்னணு பண பரிமாற்றத்தை ஊக்குவிப்பது பற்றிய ஆலோசனைகள் இன்று நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+