பட்ஜெட் எதிரொலி: பிரீமியம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5 குறைப்பு
டெல்லி: மத்திய பட்ஜெட்டில் பிரீமியம் பெட்ரோல் மீதான கலால் வரி குறைக்கப்பட்டதை அடுத்து அதன் விலை லிட்டருக்கு ரூ.5 குறைந்துள்ளது.
நிதி அமைச்சர் அருண் ஜேட்லி 2014-2015ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அப்போது அவர் பிரீமியம் பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.7.50ல் இருந்து ரூ.2.35 ஆக குறைப்பதாக அறிவித்தார்.

பிரீமியம் பெட்ரோலுக்கு லிட்டருக்கு ரூ.15.50ம், சாதாரண பெட்ரோலுக்கு ரூ.9.20ம், பிரீமியம் டீசலுக்கு ரூ.5.75ம், சாதராண டீசலுக்கு ரூ.3.46ம் கலால் வரி வசூலிக்கப்படுகிறது. சாதாரண பெட்ரோலை விட பிரீமியம் பெட்ரோலின் விலை அதிகமாக இருந்ததால் அதன் விற்பனை கிட்டத்தட்ட நின்றுவிட்டது. இந்நிலையில் பிரீமியம் பெட்ரோலுக்கான கலால் வரி வெகுவாக குறைக்கப்பட்டுள்ளதால் அதன் வியாபாரம் மீண்டும் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அருண் ஜேட்லியின் அறிவிப்பை அடுத்து பிரீமியம் பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ.5 குறைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் பிரிட்டிஷ் பெட்ரோலியம் கார்பரேஷன் லிமிடெட்டின் பிரீமியம் பெட்ரோல் தற்போது லிட்டருக்கு ரூ. 83.03க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சாதாரண பெட்ரோல் லிட்டருக்கு ரூ.73.55 ஆக உள்ளது.
இந்த விலை குறைப்பு மூலம் பிரீமியம் பெட்ரோலின் விற்பனை அதிகரிக்கக்கூடும்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications