CGTMSE: 10 கோடி வரை பிணையில்லா கடன்.. சிபில் தேவையில்லை.. கட்ட முடியாவிட்டால் மத்திய அரசே ஜாமீன் தரும்
சென்னை: இன்றைக்கு வேலைக்கு செல்லும் பலருக்கும் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்பது கவனமாக உள்ளது. ஆனால், "கடன் வாங்க சிபில் ஸ்கோர்அதிகம் இருக்க வேண்டுமே" என்ற கவலை பலரைத் தயங்க வைக்கிறது. அண்மை காலமாக, "புதிய கடன்களுக்கு சிபில் பொருந்தாது" அல்லது "தொழில் தொடங்குவோருக்கு சிபில் தேவையில்லை" என்ற செய்திகள் பரவி வருகின்றன. இதன் உண்மை நிலை என்ன மற்றும் அரசு தரும் சலுகைகள் என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
சிபில் ஸ்கோர் உண்மையிலேயே தேவையில்லையா என்ன?
பொதுவாக, வங்கிகள் ஒருவருக்குக் கடன் தரும்போது அவர்களின் கடன் திருப்பிச் செலுத்தும் வரலாற்றை சிபில் மூலம் சரிபார்க்கும். இந்த சிபில் என்பது கடன் வாங்கிய வரலாறை ஏற்றி வைத்துள்ள தனியார் நிறுவனம் ஆகும்.

ஆனால், புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு எந்த ஒரு கடன் வரலாறும் இருக்காது என்பதால், வங்கிகள் சிபில் ஸ்கோருக்குப் பதிலாக அவர்களின் திட்ட அறிக்கை (Project Report) மற்றும் எதிர்கால வருவாய் ஈட்டும் திறன் ஆகியவற்றை தான் முக்கியமான விரும்புகினற்ன. இருப்பினும், ஏற்கனவே வாங்கிய தனிநபர் கடன்களில் நீங்கள் 'டிபால்ட்' செய்திருந்தால், அது கடன் கிடைப்பதைப் பாதிக்கும். அதாவது நீங்கள் ஏற்கனவே தனிநபர் கடன் வாங்கி அல்லது கிரெடிட் கார்டு கடன் வாங்கி கட்டாமல் விட்டிருந்தால் கடன் கிடைப்பது கடினமாகிவிடும்.
அரசு வழங்கும் முக்கிய கடன் திட்டங்கள்
பி.எம். முத்ரா யோஜனா :
சிறு தொழில்களுக்காக வழங்கப்படும் இத்திட்டத்தில் பிணையின்றி கடன் பெறலாம்.
சிசு பிரிவில் ₹50,000 வரை எளிதாக கடன் பெறலாம்.
கிஷோர் பிரிவில் ₹50,000 முதல் ₹5 லட்சம் வரை நீங்கள் எளிதாக கடன் பெறவும் வழிகள் உள்ளன.
தருண் பிரிவில் மத்திய அரசின் பி.எம். முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் ₹5 லட்சம் முதல் ₹10 லட்சம் வரை வழங்கப்படுகிறது.
பி.எம். முத்ரா யோஜனா திட்டத்தில் வட்டி விகிதத்தை பொறுத்தவரை 8.40% முதல் 12% வரை இருக்கிறது. ஆனால் வங்கிக்கு வங்கி வட்டி விகிதம் மாறுபடும்.பொதுத்துறை வங்கிகள் என்றால் வட்டி விகிதம் மிக குறைவாகவே கிடைக்கும். மானியமும் கண்டிப்பாக கிடைக்கும்.
பி.எம்.இ.ஜி.பி திட்டம்
பி.எம்.இ.ஜி.பி என்ற மத்திய அரசின் திட்டம் உற்பத்தி மற்றும் சேவைத் துறை சார்ந்த புதிய தொழில்களுக்கு மானியத்துடன் கூடிய கடன் வழங்கும் திட்டமாக இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் கடன் வரம்பு என்பது உற்பத்தித் துறைக்கு ₹50 லட்சம் வரையிலும், சேவைத் துறைக்கு ₹20 லட்சம் வரையிலும் உள்ளது. இதற்கு நகர்ப்புறத்தில் தொழில் முனைவோருக்கு 15% - 25% மானியம் கிடைக்கும். கிராமப்புற தொழில் முனைவோருக்கு 25% - 35% வரை அரசு மானியம் வழங்குகிறது. தகுதி என்று பார்த்தால், 18 வயது பூர்த்தியான இந்திய குடிமகன்கள் யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்.
CGTMSE திட்டம்
Credit Guarantee Fund Trust for Micro and Small Enterprises என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும். சி.ஜி.டி.எம்.எஸ்.இ திட்டம் தொழில் முனைவோராக விரும்புவோருக்கு முக்கியமானது. நீங்கள் வங்கியிடம் கடன் கேட்கிறீர்கள். ஆனால் வங்கி "உங்களிடம் அடமானம் வைக்கச் சொத்து இல்லையே?" என்று கேட்கும். ஆனால் அரசு CGTMSE திட்டத்தின் படி வங்கிக்கு உத்தரவாதம் அளிக்கிறது.
மத்திய அரசு சிறு தொகையை வசூலிக்கும்
"இவருக்குக் கடனைத் தைரியமாகக் கொடுங்கள். ஒருவேளை இவர் கட்டத் தவறினால், அந்த நஷ்டத்தில் 75% முதல் 85% வரை நாங்கள் (அரசு) ஏற்றுக் கொள்கிறோம்" என்று உறுதி அளிக்கும். இதனால் வங்கி உங்களுக்குப் பணத்தைக் கொடுக்கிறது. இந்த கடன்கள் யாருக்குக் கிடைக்கும் என்றால், புதிய தொழில் தொடங்குபவர்கள் அல்லது ஏற்கனவே சிறு குறு தொழில் செய்பவர்கள் பெற முடியும். ₹10 கோடி வரை இப்போது பிணையில்லாமல் கடன் வாங்க முடியும். இந்த உத்தரவாதத்திற்காக அரசு ஒரு சிறிய தொகையை (சுமார் 0.37% முதல் 1.35% வரை) கட்டணமாக வசூலிக்கும்.
CGTMSE ஸ்கீம் லோன்
எனவே புதிதாக தொழில் தொடங்க போகும் தொழில் முனைவோர், வங்கி மேலாளரிடம் பேசும்போது, "எனக்கு CGTMSE ஸ்கீம் மூலமாக லோன் கொடுங்க" என்று கேட்டால், அவர்களுக்குப் பிணை தேவையில்லை என்பது நிச்சயம் தெரியும். இது அரசு தரும் "ஜாமீன்". சொத்து இல்லாத ஏழை இளைஞர்களும் தொழில் தொடங்க இதுவே மிகப்பெரிய பலமாகும். இதற்கு விண்ணப்பிக்க முதலில் 'உதயம்' (Udyam Registration) பதிவு கட்டாயம் ஆகும்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications