தேர்தலுக்கு மத்தியில் வந்த குட்நியூஸ்.. சென்னையில் தங்கம் விலை ரூ.1000 சரிவு.. வெள்ளி 5000 ரூபாய் சரிவு!
தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பரபரப்பில் இருக்கும் வேளையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலையில் பெரிய அளவிலான சரிவு பதிவாகியுள்ளது. இதன் மூலம் 3 நாட்களாக தங்கம், வெள்ளி விலை சரிந்து மிடில் கிளாஸ் மக்களுக்கு தங்க நகை வாங்க சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
சென்னை ரீடைல் சந்தையில் 24 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.15,448 ஆக உள்ளது. இது நேற்றைய விலையை விட ரூ.98 குறைவாகும். 10 கிராமுக்கு கிட்டத்தட்ட 1000 ரூபாய் குறைந்துள்ளது. அதேபோல், பொதுவாக நகை தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் 22 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு 90 ரூபாய் குறைந்து ரூ.14,160 ஆக உள்ளது. மேலும், 18 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.11,810 ஆக விற்கப்படுகிறது. இந்த சரிவு பெரிய அளவில் இல்லாவிட்டாலும், தொடர்ந்து சரிந்து வருவது தங்கத்தை சேமிப்பாக பார்க்கும் மக்களுக்கு மிகப்பெரிய குட்நியூஸ்.
தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து ரூ.270 ஆக விற்கப்படுகிறது. ஒரு கிலோவுக்கு 5000 ரூபாய் குறைந்து ரூ.2,70,000 ஆக உள்ளது.

MCX-ல் தங்கம்-வெள்ளி விலை
ஏப்ரல் 23 அன்று MCX சந்தையில் (multi commodity exchange) காலை வர்த்தக துவக்கத்தில் தங்கம் விலை சுமார் 1 சதவீதம் குறைந்தது. வெள்ளி விலை 2 சதவீதத்துக்கு மேல் குறைந்துள்ளது. முதலீட்டாளர்கள் லாபத்தை வெளியேற்றவும் மற்றும் அமெரிக்கா - ஈரான் இடையேயான புதிய பதற்றம் காரணமாக முதலீட்டை மறுசீரமைப்பு செய்துவரும் காரணத்தால் இந்த சரிவு ஏற்பட்டது. அமெரிக்க டாலர் வலுவடைந்ததுடன் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததும் விலை வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.
எம்சிஎக்ஸ் சந்தையில் ஜூன் மாதம் முடியும் 10 கிராம் 24 கேரட்க்கான தங்க பியூச்சர்ஸ் ஒப்பந்தங்கள் 0.50 சதவீதம் சரிந்து 10 கிராமுக்கு ரூ.1,51,947-ஆக இருந்தன. மே மாத வெள்ளி ஒப்பந்தங்கள் சுமார் 2 சதவீதம் குறைந்து ஒரு கிலோ ரூ.2,43,856-ஆக வர்த்தகமானது.
டாலர் மற்றும் கச்சா எண்ணெய்
டாலர் இன்டெக்ஸ் 0.15 சதவீதம் உயர்ந்தது. பிரெண்ட் கச்சா எண்ணெய் 2 சதவீதம் உயர்ந்து ஒரு பேரல் கச்சா எண்ணெய் 103 டாலருக்கு மேல் வர்த்தகமானது. இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் மத்திய கிழக்கில் எப்படியாவது சாதகமான சூழ்நிலை ஏற்படுமா என்பதை உன்னிப்பாக கவனித்து வருகின்றன. அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் மத்தியில் போர் தாக்குதல் இல்லையென்றாலும் ஹார்முஸ் வழியாக போக்குவரத்து இன்னும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதே தற்போதைய பிரச்சனை.
ஈரான், அமெரிக்காவின் கடற்படை தடை தொடரும் வரை ஹார்முஸ் ஜலசந்தியை திறக்காது என்று அறிவித்துள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ட்ரூத் சோஷியலில் "ஈரான் ஹார்முஸை திறக்க விரும்புகிறது. ஏனெனில் ஈரானுக்கு தினமும் 500 மில்லியன் டாலர் வருமானத்தை இழக்கிறது. இதனால் நிதி ரீதியாக பெரும் இழப்பை எதிர்கொண்டு வருகின்றனர்." என்று தெரிவித்தார்.
கச்சா எண்ணெய் விலை உயர்வு பணவீக்கத்தை அதிகரிக்கும். இதனால் வட்டி விகிதக் குறைப்பு வாய்ப்பு குறையும். இந்த சூழல் தங்கம் போன்ற பாதுகாப்பு முதலீடுகளுக்கு சாதகமற்றதாக அமையும். எனவே முதலீட்டாளர்கள் தங்கம், வெள்ளியை தொடர்ந்து விற்பனை செய்து வெளியேறி வருகின்றனர்.
-
படக்குனு 10 கிராம் வாங்கி போடுங்க.. சட்டென மாறிய தங்க சந்தை! 6 மாதத்தில் இல்லாத சரிவு! சரியான நேரமா? -
தங்கம் வாங்கி வச்சு இருக்கீங்களா? அடுத்த 1 வருடத்தில் நடக்க போகும் சம்பவம்! ராக்பெல்லர் ஷாக் கணிப்பு -
ஆடிய ஆட்டமென்ன? தலைகீழான தங்கத்தின் தலையெழுத்து! கன் மாதிரி நிற்கும் டாலர்! தள்ளாடும் மார்க்கெட்! -
இல்லத்தரசிகளுக்கு இனிப்பான செய்தி.. தடாலடியாகச் சரிந்த தங்கத்தின் விலை! என்ன காரணம் தெரியுமா? -
தங்கம் கடன் வாங்க போறீங்களா? லோன் எடுப்பதில் வரப்போகும் சிக்கல்.. மத்திய அரசின் புது கட்டுப்பாடு? -
Gold Price Today: தடாலடியாக சரிந்த தங்கம் விலை.. 8 நாளில் 8,000 சரிவு.. குஷியில் நகை பிரியர்கள்! இன்றைய ரேட் என்ன? -
தங்கத்தை மொத்தமாக முடக்க புதிய பிளான்.. ஐடியா சொன்ன முக்கிய அமைப்பு.. மத்திய அரசு ஓகே சொல்லுமா? -
தூத்துக்குடி ரூ.18000 கோடி கப்பல் முதலீடு ஆந்திராவுக்கு கைநழுவியது ஏன்? வெள்ளை அறிக்கை தேவை: ராமதாஸ் -
Gold Price: தாறுமாறாக சரிந்த தங்கம் விலை.. ஒரே நாளில் ரூ.3,200 குறைந்தது.. நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி! -
Gold Price: தங்கம் விலை இன்று அதிரடி உயர்வு.. ஒரே நாளில் ரூ.1,040 அதிகரிப்பு.. 8 நாள் சரிவுக்கு பிரேக்! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய்












Click it and Unblock the Notifications