டீசல் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்கிறது?
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டீசல் விலை லிட்டருக்கு ரூ.4 முதல் ரூ.5 வரை உயரலாம் எனத் செய்திகள் வெளியாகியுள்ளதால் நுகர்வோர்கள் கலக்கமடைந்துள்ளனர்.
பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயம் செய்து கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து, கடந்த சில மாதங்களாக கச்சா எண்ணெய் விலை உயர்வை அடுத்து, அடிக்கடி பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தின.

இந்நிலையில், டீசல் விலையை உயர்த்துவது பற்றி கிரித் பரிக் தலைமையிலான கமிட்டி ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வையடுத்து, அக்கமிட்டி டீசல் விலையை ரூ.4 முதல் ரூ.5 வரை உயர்த்தலாம் என்று பரிந்துரை செய்துள்ளது.
இதையடுத்து, டீசல் விலை லிட்டருக்கு ரூ.5 வரை உடனடியாக உயர்த்தப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளது. தீபாவளிப் பண்டிகைக்கு முன்பாகவே இந்த விலை உயர்வு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications