சரக்கு போக்குவரத்திற்கு ஜூன் 1 முதல் இ-வே பில் கட்டாயம்
டெல்லி: உள்ளுரிலும், மாநிலத்திற்குள்ளும் சரக்குகளை எடுத்துச் செல்வதற்கு வரும் ஜூன் 1ம் தேதி முதல் இ வே பில் கட்டாயம் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரி என்னும் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்டது, ஜிஎஸ்டி வரி முறை அமல்படுத்தப்பட்டாலும் வர்த்தகத்திற்கு துணைபுரியும் சரக்கு பரிமாற்றத்திற்கு (Stock Transfer) எந்த விதிமான வழிமுறைகளும் அப்போது வகுக்கப்படவில்லை.
ஏனெனில், சரக்குகளை ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கும், வெவ்வேறு மாநிலத்திற்கும் இடமாற்றம் செய்வதற்கு சரக்கு பரிமாற்ற ஆவணம் (Stock Transfer Note) அவசியம்.
ஜிஎஸ்டி வரிமுறைக்கு முந்தைய காலகட்டத்தில் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு மாற்றம் செய்வதற்கு வே பில் (Way Bill) பயன்படுத்தப்பட்டது.

இ வேபில்
கர்நாடகா மற்றும் சில மாநிலங்களில் இ-சுகம் (E-Sugam) என்னும் திட்டம் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் ஜிஎஸ்டி வரி முறை அமல்படுத்தப்பட்ட பின்பு இந்த நடைமுறைக்கு வேலையில்லாமல் போய்விட்டது.

ஜிஎஸ்டி ஆணையம்
வர்த்தகர்களும், தங்களின் வேறு மாநில கிளைகளுக்கும் மாநிலத்தின் வேறு கிளைகளுக்கும் சரக்குகளை எப்படி கொண்டு செல்வது, அதற்கு எந்தவிதமான ஆவணங்களை உடன் இணைத்து அனுப்புவது என்பது பற்றி ஒரு தெளிவில்லாமல் குழப்பத்தில் இருந்தனர். வர்த்தகர்கள் தங்களின் சந்தேகத்திற்கு விளக்கம் அளிக்கும்படி ஜிஎஸ்டி ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.

ஜிஎஸ்டி ஆணையம்
ஜிஎஸ்டி ஆணையமும் கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் ஓர் இடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கும், வெவ்வேறு மாநிலங்களுக்குள்ளும் சரக்குகளை பரிமாற்றம் செய்வதற்கு இ வே பில் (E-Way Bill) முறை பயன்படுத்தப்படும் என்று அறிவித்தது. பின்னர் அதற்குரிய இணையதளம் முழுமையாக தயார் செய்யப்படாததால். வேறு மாநில கிளைகளுக்கு சரக்குகளை பரிமாற்றம் செய்வதற்கு இ-வே பில் நடைமுறை கட்டாயம் என்றும் மாநிலத்திற்குள் சரக்குகளை பரிமாற்றம் செய்வதற்கு ஜூன் முதல் இ-வே பில் நடைமுறை கட்டாயம் என்று ஜிஎஸ்டி ஆணையம் உத்தரவிட்டது.

வர்த்தகர்கள் முயற்சி
அனைத்து வர்த்தகர்களும் இதனை தவறாக புரிந்துகொண்டு கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் சரக்கு பரிமாற்றத்திற்கு ஜிஎஸ்டி இணையதளத்தில் இ வே பில் தயாரிக்க முன் வந்தனர். ஆனால் நாட்டிலுள்ள அனைத்து வர்த்தகர்களும் ஒரே சமயத்தில் இ-வே பில் தயாரிக்க போட்டி போட்டதால் ஜிஎஸ்டி இணையதளம் முடங்கிவிட்டது.

சோதனை பில்
ஜிஎஸ்டி ஆணையம், நிலைமையை உணர்ந்து, மாநிலங்களுக்கு இடையே 50000 ரூபாய்க்கு மேற்பட்ட மதிப்புள்ள சரக்கு பரிமாற்றத்திற்கு வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் இ-வே பில் நடைமுறை கட்டாயம் என்று உத்தரவிட்டது. விருப்பம் உள்ளவர்கள் விருப்பப்பட்டால் சோதனை அடிப்படையில், இ-வே பில் முறையை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அறிவுறுத்தியது. தற்போது அனைத்து வர்த்தகர்களும் சோதனை அடிப்படையில் (Trial Basis) இ-வே பில் முறையை பயன்படுத்தி வருகின்றனர்.

சரக்கு போக்குவரத்து
தற்போது உள்ளூர் சரக்கு போக்குவரத்திற்கும் ஒரு மாநிலத்திற்குள் இருக்கும் வேறு நகரத்திற்கும் (Intra State) 50000 ரூபாய்க்கும் மேற்பட்ட மதிப்புடைய சரக்குகளை பரிமாற்றம் செய்வதற்கும் இ வே பில் முறை கட்டாயம் என்று உத்தரவிட்டுள்ளது.

ஜூன் 1 முதல் இ வே பில்
இதுபற்றி ராஜ்யசபாவில் கேள்விகளுக்கு எழுத்து மூலமாக பதில் அளித்த நிதித்துறை இணை அமைச்சர் சிவப் பிரதாப் சுக்லா, வரும் ஜூன் 1ம் தேதி முதல் உள்ளூர் சரக்கு போக்குவரத்திற்கும் மாநிலத்திற்கு உள்ளும் சரக்குகளை பரிமாற்றம் செய்வதற்கும் இ வே பில் நடைமுறை கட்டாயம் என்றும், அதே சமயத்தில் மாநிலங்கள் விருப்பட்டால் ஜுன் மாதத்திற்கு முன்பு எந்த தேதியிலிருந்தும் இ-வே பில் முறையை நடைமுறைப்படுத்தலாம் என்றும் ஜிஎஸ்டி ஆணையம் உத்தரவிட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications