அரண்ட தங்க மார்கெட்.. 18 ஆண்டுகளில் இப்படி நடந்ததே இல்லை.. கெவின் வந்த பிறகும் எதிர்பாராத மாற்றம்
சென்னை: தங்கம் விலை சில நாட்களாகக் குறைந்து பொதுமக்களுக்குப் பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்து வந்த நிலையில், இன்று யூடர்ன் போட்டு விலை ஏறி இருக்கிறது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தங்கம் விலை சட்டென இந்தளவுக்கு அதிகரிக்க என்ன காரணம்.. இதன் பின்னணி தொடர்பாக நாம் பார்க்கலாம்.
கடந்த சில நாட்களாகவே தங்கம் பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்து வந்தது. கடந்த வாரம் வெள்ளிக்கிழமை முதலே தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்தது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறையைத் தவிர மற்ற 3 நாட்களிலும் கிராமுக்கு ரூ.950 குறைந்து இருந்தது. இவ்வளவு வேகமாகத் தங்கம் விலை சரிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இன்னும் தொடர்ந்து தங்கம் விலை குறையும் என்றே எதிர்பார்த்தனர்.

அதிர்ச்சி கொடுத்த தங்கம்
ஆனால், 4வது நாளான இன்றே தங்கம் விலை ட்விஸ்ட் வைத்தது. இன்றைய தினம் காலை, மதியம் என ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்தது. இன்று ஒரே நாளில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 2560 உயர்ந்து, ரூ.1,14,160க்கு விற்பனையாகிறது.
சர்வதேச சந்தையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை கிட்டத்தட்ட 5% வரை உயர்ந்துள்ளது. என்னதான் கடந்த 2 ஆண்டுகளாகத் தங்கம் விலை உயர்ந்தாலும் ஒரே நாளில் 5% உயர்ந்ததே இல்லை. ஆனால், இன்றைய தினம் ஒரே நாளில் 5% வரை தங்கம் எகிறியது. நவம்பர் 2008-க்குப் பிறகு, அதாவது கடந்த 18 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஒரே நாளில் தங்கம் விலை எகிறி இருக்கிறது.
என்ன காரணம்!
இதற்கு என்ன காரணம் என்பதில் பலருக்கும் குழப்பம் இருக்கலாம். தங்கம் விலை குறுகிய காலத்தில் அதிகளவில் சரிந்ததால் இப்போது முதலீடு செய்யலாம் என உள்ளே வந்து சில முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்ததே இதற்குப் பிரதானக் காரணம். அதாவது தங்கம் குறைந்ததால் முதலீட்டாளர்கள் உள்ளே வந்து வாங்க ஆரம்பிக்கவே இப்போது விலை உயர்ந்துள்ளது.

சர்வதேச சந்தை
இந்திய நேரப்படி மாலை 6 மணியளவில் சர்வதேச சந்தையில் ஸ்பாட் தங்கம் ஒரு அவுன்ஸ் $4,903 ஆக 5.1% அதிகரித்து வர்த்தகமானது. நேற்று ஒரு கட்டத்தில் $4,403.24 வரை போன தங்கம் ஒரே நாளில் கிட்டத்தட்ட 500 டாலர் உயர்ந்துள்ளது. இது அதிகபட்சமாகக் கடந்த வாரம் ஒரு அவுன்ஸ் $5,594.82 வரை போனது குறிப்பிடத்தக்கது. அதேபோல ஏப்ரல் மாதத்திற்கான கோல்ட் ப்யூச்சர்ஸ் ஒரு அவுன்ஸ் 6.04% உயர்ந்து, $4,932ஆக உள்ளது..
இது தொடர்பாகப் பிரபல குவானெட்டிவ் கமாடிட்டி நிறுவனத்தின் ஆய்வாளர் பீட்டர் ஃபெர்டிக் கூறுகையில், "அடுத்த அமெரிக்க பெடரல் தலைவராக கெவின் வாஷை நியமிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். இந்த அறிவிப்பே தங்கத்தை முதலீட்டாளர்கள் விற்கக் காரணமாக இருந்தது. அதில் விலை ஓவராக சரிந்துவிட்ட நிலையில், இப்போது மெல்ல அதிகரித்து வருகிறது. இப்போது முதலீட்டாளர்கள் தங்கத்தை வாங்குவதே இதற்கு பிரதான காரணம்" என்றார்.
என்ன நடக்கும்!
வரும் மே மாதம் பெடரல் வங்கி தலைவராகப் போகும் கெவின் வார்ஷ், வட்டியைக் குறைப்பார் என்ற எதிர்பார்ப்பு முதலீட்டாளர்களிடம் இருக்கிறது. ஆனால், அவர் கடந்த காலங்களில் பணவீக்கத்திற்கு எதிராகவும் டாலர் பலமாக இருக்க வேண்டும் என்றும் பேசியுள்ளார். இதற்கான நடவடிக்கையை எடுத்தால் தங்கம் விலை சரியும்.. இதுவே கெவின் பெயர் வந்தவுடன் முதலீட்டாளர்கள் தங்கத்தை விற்றுத் தள்ளக் காரணமாக இருக்கிறது.
இருப்பினும், இந்தச் சரிவு தற்காலிகமாகவே இருக்குமாம். இந்தாண்டு பிற்பகுதியில் தங்கம் விலை உயரலாம் என்றே வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். 5000 டாலர் என்ற மேஜிக் நம்பரையே ஏற்கனவே ஒரு முறை தங்கம் தாண்டிவிட்ட நிலையில், மீண்டும் அதே நிலைக்கு நிச்சயம் போகும் என்று வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.
-
மீண்டும் டிரம்ப் அடித்த பல்டி! "எல்லாம் நல்லா போகுது.. தாக்குதல் கேன்சல்!" உற்று பார்க்கும் ஈரான் -
அடங்காத போர் வெறி.. அமெரிக்க தாக்குதலில் பறிபோன 3 இந்தியர்களின் உயிர்! ஓமனில் அதிர்ச்சி! -
ஈரான் மீது முழு வீச்சில் தாக்குதலை ஆரம்பித்த அமெரிக்கா.. ஹார்முஸ் ஜலசந்தியும் க்ளோஸ்.. ஒரே பதற்றம் -
"ஹார்முஸை நெருங்கினாலே சரமாரி தாக்குதல் நடத்துவோம்.." அச்சுறுத்தும் ஈரான்.. அமைதி ஒப்பந்தம் காலி -
இந்தியர்களுக்கு குட்பை.. அமெரிக்காவிற்கே மூட்டையைக் கட்டிய பிரபல நிறுவனம்.. ஐடி ஊழியர்கள் ஷாக் -
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
"எங்களை ரஷ்ய கச்சா எண்ணெய்யை வாங்க சொன்னதே அமெரிக்கா தான்.." ரகசியத்தை உடைத்த இந்தியா! என்ன நடந்தது -
வாழ வைத்த இந்தியா! 22 வயசுல பெங்களூர் வந்த அமெரிக்கர்.. இன்னைக்கு டாப் கோடீஸ்வரர்! எப்படினு பாருங்க -
படக்குனு 10 கிராம் வாங்கி போடுங்க.. சட்டென மாறிய தங்க சந்தை! 6 மாதத்தில் இல்லாத சரிவு! சரியான நேரமா? -
கோல்டு ETF, வெள்ளி ETF-களில் முதலீடு செய்தவர்கள் கண்ணீர்.. திடீரென சரிவது ஏன்? அடுத்து என்ன செய்ய வேண்டும்? -
Gold Price Today: தடாலடியாக சரிந்த தங்கம் விலை.. 8 நாளில் 8,000 சரிவு.. குஷியில் நகை பிரியர்கள்! இன்றைய ரேட் என்ன?












Click it and Unblock the Notifications