For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

என்ன செய்யப் போகிறார் டொனால்ட் டிரம்ப்- சர்வதேச முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பு

அமெரிக்க சீன வர்த்தக உறவு பற்றி என்ன நிலைப்பாட்டை எடுக்க இருக்கிறார் என்று அனைத்து நாடுகளும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன.

By Super Admin
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அனைத்து சாலைகளும் ரோம் நகரை நோக்கியே - இது புகழ்பெற்ற சொல்லாடல். அதைப்போலவே, இப்போது உலகளாவிய முதலீட்டாளர்களின் காதுகளும் அமெரிக்காவின் புதிய அதிபராக வரும் ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்றுக்கொள்ளும் டொனால்ட் டிரம்ப்பின் வாயசைப்பிற்காக காத்துக் கொண்டிருக்கின்றன.

டிரம்ப் வரும் 20ஆம் தேதி அதிபராக பதவியேற்றுக்கொண்ட உடன் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடக்கவிருக்கிறது. இதில் அமெரிக்க சீன வர்த்தக உறவு பற்றி என்ன நிலைப்பாட்டை எடுக்க இருக்கிறார் என்று அனைத்து நாடுகளும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன.

இரு துருவங்கள்

இரு துருவங்கள்

அமெரிக்காவும் சீனாவும் உலக பொருளாதார சந்தையை ஆட்டி வைக்கும் இரு துருவங்களாகும். எனவே, இந்த இரண்டு நாடுகள் எடுக்கும் எந்த முடிவும் உலகளாவிய அளவில் சர்வதேச பொருளாதாரத்தை ஆட்டம் காண வைக்கும்.

டிரம்ப் நிலைப்பாடு

டிரம்ப் நிலைப்பாடு

இதனால்தான், சர்வதேச முதலீட்டாளர்கள் அனைவரும், சீனாவுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் எந்த மாதிரியான நிலைப்பாட்டை எடுப்பார் என ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.

வர்த்தக நிலைப்பாடு

வர்த்தக நிலைப்பாடு

ஆயினும், அவர் முதலில் நாட்டின் வரி சீர்திருத்தம், மற்றம் உள்கட்டமைப்பு செலவுக்கான திட்டங்களுக்கு முன்னுரிமையும் முக்கியத்துவமும் கொடுப்பார் எனவும் அதனைச் சார்ந்தே அவர் சீனா உடனான வர்த்தக நிலைப்பாட்டை எடுப்பார் என்று ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு வங்கியானது தன்னுடைய முதலீட்டாளர்களுக்கு அறிவுறித்துள்ளது.

பொருளாதார வல்லுநர்கள் கவலை

பொருளாதார வல்லுநர்கள் கவலை

எனவேதான் உலகின் பெரும்பாலான, பொருளாதார வல்லுனர்கள், டிரம்ப்பின் பொருளாதார கொள்கை முடிவு குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.

கவலை

கவலை

குறிப்பாக, டிரம்ப்பின் வர்த்தகம் மற்றும் வெளிநாட்டுக் கொள்கைகள், சர்வதேச அளவில் பொருளாதார வளர்ச்சிக்கு நிச்சயமாக பெரும் அச்சுறுத்தலாகவும், சீனா மற்றும் மெக்ஸிகோவுடன் வர்த்தக போராகவும் இருக்கலாம் எனவும் பிரபல காமர்ஸ் வங்கியின் நாணய மதிப்பீட்டாளர் தூ.லான்.நிகுயான் கவலை தெரிவித்துள்ளார்.

English summary
Trump, who takes office on January 20, has said he will hold a news conference on Wednesday.Some analysts are concerned about the broad economic and political impacts of Trump's relations with the rest of the world.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X